சென்னை: “நூறுநாள் வேலைத் திட்டம், மெட்ரோ திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டி மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாகவும், நேரிலும், நாடாளுமன்றத்தின் வாயிலாகவும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது தமிழக அரசு. மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது திமுக. ஆனால், தனது சந்திப்பால்தான் நிதி கிடைத்தது என கூசாமல் ‘கிரிஞ்ச்’ (Cringe) செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி” என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு, வெட்கமே இல்லாமல் தான்தான் காரணம் என்று பெருமை பேசுகிறார் பழனிசாமி. உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் பழனிசாமி செய்த கேவலமான சாதனை. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்று அறிந்தவுடன், அவர்களைக் காப்பாற்ற பழனிச்சாமி மேற்கொண்ட…
Author: admin
மாற்று நாசி சுவாசம் என்பது உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்துவதற்கும் மனதை அமைதிப்படுத்துவதற்கும் அறியப்பட்ட ஒரு பிரதான யோகா நுட்பமாகும். இது ஒரு நேரத்தில் ஒரு நாசி வழியாக சுவாசிப்பதை உள்ளடக்குகிறது.அதை எப்படி செய்வது:உங்கள் முதுகெலும்புடன் நேராக வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.உங்கள் வலது கட்டைவிரலைப் பயன்படுத்தி உங்கள் வலது நாசி மூடவும், இடது நாசி வழியாக சுமார் 6 விநாடிகள் மெதுவாக உள்ளிழுக்கவும்.இடது நாசியை உங்கள் மோதிர விரலால் மூடி, 6 விநாடிகள் உங்கள் சுவாசத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்.வலது நாசியைத் திறந்து 6 விநாடிகள் மெதுவாக சுவாசிக்கவும்.வலது நாசி வழியாக 6 விநாடிகள் உள்ளிழுக்கவும்.வலது நாசியை மூடி 6 விநாடிகள் வைத்திருங்கள்.இடது நாசி வழியாக சுவாசிக்கவும்.இந்த சுழற்சியை 5 நிமிடங்கள் மீண்டும் செய்யவும்.இந்த பிராணயாமா மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது, இதனால் தூக்கத்தைத் தூண்டுகிறது
டேராடூன்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி யாத்திரை (மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை) பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தராகண்டின் சித்பாக்கின் சவுர்ய ஸ்தலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த யாத்திரை நடந்தது. ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த யாத்திரையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றனர். இந்த நிகழ்வின்போது, உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு சவுர்ய ஸ்தலத்தில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்பு முதல்வர் தாமி கூறும்போது, “பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா முழு திறன் கொண்டுள்ளது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல் வெளிப்பட்டதோடு மட்டும் இல்லாமல், பயங்கரவாதம் மற்றும் அதனை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு தெளிவான…
நடிகர்களிடம் தயாரிப்பாளர்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நன்றி அறிவிப்பு விழாவில் சசிகுமார் பேசினார். நடிகர்களின் சம்பளம் குறித்த அவரது கருத்து பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சசிகுமார் பேசும்போது, “‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றியடைந்துவிட்டதால் சம்பளத்தை ஏற்றி விடுவீர்களா எனக் கேட்கிறார்கள். கண்டிப்பாக ஏற்ற மாட்டேன். இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டில்தான் எடுக்க வேண்டும். அப்போது தான் அது வெற்றி பெறும். இந்தப் படம் நிறையப் பேரின் கனவை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேண்டாம்; வித்தியாசமான படம் பண்ணலாம்; வேறு மாதிரி ஜானர் படம் பண்ணலாம் என்ற ஒரு…
சென்னை: “வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் தார்மிகக் கடமை” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களின் உரிமையில் நேரடியாக தலையிட்டது. இது இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வகையில், வக்பு என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்பு சொத்துகள் மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…
