மதுரை: விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. தவெக கூட்டத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜயும் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, “விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. 2010-ல் மதுரை பாண்டிக்கோயிலில் ஒரு அதிமுக கூட்டம் நடந்தது. இரண்டரை லட்சம் மக்கள் திரண்டார்கள். சாலை முழுக்க மக்கள் கூட்டம். அதில் ஜெயலலிதா விமான நிலையத்திலிருந்து மாநாட்டு திடலுக்கு வரவே இரண்டரை மணிநேரம் ஆனது. அப்போதெல்லாம் கட்டுக்கோப்பாக நடத்தினோம். ஆனால், கரூரில் 25 ஆயிரம் பேர்தான் வந்துள்ளார்கள். அதில் இதுபோல நடந்தது மன உளைச்சலை தருகிறது. இனி தவெக தலைவரும் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் மக்களை சந்திக்காமல், தொகுதிவாரியாக சென்று சந்திக்கலாம். அல்லது பொதுவான ஒரு திடலில் கூட்டம்…
Author: admin
ஒரு ஸ்கிரிப்டிலிருந்து நேராக ஒரு திருப்பத்தில், அவிகா மற்றும் மிலிண்ட் உண்மையில் தேசிய தொலைக்காட்சியில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் போட்டியாளர்களாக இருந்த ரியாலிட்டி ஷோ பாட்டி, பாட்னி அவுர் பங்கா ஆகியோரின் தொகுப்புகளில் அவர்களின் திருமணங்கள் வெளிவந்தன. அவரது விளையாட்டுத்தனமான ஆளுமைக்கு உண்மையாக, அவிகா தனது தனி புகைப்படங்களான “பிஆர்பி, இன்னும் அழுகிற மற்றும் நடனமாடுகிறார்” என்று தலைப்பிட்டு, தனது பயணத்தை சரியாகச் சுருக்கமாகக் கூறினார்: “பாலிகா சே வடு தக்.”
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் குறித்து பல்வேறு மாறுபட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்திருந்தது. இந்த சூழலில், கரூர் சம்பவம் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. பெலிக்ஸின் ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வரும் 3ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
மும்பை: 2025-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் 68 வயதான முகேஷ் அம்பானி. இந்நிலையில், அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.9.55 லட்சம் கோடியாக உள்ளது என ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.8.15 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இந்திய நாட்டின் பணக்கார பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.2.84 லட்சம் கோடியாக உள்ளது. இதே போல இந்தியாவில் நூறு கோடிக்கு மேல் சொத்துமதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஹுருன் இந்தியா பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் நூறு கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 350-னை கடந்துள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு ரூ.167 லட்சம்…
உடல் எடையை குறைப்பது நேரம், ஆற்றல் மற்றும் உந்துதல் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு போர் போல் உணர்கிறது. ஆனால் கொழுப்பு இழப்புக்கு எப்போதும் விலையுயர்ந்த ஜிம் உறுப்பினர் அல்லது சிக்கலான இயந்திரங்கள் தேவையில்லை. வீட்டில் எளிமையான, எளிதில் செய்யக்கூடிய பயிற்சிகள் கூடுதல் கிலோவை இழக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் அளவுக்கு சக்திவாய்ந்ததாக இருக்கும். ஒழுக்கம், சரியான உணவு தேர்வுகள் மற்றும் சீரான நடைமுறையுடன், வெறும் 30 நாட்களில் 6 கிலோ வரை இழக்க முடியும். தினமும் நடைமுறையில் இருக்கும்போது உடலை மாற்றக்கூடிய 12 பயனுள்ள மற்றும் எளிதான வீட்டு பயிற்சிகள் இங்கே.
சென்னை: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் என்கிற செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் சென்ற மைக்கேல் வர தாமதமானதால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கியபோது மயக்கமுற்றார். அவரைத் தொடர்ந்து சுந்தரபாண்டியனும் தொட்டியில் இறங்கியபோது மயக்கமடைந்தார். அவர்கள் 3 பேரும் உடனடியாக கட்டப்பனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இடுக்கியில் தமிழகத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள்…
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.1) ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.87,000-ஐ கடந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இருமுறை உயர்ந்துள்ளது. இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை…
எச்.டி.எல் (உயர் அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன்) என அழைக்கப்படும் நல்ல கொழுப்பு, இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேட் கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) போலல்லாமல், இது தமனிகளில் குவிந்து இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும், எச்.டி.எல் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேலை செய்கிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் திசுக்களிலிருந்து கல்லீரலுக்கு மோசமான கொழுப்பை கொண்டு செல்கிறது, அங்கு அது உடைக்கப்பட்டு அகற்றப்படுகிறது. ஆரோக்கியமான எச்.டி.எல் அளவைப் பராமரிப்பது அவசியம், மேலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க ஒரு டெசிலிட்டருக்கு 40 மில்லிகிராமிற்கு மேல் அவற்றை வைத்திருக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.நல்ல கொழுப்பை உயர்த்த வாழ்க்கை முறை மாற்றங்கள்எச்.டி.எல் -ஐ உயர்த்துவதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் கலவையாகும். புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்ப்பது முக்கியமானது, ஏனெனில் இரண்டும் எச்.டி.எல் அளவைக் குறைக்கலாம். வழக்கமான உடல் செயல்பாடு, குறிப்பாக நடைபயிற்சி,…
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கினர். இத்திருவிழா செப்டம்பர் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 8-ம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 9-ம் நாளான இன்று (அக்.1) அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மகிசா சூரசம்ஹாரம்:…
சென்னை: கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை எனும் விதமாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் நெரிசலினால் 41 பேர் உயிரிழந்ததோடு, அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துயர நிகழ்வு குறித்து அறிந்தவுடன் உடனடியாக தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை செய்தார். அத்துடன், போர்க்கால அடிப்படையில் மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை அளித்திட நடவடிக்கை எடுத்தார். தலைமைச் செயலகத்திலிருந்து நேரடியாக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக திருச்சி சென்று பிறகு கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம்…
