விழுப்புரம்: வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம். இருப்பினும் தனித்துப் போட்டியிட்டாலும் குறைந்தது 40 தொகுதிகளிலாவது பாமக வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து பெரும்பாலான பாமக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான கூட்டம் இது. வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி நிச்சயம். இருப்பினும் தனித்து போட்டியிட்டாலும் குறைந்தது 40 தொகுதிகளிலாவது பாமக வெற்றி பெற வேண்டும். மாநாட்டுப் பணிகளால் களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. சிலர் என்னை தொலைபேசியில் அழைத்து காரணம் சொன்னார்கள். கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. செயல்பட முடியவில்லை என்று யாரும்…
Author: admin
நீண்ட காலத்திற்கு ஒரு தொலைபேசியைப் பார்ப்பது கர்ப்பப்பை வாய் முதுகெலும்பின் இயற்கையான வளைவை மாற்றுகிறது. பொதுவாக, கழுத்தில் ஒரு மென்மையான உள் வளைவு உள்ளது, இது தலையின் எடையை சமப்படுத்த உதவுகிறது. ஆனால் முன்னோக்கி வளைப்பது இந்த வளைவை தட்டையானது அல்லது மாற்றியமைக்கிறது, இதனால் தசை பிடிப்பு, மூட்டு மன அழுத்தம் மற்றும் முதுகெலும்பு வட்டுகளின் சிதைவு கூட. காலப்போக்கில், இது நாள்பட்ட வலி, கழுத்து இயக்கம் குறைக்கப்பட்டு, கடுமையான சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.பணிச்சூழலியல் மதிப்பீட்டு கருவிகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி ஸ்மார்ட்போன் பயனர்கள் பெரும்பாலும் மோசமான கழுத்து, தண்டு மற்றும் கால் தோரணைகளை ஏற்றுக்கொள்கிறது, இது தசைக்கூட்டு கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கும். பெண் பயனர்கள் ஆண்களை விட அதிக அறிகுறிகளை அனுபவிக்க முனைகிறார்கள், தோரணை மற்றும் தசை வலிமையில் உள்ள வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம்.
புதுடெல்லி: “இண்டியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் ஆகியோர் எழுதிய ‘கன்டெஸ்டிங் டெமாக்ரட்டிக் டெஃபிசிட்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது: மிருதுஞ்சய் சிங் சொன்னது போல (இண்டியா கூட்டணி) எதிர்காலம் பிரகாசமாக இல்லை. அந்தக் கூட்டணி இன்னும் அப்படியே இருக்கிறது என அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. இதற்கு சல்மான் குர்ஷித் தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், இண்டியா கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். கூட்டணி இன்னும் நிலைத்திருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இண்டியா கூட்டணியை இப்போதும் ஒருங்கிணைக்க முடியும். அதற்கான நேரம் இன்னமும் இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையான இயந்திரத்தை எதிர்த்துப் போராடுகிறது,…
சென்னை: 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்! இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள்; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்!’ எனத் தெரிவித்துள்ளார்
2021 சட்டமன்றத் தேர்தலில் மகனுக்காக அறந்தாங்கி தொகுதியை அழுத்தம் கொடுத்து வாங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், 2024 மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட தொகுதி இல்லாமல் போனதால் அப்செட் மோடுக்குப் போனார். இப்போது, 2026-ல் அறந்தாங்கி தொகுதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என திமுக-வினர் உரிமைக் குரல் எழுப்புவதால் அரசரின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் மீண்டும் அறந்தாங்கி சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான சு.திருநாவுக்கரசர் 1977 தொடங்கி 1996 வரை தொடர்ச்சியாக 6 முறை அறந்தாங்கி தொகுதியை வென்றவர். அமைச்சர், துணை சபாநாயகர் என ஒரு ரவுண்டு வந்தவர், ஒருகட்டத்தில் தனிக் கட்சி தொடங்கியும் அறந்தாங்கியில் ஆதிக்கம் செலுத்தினார். பின்னர், பாஜக-வில் இணைந்து மத்திய அமைச்சராகவும் வலம் வந்த அரசர், பிற்பாடு காங்கிரஸில் இணைந்து மாநில தலைவர் அந்தஸ்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் ராமச்சந்திரனை…
கேன்ஸ் 2025 இல் உள்ள செங்கடல் திரைப்பட அறக்கட்டளையின் ஒரு பகுதியான சினிமா காலாவில் உள்ள பெண்கள் மீது ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிவப்பு கம்பளத்தின் மீது திகைத்துப் போனார்.
