சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அக்.28-ம் தேதி்க்கு ஒத்திவைக்கப்படுவதாக, டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தலைவர் பெரியசாமி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி தேசிய செயலாளர் மூர்த்தி, டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்தராஜன் மற்றம் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அக்.2 ம் தேதி தலைமைச் செயலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் மற்றும் விதிப்படி பணி செய்யும் இயக்கத்தை அறிவித்திருந்தது. கடந்த 26ம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், அமைச்சர் முத்துசாமி சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசி தீர்வு காணலாம் என தெரிவித்தார். அமைச்சருடன் பேசி தீர்வு…
Author: admin
புதுடெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாக தொடர்கிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5 சதவீதமாகவே தொடர முடிவு எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதன் மூலம் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். குறைந்து வரும் ரெப்போ விகிதம்: கடந்த சில ஆண்டுகளாக ரெப்போ விகிதம் 6.50% ஆக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 0.25% குறைக்கப்பட்டு, 6.25% ஆக இருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் (ஏப்ரல்) அது மேலும் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 6% ஆக மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 0.50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு ரெப்போ…
உடலில் அதிகரித்த யூரிக் அமில அளவு மருத்துவ ரீதியாக ஹைப்பர்யூரிசீமியா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது பெரும்பாலும் ஆரம்ப கட்டங்களில் கவனிக்கப்படாமல் போகலாம். இருப்பினும், நிலைகள் நீண்ட காலத்திற்கு உயர்த்தப்படும்போது, உடல் புலப்படும் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கலாம், குறிப்பாக தோலில். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் கீல்வாதம் எனப்படும் ஒரு நிபந்தனையுடன் தொடர்புடையவை, இது மூட்டுகள் மற்றும் திசுக்களில் யூரிக் அமில படிகங்கள் குவிவதால் விளைகிறது. பலர் உயர் யூரிக் அமிலத்தை மூட்டு வலியுடன் தொடர்புபடுத்துகையில், அதன் வெட்டு அல்லது தோல் தொடர்பான வெளிப்பாடுகளும் முக்கியமான குறிகாட்டிகளாகும்.உடலில் அதிக அளவு யூரிக் அமிலத்துடன் இணைக்கப்பட்ட தோல் அறிகுறிகளை இங்கே ஒரு நெருக்கமான பார்வை இங்கே
அயோத்தி: அயோத்தியின் பிரபல அனுமன்கிரி கோயில் பிரசாதத்தில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகில் பழம்பெரும் அனுமன்கிரி கோயில் உள்ளது. இங்கு அனுமருக்கு பிரசாதமாக நெய்யில் செய்த கடலை மாவு லட்டு படைக்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் மாணிக் சந்திர சிங் ஆய்வு செய்தார். இதில் பிரசாதத்தில் கலக்கப்படும் நெய் தூய்மையானதல்ல என்று தெரியவந்துள்ளது. இதற்காக, உணவுப் பாதுகாப்புத் துறையால் எடுக்கப்பட்ட மூன்று மாதிரிகளில் இரண்டு அதன் தரத்தில் இல்லை எனத் தெரியவந்துள்ளது. அயோத்தியில் பிரசாதங்கள் விற்கும் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கடைகளில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. இக்கடைகளில் விற்கப்படும் ஒரு கிலோ லட்டுகளின் விலை ரூ.450 முதல் ரூ.500 வரை நிர்ணயிக்கப்பட்டது. இது அதிக விலையாக இருந்தபோதிலும் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. அயோத்தியின் பிரபல தனியார் கடை ஒன்றில் பன்னீர் மற்றும்…
கரூர்: “முதல்வர், மற்ற தலைவர்களைப் போல நினைத்து விட்டீர்களா? விஜய் ஒரு ஸ்டார். அவரைப் பார்க்க ஏராளமானோர் வருவார்கள். அதை கணிக்க தவறிவிட்டீர்களா?” என்று தவெக தரப்புக்கு கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ல் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் நகர போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கட்சி நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். இருவரையும்…
பெங்களூரு: எச்1பி விசாவுக்கான புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்டம்பரில் வெளியிட்டார். அதில், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிகரிப்பதாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்) அறிவிப்பு வெளியிட்டார். ஏற்கெனவே 2,000 டாலர் என்பதிலிருந்து 5 ஆயிரம் டாலராக கட்டணத்தை அதிகரித்த ட்ரம்ப் தற்போது பன்மடங்கு உயர்த்தியது திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்தது. இந்த நிலையில், அமெரிக்க செனட் சபையில் இதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ, தயாரிப்பு மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, பகுப்பாய்வு ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்ட உயர்நிலை வேலைகளை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. இது, உலகளாவிய திறன் மையங்களின் (ஜிசிசி) வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 8% பங்களிப்பை 283 பில்லியன் டாலர்…
உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், உலகின் மிகவும் பொதுவான இருதய நோயாகும், இது 1.2 பில்லியனுக்கும் அதிகமான நபர்களில் நிகழ்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளில் உயர் இரத்த அழுத்தம் சிகிச்சைக்கு மருந்து தேவைப்பட்டாலும், உணவு என்பது பாராட்டப்படாத மற்றும் சக்திவாய்ந்த சிகிச்சை முகவர். வாஸ்குலர் அழற்சி, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி மற்றும் தமனி பழுது போன்ற அடிப்படை உயிரியல் வழிமுறைகளின் மட்டத்தில் இயற்கையாகவே செயல்படுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் சில ஊட்டச்சத்துக்களின் செயல்திறனை ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. சில உணவுப் பொருட்களை அவற்றின் நுண்ணூட்டச்சத்து உள்ளடக்கத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதன் மூலம், மருந்து சிகிச்சையின் பொதுவாகக் காணப்பட்ட பாதகமான விளைவுகள் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை மாற்றியமைக்க முடியும். ஆரோக்கிய ஆர்வலரும், சிறந்த விற்பனையான எழுத்தாளருமான டாக்டர் எரிக் பெர்க், இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டிய சில நுண்ணறிவுகளைப் பகிர்ந்து…
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கடந்த மாதம் அவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: எனது வீட்டு பணிப்பெண் போலீஸாரின் தூண்டுதலின்பேரில் என் மீது பாலியல் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட பெண் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை 2024 மே 10-ம் தேதி எனது பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று படுக்கையை காட்டினர். அதில் கறை இருந்ததால் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர். 3 ஆண்டுகளாக கறையிருக்க வாய்ப்பில்லை. எனவே கீழமை நீதிமன்றம்…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகர், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் ரூ.164.92 கோடியில் இரும்பினால் கட்டப்பட்ட ஜெ.அன்பழகன் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் உயரிய தொழில்நுட்பத்துடன் தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 3,800 டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு ரூ.164.92 கோடி செலவில் முதல் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சிஐடி நகர் முதல் பிரதான சாலையில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை – பர்கிட் சாலை – மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை -…
சென்னை: சென்னை மாநகராட்சியில், நடப்பு அரையாண்டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-25-ம் நிதியாண்டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டுக்கான வரி செலுத்துவதற்கு கடைசி நாள் நேற்றுடன் நிறைவடைந்தது. அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து செப்.30-ம் தேதி வரை, சென்னை மாநகராட்சியில் ரூ.930 கோடி வரி வசூலாகி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில், 75 சதவீதம் பேர் இணையம் மூலம் வரி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சியில் தற்போது 13.50 லட்சம் கட்டிடங்கள் சொத்து வரி செலுத்த வேண்டும் என்கிற நிலை இருந்து வருகிறது. இதில், 8 லட்சம் கட்டிடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடப்பு வருவாய் ஆண்டில் ரூ.2,300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
