துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்திலேயே இருந்தனர். சுமார் 90 நிமிடங்கள் கழித்தே பரிசளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்திய வீரர்கள் சிலரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மனைவி மற்றும் மகள்கள் மைதானத்தில் இருந்தனர், அனைவரும் நல்ல உற்சாகத்தில் இருந்தனர். அதேவேளையில் ஓய்வறை சென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னரே மைதானத்துக்குள் வந்தனர். ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும், தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் அதனை பெற்றுக்கொண்டனர். இந்திய வீரர்கள் பதக்கங்களைப் பெற்ற…
Author: admin
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், இந்தப் படம் தயாராகிறது” என படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதன்படி இந்தப் படத்துக்குப் பிரபல ஜப்பானிய-பிரிட்டீஷ் நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான ஹோகுடோ கோனிஷி பணியாற்றியுள்ளார். அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், “இந்தியத் திரைப்படத் துறை பற்றி ஆர்வம் கொண்டிருந்தேன். அதில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் பற்றி தற்போது அதிகம் பேச முடியாது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் இந்தப் படத்துக்காகக் கடின உழைப்பையும் அதிக நேரத்தையும்…
சென்னை: வேதனைக்குரிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். நெரிசல் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஸ்டா லின் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி, நடக்கக்கூடாத துயரம். மருத்துவமனையில் நான் பார்த்த காட்சிகள் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள் என்று…
உங்கள் வீட்டில் ஏராளமான கோப்வெப்களை நீங்கள் கவனித்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை. இந்த தூசி நிறைந்த, கைவிடப்பட்ட சிலந்தி வலைகள் பெரும்பாலும் மூலைகள், அறைகள் மற்றும் அடித்தளங்களில் தோன்றும், வீட்டு உரிமையாளர்கள் தங்கள் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் குறித்து ஆர்வமாக உள்ளனர். கோப்வெப்கள் அடிப்படையில் பழைய, பயன்படுத்தப்படாத சிலந்தி வலைகள், அவை காலப்போக்கில் தூசி மற்றும் குப்பைகளை சேகரித்தன. அவை புறக்கணிப்பின் அறிகுறிகள் போல் தோன்றினாலும், அவை உண்மையில் உங்கள் வீட்டின் சூழல் மற்றும் சாத்தியமான பூச்சி பிரச்சினைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும்.கோப்வெப்கள் ஏன் உருவாகின்றன என்பதையும் அவை குறிப்பிடுவதையும் புரிந்துகொள்வது தூய்மையான, ஆரோக்கியமான வாழ்க்கை இடத்தை பராமரிக்க உதவும். இந்த கட்டுரையில், கோப்வெப் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள், அவற்றைப் பார்க்கும்போது அவை என்ன அர்த்தம், அவற்றை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது மற்றும் தடுப்பது என்பதை ஆராய்வோம். நீங்கள் ஒரு சில தவறான வலைகள் அல்லது தொடர்ச்சியான…
குவாஹாட்டி: 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது. 12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. இந்தியாவில் 4 நகரங்களிலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.123 கோடியாகும். 47 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாத ஏக்கத்துக்கு இம்முறை இந்திய அணி தீர்வுகாண முயற்சிக்கக்கூடும். இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ்,…
தென்னிந்திய சினிமாவில் 1950- மற்றும் 1960-களில் நன்றாக அறியப்பட்ட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் வி.எஸ்.ராகவன். (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல). ஏவி.எம் ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிவாஜி கணேசன், பானுமதி நடித்த ‘கள்வனின் காதலி’ (1955), சாரங்கதாரா (1958), டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி நடித்த ‘மணிமேகலை’(1959) ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தனது ரேவதி புரொடக்ஷன்ஸ் மூலம் ‘மனிதனும் மிருகமும்’ (1953), ‘மேதாவிகள்’ (1955) ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளத்தில் இயக்கிய படம், ‘சந்திரா’. தொழிலதிபரான ஜனார்த்தனனின் மகள் சந்திரிகா, அவர்கள் வீட்டுச் சமையல்காரப் பெண்ணின் மகன் கோபியை காதலிக்கிறார். அந்த காதல் சரியாக வராது என நினைத்து விலகுகிறான் கோபி. ஜனார்த்தனனுக்கு தன் மகளின் காதல் கதை தெரிகிறது. கோபியைத் தனது நிறுவனத்தில் இருந்தும் அவர் அம்மாவை வீட்டில் இருந்தும் விரட்டுகிறார். தனது மருமகனுக்குச் சந்திரிகாவைத் திருமணம் செய்து கொடுக்கத் திட்டமிடுகிறார். இதற்கிடையே தன்னை உங்களுடன்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரேநாளில் இருமுறை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ரூ.86,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம், செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன் பிறகு, இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. குறிப்பாக, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.85,120 ஆக இருந்தது.…
ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்தை பராமரிக்க வைட்டமின்கள் அவசியம். அவை சுருக்கங்களை உருவாக்குவதைத் தடுக்கவும், நீரேற்றத்தை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் தொனியை மேம்படுத்தவும் உதவுகின்றன. உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் உணவு ஆதாரங்கள் மற்றும் மேற்பூச்சு சூத்திரங்கள் இரண்டையும் இணைப்பதன் மூலம், குறிப்பிட்ட கவலைகளை வெளிப்புறமாக நிவர்த்தி செய்யும் போது உங்கள் சருமத்தை உள்ளே வளர்க்கலாம். ஒவ்வொரு வைட்டமின் ஒரு தனித்துவமான பாத்திரத்தை வகிக்கிறது: சில கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகின்றன, மற்றவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன, அதே நேரத்தில் சில வைட்டமின்கள் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதையும், வீக்கத்தை ஆற்றவும் செய்கின்றன. இந்த செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது தகவலறிந்த தேர்வுகளைச் செய்யவும், உங்கள் தோல் பராமரிப்பு விதிமுறைகளை மேம்படுத்தவும், ஒரு கதிரியக்க, இளமை மற்றும் நெகிழக்கூடிய நிறத்தை அடையவும் உங்களுக்கு உதவுகிறது.தோல் பராமரிப்பில் வைட்டமின்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதுதோல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அவசியம், ஏனெனில் அவை கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கின்றன, இது தோல்…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை ஹனுமன் வாகனத்தில் மலையப்பர், கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த வாகன சேவையில், 20 மாநிலங்களுக்கும் மேலான நடனக் கலைஞர்கள் பங்கேற்று மாட வீதிகளில் நடனமாடினர். ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வாரி சேவகர்கள், அர்ச்சகர்கள், திரளான பொதுமக்கள் ஹனுமன் வாகன சேவையில் பங்கேற்றனர். தங்க ரதத்தில் உற்சவர்கள் பவனி: ஹனுமன் வாகனத்தை தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க ரதத்தில் எழுந்தருளினார். இந்த ரதத்தை பெண்கள் வடம் பிடித்து…
சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையர் அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த அ.ஜான் லூயிஸ், ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை இணை செயலர் க.கற்பகம், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