விண்மீன்கள் நிறைந்த இரவு வானத்தை முறைத்துப் பார்ப்பது பொதுவாக பிரமிப்புக்கு ஒரு ஆதாரமாகும், ஆனால் விஞ்ஞான விசாரணையானது அத்தகைய ஆச்சரியமான உணர்வை கண்டுபிடிப்பாக மாற்றும். முன்னோடியில்லாத முன்னேற்றத்தில், சனியின் மிகப்பெரிய சந்திரனான டைட்டனின் வடக்கு அரைக்கோளத்தில் மேகங்கள் உருவாகி வருவதை விஞ்ஞானிகள் முதன்முறையாக பார்த்திருக்கிறார்கள். இந்த மைல்கல் பார்வை, எளிதாக்கியது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிடைட்டனின் வளிமண்டல நிகழ்வுகளைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. அதன் மீத்தேன் ஏரிகள் மற்றும் பருவகால காலநிலையுடன், டைட்டன் நீண்ட காலமாக சூரிய மண்டலத்தின் மிக மர்மமான உலகங்களில் ஒன்றாகும். நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி புள்ளிகள் வடக்கு டைட்டன் மேகங்களின் முதல் பார்வைஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (ஜே.டபிள்யூ.எஸ்.டி) முன்னோடியில்லாத திறன்களைப் பயன்படுத்துதல், விஞ்ஞானிகள் 2022 இன் பிற்பகுதியிலும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் தொடர்ச்சியான அவதானிப்புகளின் போது டைட்டனின் வடக்கு வானத்தில் அசாதாரண மேகக்கணி கட்டமைப்புகளை படமாக்கினர். மீத்தேன் மேகங்களாக இருக்கும்…
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் தனி கல்விவாரியம் இல்லை. அதனால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் பின்பற்றி வந்தன. ஆனால், அங்கு கடந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் தனியார் பள்ளிகள் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன. கடந்த மார்ச் – ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 4,290 மாணவர்களும் 3,977 மாணவிகளும் ஆக மொத்தம் 8,267 பேர் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று (மே 16) வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின்படி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 96.90% ஆகும்.
2021 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போது இந்திய கிரிக்கெட் சந்தித்த அவமானகரமான சம்பவம் விராட் கோலி கட்டிக்காத்த மனித மாண்பினால் ஒன்றுமில்லாமல் அடித்து விரட்டப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிகப்பெரிய தோல்வி. பொதுவாக பாகிஸ்தானுடன் தோற்றால் அது இந்திய ரசிகர்களுக்குப் பிடிக்காது. கடும் விமர்சனங்கள் எழுவது காலங்காலமான வழக்கமே. ஆனால் வீரர்கள் மீது வசை பாடுவதும், அவர்களை அவமானப்படுத்துவதும், அவர்களை நாட்டுக்கு எதிரானவர்கள் போல் சித்தரித்து அவர்களது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்துவதும் சமீபத்திய வெறுப்புச் சூழலின் அவமானகரமான ‘வளர்ச்சி.’ பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியை வர்த்தக விளம்பர நிறுவனங்கள், ஒளிபரப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு சாதாரண கிரிக்கெட் போட்டியை ஏதோ போர் அளவுக்கு ஊதிப்பெருக்கியதும் ரசிகர்களின் உணர்ச்சிகளை கொதிநிலைக்குக் கொண்டு சென்றதையும் மறுப்பதற்கில்லை. ஒரு கிரிக்கெட் போட்டிக்கு என்ன பில்ட்-அப் தேவையோ அதை…
விழுப்புரம்: நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் எழுச்சி பேரணி தொடர்பாக மண்டல கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று (மே 15-ம் தேதி) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், பெரும்பான்மை இருந்ததால் சட்டமாக்கிவிட்டனர். இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 5-வது கட்டமாக திருச்சியில் வரும் 31-ம் தேதி, மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் பேரணி நடத்த உள்ளோம். பல அரசியல் கட்சிகள் எண்ணிக்கையை குறிப்பிட்டு மாநாடு நடத்தி வருகின்றனர். சிலர் முழு நிலவு மாநாடு என்கின்றனர். இதில் ஒரு…