Author: admin

‘லியோ’ விமர்சனத்தால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானதற்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே வேளையில் இப்படத்தில் இடம்பெற்ற ஃப்ளாஷ்பேக் காட்சி பெரும் விமர்சனத்தை ஈட்டியது. இது தொடர்பாக பலரும் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். தற்போது ‘லியோ’ ஃப்ளாஷ்பேக் விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “லியோ படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிக்கான விமர்சனம் என்னை ரொம்பவே பாதித்ததாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், அது என்னை பாதிக்கவில்லை. அது எனக்கு கொடுக்கப்பட்ட விழிப்புணர்வாக எடுத்துக் கொண்டேன். அவ்வளவு தான். ‘லியோ’ ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒரு தொய்வு இருந்தது. அதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன். அது இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த 20 நிமிடக் காட்சிகள் படத்தின் வியாபாரத்தையோ…

Read More

சென்னை: தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாகராஜன் வெளி​யிட்ட அறிக்கை: இது​வரை ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தமிழ் இணை​யக் கல்விக்​கழகத்​தின் பல்​வேறு பாடத்​திட்​டங்​களில் சேர்ந்து பயின்று வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தி​யான சான்​றிதழ் படிப்​பு​களில் 18,968 மாணவர்​கள் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். அதே​போல், தமிழியல் தொடர்​பான பட்​டயப்​படிப்​பில் 2,679 பேர், மேற்​பட்​டயப் படிப்​பில் 2,151 பேர், பட்​டப்​படிப்​பில் 1,906 பேர் தேர்ச்சி அடைந்​துள்​ளனர். அயலக மாணவர்​களுக்​குக் கற்​பிப்​ப​தற்​கான தமிழ் ஆசிரியர் பட்டய பயிற்​சி​யில் 200-க்​கும் மேற்​பட்ட தன்​னார்​வலர்​கள் சேர்ந்​துள்​ளனர். தமிழ் மொழியை 2-ம் அல்​லது 3-ம் மொழி​யாக பயிலும் அயல​கத் தமிழர்​களுக்கு பயிற்​று​விக்க தமிழ் பரப்​புரைக் கழகம் உரு​வாக்​கப்​பட்​டு, 2022-23, 2023-24-ம் ஆண்​டு​களுக்கு ரூ.2 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. கடந்த 2021-ம் ஆண்​டில் 19 நாடு​களில் 110 தொடர்பு மையங்​களு​டன் செயல்​பட்ட தமிழ் இணை​யக் கல்விக்​கழகம், தற்​போது 39 நாடு​களில் 189 மையங்​களு​டன் செயல்​பட்டு வரு​கிறது.…

Read More

இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாAXIOM-4 (AX-4) மிஷனுடன் பணிபுரிந்தவர், தனது விண்வெளி பயிற்சியின் ஒரு முக்கியமான பகுதியை முடித்துவிட்டார், இதில் உயர பயிற்சிகள் இருந்தன. இந்த உருவகப்படுத்துதல்கள், விண்வெளியின் குறைந்த அழுத்த சூழலைப் பிரதிபலிக்கும் வகையில், விண்வெளி வீரர்களை தீவிர நிலைமைகளில் வேலை செய்யவும், அழுத்தத்தின் கீழ் செய்யவும் அவசியம். பயிற்சியில் திடீர் அழுத்த மாறுபாடுகள், குறைந்த ஆக்ஸிஜன் சூழல்கள் மற்றும் அவசர உருவகப்படுத்துதல் பயிற்சி ஆகியவை அடங்கும், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு விண்வெளி வீரர்களைத் தயாரித்தல். சுக்லாவின் பயிற்சி இந்தியாவின் காகன்யான் பணிக்கும் உதவுகிறது, இது தனியார் மற்றும் தேசியத்தில் ஒரு பெரிய மைல்கல்லைக் குறிக்கிறது விண்வெளி ஆய்வு நடவடிக்கைகள்.இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) ஒரு பணியை மேற்கொள்ள உள்ளார், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து மே 29, 2025 அன்று இந்த ஏவுதளத்தில்…

