Author: admin

சென்னை: ஓய்வுக்கால பலன்களை வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சென்னை வடபழனி உள்பட பல்வேறு பணிமனைகளில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சார்பில், தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அயனாவரம், வடபழனி உள்பட அனைத்து பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் 43-வது நாளாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, வடபழனி உள்பட சில பணிமனையில் வாயில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநகர போக்குவரத்துக் கழக பிரிவு தலைவர் துரை, பொதுச்செயலாளர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இது குறித்து, போக்குவரத்து…

Read More

மிருதுவான கங்கால் ஒன்றாக சிக்கிய கண் இமைகள் வரை நீங்கள் எப்போதாவது எழுந்திருக்கிறீர்களா? அந்த “ஸ்லீப் க்ரஸ்ட்” அல்லது “கண் கன்” என்பது ஒரு எரிச்சலை விட அதிகம்; இது உங்கள் கண்கள் ‘ஒரே இரவில் தூய்மைப்படுத்தும் குழுவினர். காலையில் ஒரு சிறிய அளவு மேலோடு மிகவும் சாதாரணமானது என்றாலும், அது கனமான, நிறமாற்றம் அல்லது விடாமுயற்சியுடன் மாறும் போது, ​​அது மிகவும் தீவிரமான ஒன்றைக் குறிக்கலாம்.விஞ்ஞான ரீதியாக வாதம் என்று அழைக்கப்படுகிறது, இந்த சளி, எண்ணெய்கள், கண்ணீர் மற்றும் தோல் செல்கள் நீங்கள் தூங்கும்போது குவிகின்றன, ஏனெனில் ஒளிரும் (இது கண்களை சுத்தம் செய்கிறது) இரவில் நிறுத்தப்படும். அமெரிக்கன் அகாடமி ஆஃப் கண் மருத்துவத்தின் ஒரு ஆய்வு ஆரோக்கியமான கண்களில் வழக்கமான காலை மேலோடு பொதுவானது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் அதிகப்படியான மேலோடு அல்லது ஒட்டும் வெளியேற்றம் பிளெஃபாரிடிஸ், தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்கள் அல்லது கான்ஜுன்க்டிவிடிஸ் போன்ற நிலைமைகளை நோக்கி…

Read More

சென்னை: ‘கரூர் துயர சம்பவத்துக்காக தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்துக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார். இது குறித்து அன்பில் மகேஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரிகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சுக் குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்! முதல்வர் ஸ்டாலின் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம், ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின்…

Read More

சிறுநீரகங்கள் கடிகாரத்தைச் சுற்றி அமைதியாக வேலை செய்கின்றன, இரத்தத்தை சுத்தம் செய்கின்றன, திரவங்களை சமநிலைப்படுத்துகின்றன, கழிவுகளை அகற்றுகின்றன. ஆனால் மற்ற உறுப்புகளைப் போலல்லாமல், சிறுநீரகங்கள் தோல்வியடையத் தொடங்கும் போது, ​​அறிகுறிகள் பொதுவாக நுட்பமானவை, கூச்சலிடுவதற்கு பதிலாக கிட்டத்தட்ட கிசுகிசுக்கின்றன. ஒரு அறிக்கையின்படி, நாள்பட்ட சிறுநீரக நோய் உலக மக்கள்தொகையில் 10% ஐ பாதிக்கிறது. இதனால்தான் சிறுநீரக சேதம் அல்லது நெஃப்ரோசிஸின் ஆரம்பம் (புரத கசிவு மற்றும் வீக்கத்தால் குறிக்கப்பட்ட சிறுநீரக கோளாறு) அது முன்னேறும் வரை கவனிக்கப்படாமல் போகலாம். ஆரம்ப சமிக்ஞைகளைக் கண்டறிவது சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் கவனிப்புக்கு உதவக்கூடும்.

Read More

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின. இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 4 பெண்​கள் பிரஜ்வலுக்கு எதி​ராக புகார் அளித்​தனர். அதன்​பேரில் அவர் மீது 5 பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. பிரஜ்வல் ரேவண்ணாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்த்தது. ‘‘இவ்​வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் அரசு தரப்​பால் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்கப்​பட்​டுள்​ளன.…

Read More

சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு துயரத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோதான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது’ என முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டுக்கு வாய்த்திருக்கும் முதல்வர், எப்படிப்பட்ட பொம்மை முதல்வர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி. நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதேசமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன். அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே. என்ன அவதூறு பரவியது?. உங்கள் கட்சிக்காரர்கள், ‘தமிழ்நாடு மாணவர் சங்கம்’ என்ற பெயரில் போஸ்டர்…

Read More

ஒற்றைத் தலைவலியை விட ஒற்றைத் தலைவலி அதிகம் – அவை ஒரு நரம்பியல் நிலை, அவை தீவிரமான, துடிக்கும் வலி மற்றும் பலவீனமான அறிகுறிகளைக் கொண்டுவரும். மருந்துகள் ஒரு முதன்மை சிகிச்சை விருப்பமாக இருக்கும்போது, ​​அக்குபிரஷர் போன்ற நிரப்பு சிகிச்சைகள் நிவாரணம் வழங்குவதற்கான திறனுக்காக கவனத்தை ஈர்த்து வருகின்றன. உடலில் குறிப்பிட்ட அழுத்த புள்ளிகளை குறிவைப்பதன் மூலம், அக்ரஸ்யூர் ஒற்றைத் தலைவலி அறிகுறிகளைக் குறைக்கவும், ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்.ஒற்றைத் தலைவலிக்கான அக்குபிரஷர் பின்னால் உள்ள அறிவியலை ஆராயுங்கள், முக்கிய அழுத்த புள்ளிகளை எடுத்துக்காட்டுகிறது, மேலும் வீட்டில் சுய நிர்வகிக்கும் சிகிச்சைக்கான நடைமுறை வழிகாட்டுதலை வழங்குகிறது.அக்குபிரஷர் மற்றும் ஒற்றைத் தலைவலி நிவாரணத்துடன் அதன் தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதுஅக்குபிரஷர் என்பது பண்டைய சீன மருத்துவத்தில் வேரூன்றிய ஒரு பாரம்பரிய சிகிச்சையாகும், இது குத்தூசி மருத்துவத்தைப் போன்றது, ஆனால் ஊசிகள் இல்லாமல். இரண்டு சிகிச்சைகளும் தோலுக்கு அடியில் உணர்ச்சி நரம்புகளைத்…

Read More

புதுடெல்லி: ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய அவர், “ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தம் நாளை மறுநாள் (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆர்வமுடன் உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நியூசிலாந்து, ஓமன், பெரு, சிலி ஆகிய நாடுகளுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல்…

Read More

சென்னை: கரூர் சம்பவத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது. இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும்…

Read More

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்ட மதிப்பீடு தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. திட்டத்துக்கான ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஜூலையில் திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து ஒப்புதல் அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக…

Read More