Author: admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 17) நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலைகளில் திரண்டு பெருமாளை வழிபட்டனர். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் மூலம் உலகப் புகழ் பெற்றது வரதராஜ பெருமாள் கோயில். இந்தக் கோயில் 108 வைணவ திவ்யா தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரம்மோற்சவத்தையொட்டி காலை, மாலை இரு வேளையும் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த பிரம்மோற்சவத்தில் புகழ்பெற்ற உற்சவங்கள் கருட சேவை உற்சவம் மற்றும் தேரோட்டம் ஆகும். இந்த உற்சவங்களைக் காண காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை தருவர். கருட சேவை கடந்த 14-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று (மே 17) தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தையொட்டி அதிகாலையில் சாமி புறப்பட்டு தேரடியில்…

Read More

‘கிங்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ராணி முகர்ஜி. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படம் ‘கிங்’. மே 20-ம் தேதி இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. இதற்காக ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஷாருக்கானுடன் நடிக்கும் நடிகர்கள் ஒப்பந்தமும் நடைபெற்று வருகிறது. தீபிகா படுகோன், ஷாருக்கானின் மகள் சுஹானா, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், அர்சாத் வர்சி மற்றும் அபய் வர்மா உள்ளிட்டோர் இதுவரை ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்தகட்டமாக வெளிநாட்டில் மொத்தமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தற்போது ஷாருக்கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ராணி முகர்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குச் குஜ் ஹோத்தா ஹே, கபி குஷி கபி கம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு ஷாரூக்கான் – ராணி முகர்ஜி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் மற்றும் மர்பிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

Read More

சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 17-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அந்த வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் அதிக திறன் கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெள்ளிக்கிழமை வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பதிவாளர் அலுவலக ஊழியர்கள், இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பப்பட்டது தெரியவந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 17 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பென் ஸ்டேட்ஸின் சமீபத்திய ஆய்வில், நகைச்சுவை ஒரு மதிப்புமிக்க பெற்றோருக்குரிய கருவி, சிறந்த உறவுகளை வளர்ப்பது மற்றும் பதற்றத்தை குறைக்கிறது என்று கூறுகிறது. பங்கேற்பாளர்களில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையானவர்கள் நகைச்சுவை பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள், பலரும் அதைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். நகைச்சுவையுடன் வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் பெற்றோருடன் வலுவான உறவைப் புகாரளித்து, அவர்கள் நன்றாக வளர்க்கப்பட்டதாக உணர்ந்தனர். பெற்றோராக உங்களால் முடிந்ததைச் செய்த பிறகும், உங்கள் குழந்தை வெறித்தனமாக படுக்கைக்குச் செல்வது அல்லது துண்டிக்கப்படுவதை நீங்கள் இன்னும் காண்கிறீர்களா? உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவில் என்ன காணவில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், நிபுணர்களுக்கு வியக்கத்தக்க எளிய பதில் உள்ளது: நகைச்சுவை.ஆம், அது சரி. ஒரு புதிய ஆய்வு சிரிப்பு சிறந்த மருந்து மட்டுமல்ல, ஒரு சிறந்த கருவியாகும் என்று கூறுகிறது. பென் ஸ்டேட் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வின்படி, நகைச்சுவை ஒரு சிறந்த பெற்றோருக்குரிய கருவியாகும். ஒரு பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்…

Read More

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “புனேவில் ஐஇடி தயாரித்தது, சோதனை செய்தது தொடர்பான 2023-ம் ஆண்டு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் தேடப்பட்டு வந்தனர். கைதானவர்கள் அப்துல்லா ஃபைஸ் சேக் என்கிற டயபர்வாலா மற்றும் தல்ஹா கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து இந்தியா திரும்பியபோது, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தனர். இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கைது செய்யப்பட்ட இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களுக்கு எதிராக மும்பை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வரமுடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்த இரண்டு பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.3…

Read More

சென்னை: சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் ஜூன் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர தின விழாவின் போது, துணிவு மற்றும் சாகச செயல் புரிந்த வீரப் பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. வீர தீர செயல் புரிந்த பெண் ஒருவருக்கு ரூ. 5,00,000 ரொக்கப்பரிசுடன் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் விருதாளருக்கு வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் அனைத்தும் மே 16 முதல் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் ( பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லா விருது பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின்…

Read More

20122012 ஆம் ஆண்டில், ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது கர்ப்பத்திற்குப் பிந்தைய எடையை விரைவாக இழக்காததற்காக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டார். உடல் நேர்மறை மற்றும் மாறுபட்ட உடல் வடிவங்களை ஏற்றுக்கொள்வது பிரதான உரையாடலின் ஒரு பகுதியாக இல்லாத ஒரு நேரத்தில், அவள் தரையில் நின்று, தன் இயல்பான பயணத்தை கிருபையுடன் ஏற்றுக்கொண்டாள், அமைதியான நம்பிக்கையுடன் அவளுடைய தோற்றத்தை வைத்திருந்தாள்.

Read More

சண்டிகர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும், முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் சந்தேகத்தின் பேரில் ஹரியானாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஓரளவு அமைதி திரும்பியுள்ள நேரத்தில் ஹரியானாவில் நடந்த இரண்டாவது கைது இதுவாகும். பாட்டியாலாவின் கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கும் 25 வயது மாணவரான தேவேந்திர சிங் தில்லான், மே 12 அன்று கைதாலில் இருந்து கைத்துப்பாக்கிகளின் புகைப்படங்களை தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியதற்காக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, ​​அவர் கடந்த ஆண்டு நவம்பரில் கர்தார்பூர் வழித்தடம் வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளிடம் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவந்தது. அண்டை நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் தில்லானுக்கு நிறைய பணம் செலவழித்ததாகக் கூறப்படுகிறது. முதலாமாண்டு முதுகலை மாணவரான இவர், பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட்டின் படங்களையும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கைதல் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்தா மோடி…

Read More

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது. இந்த சோதனைகளின் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான…

Read More

இரத்த அழுத்தத்தின் வழக்கமான கண்காணிப்பு இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது மற்றும் நீண்டகால சிக்கல்களைத் தடுக்கிறது. உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தங்கள் பெரும்பாலும் அறிகுறியற்றவை மற்றும் முக்கியமான உறுப்புகளை காலப்போக்கில் அமைதியாக சேதப்படுத்த உண்மையிலேயே நிற்கின்றன.உங்கள் ஏற்ற இறக்கமான பிபியின் தாக்கத்தை புரிந்து கொள்ள, நீங்கள் அதை ஒவ்வொரு நாளும் கண்காணிக்க வேண்டும். இருப்பினும், இரத்த அழுத்தத்தை சரிபார்க்க நேரம் இருப்பதாக உங்களுக்குத் தெரியுமா?ஹைதராபாத்தின் ஹைதர்குடாவின் அப்பல்லோ மருத்துவமனைகள் டாக்டர் அஸ்வின் தும்கூர், ஹைதர்குடா, “ஒரு சுகாதார வழங்குநராக, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் இரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்க விரும்புகிறேன், முன்னுரிமை காலை உணவுக்கு முன்பும், எந்தவொரு மருந்துகளும் எடுப்பதற்கு முன்பும். இது ஒப்பிடக்கூடிய இரத்த அழுத்த அளவைக் கொடுக்கும். வாசிப்புகளை எடுப்பதற்கு சில நிமிடங்கள் நீங்கள் அமைதியாகவும் அமர்ந்திருப்பதையும் எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.ஒரு வாசிப்பை விட, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இரத்த அழுத்த அளவீடுகளின் போக்கு…

Read More