Read More

புதுடெல்லி: பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என தெரிவித்த இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, அதன் காரணமாகவே இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அறிவித்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக முப்படைகளின் டிஜிஎம்ஓக்கள் (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள்) இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்த ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, “ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்றைய இரவு பெரும்பாலும் அமைதியாக இருந்தது. சமீபத்திய நாட்களில் முதல் அமைதியான இரவு இது என கூறலாம். அந்த அளவுக்கு எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை. மே 7 ஆம் தேதி இந்தியா, பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில், ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது. இருப்பினும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு…

Read More

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று காலை அறிவித்தார். இந்நிலையில், அது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா. “எல்லோரும் உங்களின் சாதனைகள் மற்றும் மைல்கல்கள் குறித்துதான் பேசுவார்கள். ஆனால், யாரும் காணாத உங்களது போராட்டங்கள், வெளிக்காட்டாத உங்களது கண்ணீர், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள நேசத்தையும் நான் அறிவேன். அது என் நினைவில் உள்ளது. ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் நீங்கள் பக்குவமடைந்தீர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் வெள்ளை சீருடையில்தான் ஓய்வு பெறுவீர்கள் என நான் கற்பனை செய்தது உண்டு. ஆனால், நீங்கள் எப்போதும் உங்கள் மனம் சொல்வதை செய்வீர்கள்” என அந்த பதிவில் அனுஷ்கா கூறியுள்ளார். 2011 முதல் 2025 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிங்க நடை போட்டவர் கோலி. சவாலான ஆடுகளம், சவாலான கள சூழல்,…

Read More

கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது ‘துடரும்’. ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது. தற்போது கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதுவரை கேரளாவில் மட்டும் ரூ.90 கோடி வசூலைக் கடந்திருக்கிறது ‘துடரும்’. ஒரே ஆண்டில் ’எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ என்ற இரண்டு மாபெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் மோகன்லால். மேலும், உலகளவில் ரூ.200 கோடி வசூலை ‘துடரும்’ கடந்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. கேரளா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் குறையவே இல்லை. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே பல மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. இன்றைய வசூலை கணக்கிட்டால் கண்டிப்பாக கேரளாவில் மட்டும் ரூ.100 கோடி…

Read More

மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், சாலையோரம் இறந்த நிலையில் கிடந்தவர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (65) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிநாதனை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, அனைத்து…

Read More

டாக்டர் ஜி ஜோ என அழைக்கப்படும் டாக்டர் ஜோசப் சல்ஹாப், ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்க பல தின்பண்டங்களை பரிந்துரைக்கிறார். அவரது பரிந்துரைகளில் தர்பூசணி கொண்ட சுண்ணாம்பு, வெண்ணெய் பழத்துடன் புளிப்பு, இனிப்பு உருளைக்கிழங்குடன் கிம்ச்சி மற்றும் பாதாம் பருப்புடன் அக்ரூட் பருப்புகள் ஆகியவை அடங்கும். பெர்ரிகளுடன் டார்க் சாக்லேட், கிரேக்க தயிர் கொண்ட கிவி மற்றும் இலவங்கப்பட்டை கொண்ட ஆப்பிள்களையும் அவர் பரிந்துரைக்கிறார், இவை அனைத்தும் ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோபயாடிக்குகள் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. கல்லீரல் நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 3 பவுண்டுகள் எடையுள்ள இந்த உறுப்பு, புரதங்களின் செரிமானம், கனிம சேமிப்பு, பித்த உற்பத்தி மற்றும் இரத்த வடிகட்டுதல் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட செயல்பாடுகளைச் செய்கிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு கல்லீரல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ஜோசப்…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்: மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது. இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70…

Read More

சென்னை: மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் ஜூன் 16-ம் தேதி கடைசி நாளாகும். மத்திய மீன்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய கடல்சார் மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (சிப்நெட்) சார்பில், 2025-27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மரைன் ஃபிட்டர், வெசல் நேவிகேட்டர் ஆகிய இரு பயிற்சிகள் இந்நிறுவனத்தில் அளிக்கப்படும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் தலா 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 2025 ஆக.1-ம் தேதியன்று 15 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.350. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175. சென்னை, ராயபுரத்தில் உள்ள சிப்நெட் நிறுவனத்தில் இப்பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது ரூ.1,500 அரசு…

Read More