திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார். ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக ஏழுமலையானை சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
Author: admin
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாத பள்ளியால், கடைசி நேரத்தில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் தவித்துநின்ற 19 மாணவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காட்டில் உள்ள பிரைம் என்ற சிபிஎஸ்இ பள்ளியில் 16 மாணவர்கள், 3 மாணவிகள் என 19 பேர் இந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்தனர். ஆனால், தேர்வு நெருங்கியும் அவர்களுக்கு ஹால்டிக்கெட் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளியை அணுகியபோது, அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்களது பெற்றோருடன் கடந்த பிப். 14-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளிடம் பேசி, சிறப்பு விதிகள் பெற்று, 19 மாணவர்களையும் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்…
டாக்கா: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கடைசி 3 லீக் ஆட்டங்களில் முஸ்டாபிஸுர் ரஹ்மான் பங்கேற்க முடியும். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க் சொந்த காரணங்களுக்கு விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை ரூ.6 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இதற்கிடையே அவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி 20 போட்டியில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளார். வங்கதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான 2 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மே 18 முதல் 24-ம் தேதி வரை கலந்துகொள்ள முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம்…
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசித்து வருபவர் எம்.ரங்கசாமி. அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இவர் தற்போது அமமுக துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். 2011-2017 காலகட்டத்தில் இவர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.49 கோடி சொத்து சேர்த்ததாக ரங்கசாமி, மனைவி ஆர்.இந்திரா, மகன் வினோ பாரத் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், ரங்கசாமி வீட்டில் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஆர்.அன்பரசன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சோதனை நடத்தினர். ரெங்கசாமி சென்னையில் இருந்ததால், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். சொத்து ஆவணங்கள் வங்கியில் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் கூறியதால், அது தொடர்பாக ஆய்வு செய்த பிறகு, கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மும்பை: மகாராஷ்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் வாசை விரார் நகராட்சி அலுவலகத்தின் (விவிஎம்சி) துணை இயக்குநராக (நகரத்திட்டமிடல்) பணியாற்றுபவர் ஒய்.எஸ். ரெட்டி. இவர் மீது பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இவரது வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர். மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ரெட்டிக்கு சொந்தமான 13 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அப்போது இவரது வீடுகளில் இருந்து ரூ.23.25 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், தங்கக் கட்டிகள், ரூ.8.6 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வாசை விரார் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு நிலங்களில் சட்டவிரோதமாக வீடுகள் கட்டுவதற்காக இவர் பலரிடம் லஞ்சமாக இந்தத் தொகையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 2009-ம் ஆண்டு முதல்…
மதுரை: கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதை மறைத்து, இந்து பட்டியலின இடஒதுக்கீட்டில் போட்டியிட்ட அதிமுக பெண் பேரூராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 2022 உள்ளாட்சித் தேர்தலில் தேரூர் பேரூராட்சி வார்டு 8-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அமுதாராணி, பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பதவி பட்டியலினத்துக்கு (எஸ்.சி.) ஒதுக்கப்பட்டிருந்தது. அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்தார். தேர்தலில் இதை மறைத்துவிட்டார். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் வேறு மாதத்துக்கு மாறினால், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது. எனவே, அமுதாராணியின் எஸ்.சி. சாதிச் சான்றிதழை ரத்து செய்து, அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு…
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக மாவட்டத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கவுரவத் தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். பாமக தலைவர் அன்புமணி, எம்எல்ஏ-க்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம், மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. ஏறத்தாழ 180 நிர்வாகிகள் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில் சுமார் 40 பேர் மட்டுமே பங்கேற்றனர். இக்கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்தால், காலை 10 மணிக்குத் தொடங்க…
சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது பணிக் காலம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. அன்றைய தினமே அவர் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது. இதையடுத்து, சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பும், யாருக்கெல்லாம் அந்த வாய்ப்பு உள்ளது என்பது போன்ற விவாதங்களும் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநரும் டிஜிபியுமான சீமா அகர்வால்,…
சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதிய 8.07 லட்சம் மாணவர்களில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட 6.43 சதவீத மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 282 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 2,042 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 மையங்களில் கடந்த மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. 8.18 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில், 4.25 லட்சம் மாணவிகள், 3.82 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 8.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 11,025 பேர் பங்கேற்கவில்லை. சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்டார். மதியம் 2 மணி அளவில் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள்…
ஊட்டி: 2026-ல் மட்டுமின்றி 2031-ம் ஆண்டிலும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட யானைப் பாகன்களுக்கான குடியிருப்புகள், முதுமலை புலிகள் காப்பகத்தில் 15 கி.மீ. தொலைவுக்கு ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பி சேவை, வனச் சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2.93 கோடியில் 32 வாகனங்களின் சேவை உள்ளிட்டவற்றைத் தொடங்கிவைத்தார். நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, மலர் அலங்காரங்களைப் பார்வையிட்டார். இந்நிலையில், நேற்று காலை ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதஸ்வர் ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊட்டியில் நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சி மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருந்தது. மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவர்,…