சமீபத்திய காலங்களில், வெண்ணெய் எண்ணெய் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கான அதன் திறனுக்காக கவனத்தை ஈர்த்துள்ளது மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற கல்லீரல் தொடர்பான நிலைமைகளை நிர்வகிக்க உதவுகிறது. இது ஓலிக் அமிலம், இதயம் மற்றும் கல்லீரல் நட்பு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம். இந்த கொழுப்புகள் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன, இவை இரண்டும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயைத் தடுக்க முக்கியம் (NAFLD). இதில் வைட்டமின் ஈ, கரோட்டினாய்டுகள் மற்றும் தாவர ஸ்டெரோல்கள் ஆகியவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன, இது கல்லீரலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. வெண்ணெய் எண்ணெய் கல்லீரல் கொழுப்பு திரட்டலைக் குறைக்கவும், கல்லீரல் நொதி அளவை மேம்படுத்தவும், கல்லீரல் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும் முடியும் என்று உடல்நலம் மற்றும் நோய்களில் உணவு சப்ளிமெண்ட்ஸ் மற்றும் லிப்பிட்களின் இதழ் கூறுகிறது. எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்முதலில் ஒரு படத்தை எடுக்காமல்…
“திரைப்படங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றி பேச, கடவுள் ஒரு நாள் எனக்கு வாய்ப்பளிப்பார்” என்று நடிகர் திலீப் தனது பேச்சில் உருக்கமாக குறிப்பிட்டார். மலையாளத்தில் நடிகர் திலீப் நடித்து ‘பிரின்ஸ் அண்ட் பேமிலி’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் திலீப் பேசும்போது ‘ராம்லீலா’ மற்றும் ‘பிரின்ஸ் அண்ட் பேமிலி’ ஆகிய படங்களின் வெற்றி தனது சர்ச்சைக்குரிய காலங்களில் உதவியதாக குறிப்பிட்டார். மேலும், தன்னைச் சுற்றி இருக்கும் சர்ச்சைகள் குறித்து திலீப் எதையுமே பேசவில்லை. அதற்கு மாறாக, “கடந்த 8 ஆண்டுகளாக எனது படங்கள் பற்றி மட்டுமே பேசி வருகிறேன். வேறு எதைப் பற்றி பேசவும் எனக்கு சுதந்திரம் இல்லை. ஆனால், ஒரு நாள் கடவுள் எனக்கு பேச வாய்ப்பு தருவார். அந்த நாளுக்காக காத்திருப்பேன். அதுவரை அமைதியாக இருப்பேன்” என்று என்று…
சென்னை: நாட்டின் எல்லைப் பகுதியில் போரிடும் துணை ராணுவப் படையினருக்கு, ராணுவத்தினருக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை முன்னாள் மத்திய ஆயுத காவல்படை மறுவாழ்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வுச் சங்க முதன்மைச் செயலாளர் எஸ்.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்தது. அத்துடன், மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது. மேலும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ராணுவத்துக்கு துணை நிற்போம் எனக்கூறி, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தினார். எல்லையில் ராணுவத்துக்கு உதவியாக எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, சாஸ்த்ரா சீமாபால் ஆகிய துணை…
ஐ.க்யூ சோதனைகள், ஆப்டிகல் மாயை புதிர்கள் மற்றும் ப்ரைண்டீசர்கள் அனைத்தும் உங்கள் அவதானிப்பு, தர்க்கரீதியான மற்றும் விமர்சன சிந்தனை திறன்களைக் கூர்மைப்படுத்த சிறந்த வழிகள். இன்றைய ப்ரைண்டீசரின் நோக்கம் உங்கள் அறிவாற்றல் திறன்களை சவால் செய்வதும், நேர அழுத்தத்தின் போது தவறுகளை எவ்வளவு விரைவாக அடையாளம் காண முடியும் என்பதை மதிப்பிடுவதும் ஆகும்.இந்த மீன்பிடி சிக்கலை தீர்க்க உங்களுக்கு ஐந்து வினாடிகள் இருப்பதால், உங்கள் ஐ.க்யூ மற்றும் விவரங்களுக்கு கவனம் செலுத்தப்படும். இன்றைய பணியைத் தொடங்குவோம்! புதிதாக பிடிபட்ட மீனுடன் படகில் ஒரு நபர் அமர்ந்திருப்பதை படம் காட்டுகிறது.இருப்பினும், இந்த படத்தில் ஒரு பெரிய சிக்கல் உள்ளது. ஆனால் என்ன தவறு என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஐந்து வினாடிகள் உள்ளன! ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாக கவனியுங்கள். ஒதுக்கப்பட்ட நேரத்தில் இந்த புதிரை முடிக்கும் நபர்கள் மிக உயர்ந்த IQ கள் மற்றும் சிறந்த அவதானிப்பு திறன்களைக் கொண்டுள்ளனர்.வாக்கெடுப்புஐந்து விநாடிகளுக்குள் மீன்பிடி படத்தில்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பாலையாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்துக்கு வசூல் ரீதியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, தமிழகத்தில் அதிக வசூல் செய்த அஜித் படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் படத்தையே இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவியது. இதனிடையே, தனது அடுத்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கே இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் வைத்திருந்த கதை ஒன்றை பாலையாவிடம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் – பாலையா கூட்டணி இணைந்து பணிபுரிய இருக்கிறது. பாலையா படம் பேச்சுவார்த்தையில் இருப்பதால், அஜித் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எப்போது தொடங்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.