ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ‘ஏழு கடல் ஏழு மழை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். அதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துக்காக ‘பறந்து போ’ என்ற காமெடி படத்தினை இயக்கினார். தற்போது இதன் பணிகள் முடிந்துவிட்டதால், ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையினை யுவன் மேற்கொண்டுள்ளார். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து ராம் இயக்கியுள்ளார். இதன் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி ஜூலை 4-ம் தேதி வெளியிடுகிறது. ‘பறந்து போ’ வெளியீட்டுக்குப் பின் நிவின் பாலி, சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ வெளியாகும் என கூறப்படுகிறது. We are sure he…
Author: admin
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து கோவை மகளிர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ல் தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 2019 பிப்ரவரியில் அம்பலத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் வலுவான போராட்டங்களை நடத்திய பின்புலத்தில் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. செல்போனில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் பதிவு செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் குழுக்களில் அவை பகிரப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.…
புதுடெல்லி: அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இதனை இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா, இந்தியா, கனடா உள்பட பல்வேறு நாடுகள் அதிக இறக்குமதியை விதிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அமல்படுத்தப் போவதாகவும் ட்ரம்ப் கூறினார். அதன்படி, சீனா, இந்தியா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் என பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. எனினும், அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள நாடுகள் முன்வந்ததை அடுத்து, வரி வகிதம் சராசரியாக 10% ஆக குறைக்கப்பட்டது. அதேநேரத்தில், சீனாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிக்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வரி விகிதத்தை மேலும் அதிகரித்தது அமெரிக்கா. பதிலுக்கு சீனாவும்,…
“ஆண்மையுள்ள ஒருவன் ஒருபோதும் கலவரமான உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியைத் தரும் பெண்ணை நோக்கியே செல்லும்” என்று ரவி மோகனுடன் தான் இருக்கும் புகைப்படங்கள் பற்றிய சர்ச்சை குறித்து சூசகமாக ஒரு விளகத்தை கொடுத்துள்ளார் பாடகி கெனிஷா. ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணமே பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆர்த்தி ரவி. இதற்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனிடையே, யாரையும் குறிப்பிடாமல் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் பதிவொன்றை வெளியிட்டார். அதில் “ஆண்மையுள்ள ஒருவன் ஒருபோதும் கலவரமான உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது…
சென்னை: “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது,” என்று அதிமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வமான எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக…
டச்சு விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சியின் படி, யுனிவர்ஸ் முன்னர் நினைத்ததை விட மிக வேகமாக இறக்க தயாராக உள்ளது.ஆனால் பீதியடைய பெரிய தேவை இல்லை. இது நடப்பதற்கு 78 ஆண்டுகளுக்கு முன்பே 10 பேர் இன்னும் 10 பேர் உள்ளனர், அது 78 பூஜ்ஜியங்களைக் கொண்ட ஒன்றாகும்.இருப்பினும், இது முந்தைய மதிப்பீட்டிலிருந்து 10 இன் 1,100 ஆண்டுகளின் சக்திக்கு ஒரு பெரிய திருத்தமாகும் என்று ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது, இது ஜர்னல் ஆஃப் காஸ்மாலஜி மற்றும் ஆஸ்ட்ரோபார்டிகல் இயற்பியல் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது.”இறுதி பிரபஞ்சத்தின் முடிவு எதிர்பார்த்ததை விட மிக விரைவாக வருகிறது, ஆனால் அதிர்ஷ்டவசமாக இது இன்னும் நீண்ட நேரம் எடுக்கும் “என்று முன்னணி எழுத்தாளர் ஹினோ ஃபால்கே கூறினார்.ராட்பவுட்டில் உள்ள விஞ்ஞானிகளின் மூவரும் மிகவும் “நீடித்த” வான உடல்கள் இருக்கும்போது கணக்கிடத் தொடங்கினர், வெள்ளை குள்ள நட்சத்திரங்கள் இறுதியில் இறந்துவிடும்.அவர்கள் தங்கள் கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளனர் ஹாக்கிங்…
‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் படம் ‘பென்ஸ்’. இதன் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. தற்போது சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் ராகவா லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘பென்ஸ்’ படத்தை தயாரிக்கின்றன. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் இணைகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் லாரன்ஸ் உடன் நிவின் பாலி மற்றும் மாதவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதில் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜின் கதைக்கு, திரைக்கதை – வசனம் எழுதி இயக்குகிறார் பாக்கியராஜ் கண்ணன். ஒளிப்பதிவாளராக கெளதம் ஜார்ஜ், இசையமைப்பாளராக சாய் அபயங்கர், எடிட்டராக பிலோமின் ராஜ், சண்டை பயிற்சியாளராக அனல் அரசு ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு…
இஸ்லாமாபாத்: மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர…
சென்னை: “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். | விரிவாக வாசிக்க > பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்…