துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இருப்பினும் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வழங்கப்படவில்லை. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கோப்பையை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி சொல்லி உள்ளதாக பாகிஸ்தான் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. தொடர்ந்து இந்திய அணி வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து பெற முடியாது என தெரிவித்தது. ‘நான்தான் கோப்பையை வழங்குவேன்’ என மோசின் நக்வி தெரிவித்தார். அதை இந்திய அணி ஏற்க மறுத்தது. இதையடுத்து மோசின் நக்வியின் அறிவுறுத்தலின் படி,…
Author: admin
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தோல்வியடைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டு அரசு நிர்வாகம் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக முடங்கியது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசில் செலவீனங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். இந்த நிலையில், நிதி மசோதாவுக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்தனர். நிதி மசோதாவுக்கு 60 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களிக்காத காரணத்தால் இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை சமூக ஊடகங்களில் வெளியிட்ட படத்தில் ‘டெமாகிரட்டிக் ஷட் டவுன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளான விமான சேவை, அறிவியல் ஆராய்ச்சி, ராணுவம் ஆகியவற்றின் பணிகள் தொடர்ந்து இயங்கும். ஆனால், அந்த ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தி…
சென்னை: எண்ணூர் அனல்மின் நிலைய கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் அருகே எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து விழுந்த விபத்தில், வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் மோடி உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த நிலையில், எண்ணூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கட்சி தலைவர்கள், வட மாநில தொழிலாளர்களுக்கு முறையான பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பெல் நிறுவனம் மேற்கொண்டு…
வீக்கம் என்பது ஒரு பொதுவான செரிமான புகார், இது பலர் எளிமையான அஜீரணம் அல்லது அதிகப்படியான உணவு என்று நிராகரிக்கின்றனர். கனமான உணவுக்குப் பிறகு அவ்வப்போது வீங்கியிருப்பது பொதுவாக பாதிப்பில்லாதது, தொடர்ச்சியான அல்லது கடுமையான வீக்கம் கவனம் தேவைப்படும் அடிப்படை சுகாதார சிக்கல்களைக் குறிக்கலாம். எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்), உணவு சகிப்புத்தன்மை, பாக்டீரியா வளர்ச்சியடை அல்லது கட்டிகள் போன்ற நிலைமைகள் முதன்மை அறிகுறியாக வீக்கத்துடன் முன்வைக்கப்படலாம். இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது நோயறிதல் மற்றும் சிகிச்சையை தாமதப்படுத்தும். வீக்கம் வயிற்று வலி, குடல் பழக்கத்தில் மாற்றங்கள் அல்லது விவரிக்கப்படாத எடை இழப்பு ஆகியவற்றுடன் இருந்தால், சிக்கல்களைத் தடுக்க உடனடியாக ஒரு சுகாதார நிபுணரை அணுகுவது அவசியம்.6 எச்சரிக்கை அறிகுறிகள் உங்கள் வீக்கம் அஜீரணத்தை விட அதிகம்மருத்துவ காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் ஹெபடாலஜி ஆகியவற்றில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 88,795 அமெரிக்கர்களிடமிருந்து கணக்கெடுப்பு தரவைப் பயன்படுத்தி வீக்கத்தின் அறிகுறி மற்றும் சுகாதாரத் தேடும் சுமையை…
41 உயிர்களை துள்ளத் துடிக்க பறித்த ஒரு தேசிய துயரம், ஆதாயம் தேடும் சில அரசியல் கட்சிகளால் அதன் பாதையிலிருந்து மெல்ல விலகி, முழுக்க முழுக்க அரசியலாக்கப்பட்டு வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. கரூர் சம்பவத்திற்கு தார்மிக பொறுப்பேற்று களத்தில் நின்று கஷ்டத்தைப் போக்க வேண்டிய தவெக, சதி என பழியை ஆளும் கட்சி மீது போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறது. இதன் மூலம், தங்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் திமுக தான் என்பது போல் அரசியல் அனுதாபம் தேடவே பார்க்கிறது தவெக. அதேசமயம், தங்களை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்க்கு தக்க பதிலடி கொடுக்க காத்துக் கொண்டிருந்த திமுக, இந்தச் சம்பவத்தில் யாரும் அரசியல் அனுதாபம் தேடிவிடக் கூடாது என்பதற்காக சில உடனடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. கரூருக்கு மறுநாள் காலையில் வருவார் என்று சொல்லப்பட்ட முதல்வர் நள்ளிரவே கரூருக்குப் புறப்பட்டு, ஆகவேண்டிய காரியங்களை முடுக்கிவிட்டார். அதையெல்லாம் சொல்ல மனமில்லாதவர்கள்,…
கீரை, அல்லது பாலக், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். இது மிகவும் விரும்பப்பட்ட காய்கறி, இது பெரும்பாலும் ஒரு சப்ஜி அல்லது சூப்பாக மகிழ்விக்கிறது. இருப்பினும், கீரையில் அதிகப்படியான ஆக்சலேட்டுகள் கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்களை உருவாக்குவதற்கான அபாயத்தை உருவாக்குகின்றன, ஏனெனில் இந்த கலவைகள் சிறுநீர் கால்சியத்துடன் இணைத்து கற்களை உருவாக்குகின்றன. சிறுநீரக கற்களைக் கொண்டவர்கள் மூல அல்லது சமைத்த கீரையின் பெரிய பகுதிகளை உட்கொள்ளும்போது கல் வளர்ச்சிக்கான உயர்ந்த அபாயத்தை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் இது அவர்களின் சிறுநீர் ஆக்சலேட் செறிவை அதிகரிக்கிறது. மக்கள் தங்கள் கீரை நுகர்வு மட்டுப்படுத்த வேண்டும், ஏனென்றால் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மனித உடலில் ஆக்சலேட் உறிஞ்சுதலைத் தடுக்க உதவுகிறது.
சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் நேற்று பூஜைப் பொருட்களை வாங்குவதற்காக திரண்ட பொதுமக்களால் கடைவீதிகள் மற்றும் முக்கிய சந்தைகள் களைகட்டின. நாடு முழுவதும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சந்தைகள் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. குறிப்பாக, ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் அக்.5-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறுகிறது. இதில் பொறி, கடலை, வாழைப்பழம், இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்ய தனியாக ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் அமோகமாக விற்பனை நடைபெற்றது. அதேநேரம், பொருட்கள் மற்றும் பூக்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்திருந்தது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.600-ல் இருந்து 800-ஆகவும், முல்லை 500-ல் இருந்து ரூ.700-ஆகவும், கனகாம்பரம் 400-ல் இருந்து 800-ஆகவும், அரளி பூ ரூ.200-ல் இருந்து 350-ஆகவும், சாமந்தி ரூ.100-ல் இருந்து 180-ஆகவும், சம்மங்கி…
நத்தைகள் வீட்டுத் தோட்டங்களில் மிகவும் தொடர்ச்சியான மற்றும் சேதப்படுத்தும் பூச்சிகளில் ஒன்றாகும், மென்மையான இலைகள், நாற்றுகள் மற்றும் மென்மையான பழங்களுக்கு உணவளித்தல், துளைகள் மற்றும் மெலிதான பாதைகளை அவற்றின் எழுச்சியில் விட்டுவிடுகின்றன. வேதியியல் ஸ்லக் துகள்கள் விரைவான கட்டுப்பாட்டை வழங்க முடியும் என்றாலும், அவை செல்லப்பிராணிகள், நன்மை பயக்கும் பூச்சிகள் மற்றும் பரந்த சூழலுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அதிர்ஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தாமல் நத்தைகளை நிர்வகிக்க பயனுள்ள, இயற்கை முறைகள் உள்ளன. நத்தைகள் ஏன் தோட்டங்களை ஆக்கிரமிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், தடுப்பு உத்திகளை செயல்படுத்துதல் மற்றும் நச்சுத்தன்மையற்ற அகற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம், தோட்டக்காரர்கள் தங்கள் தாவரங்களை பாதுகாக்கலாம், பல்லுயிரியலைப் பாதுகாக்கலாம் மற்றும் ஆரோக்கியமான தோட்ட சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிக்கலாம். இந்த வழிகாட்டி நத்தைகளை இயற்கையாகவே கட்டுப்படுத்த பாதுகாப்பான வழிகளை ஆராய்கிறது.நத்தைகள் ஏன் ஒரு பிரச்சினைநத்தைகள் இரவு நேர தாவரவகைகள், அதாவது அவை இரவில் மிகவும்…
பெங்களூரு: உடல்நலக்குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி, “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) காய்ச்சல் ஏற்பட்டு கால் வலி இருப்பதாக சொல்லப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளார், மருத்துவர்கள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்வளம் தொடர்பான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் மட்டுமல்லா மல் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங் கள் என்று பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் பாடப்பிரிவுகளில் சேருவதில் ஆர்வத்துடன் இருக்கும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய படிப்புகளில் மீன்வளப் படிப்புகளும் முக்கியமானவை. என்ன படிக்கலாம்? – தமிழ்நாட்டில் பிஎப்எஸ்சி நான்கு ஆண்டுப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதப் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். அல்லது இயற்பியல், வேதி யியல், உயிரியல் பாடங்களுடன் பயோ டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், வேளாண்மை, தோட்டக்கலை, இன்ஃபர்மேட்டிக்ஸ் பிராக்டிசஸ், என்விரான்மென்டல் பிராக்டிசஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடத்தை எடுத்துப் படித்தவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். பி.டெக். ஃபிஷரீஸ்…
