புதுடெல்லி: எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவினர் பிரிட்டன், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர். காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான்…
Author: admin
யோகிபாபு தங்கமான மனிதர் என்று விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆறுமுககுமார் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஏஸ்’. மே 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசும் போது, தன்னுடன் நடித்த ஒவ்வொரு நடிகரையும் குறிப்பிட்டு பணிபுரிந்த அனுபவத்தை குறிப்பிட்டார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு குறித்து பேசிய அவர், “யோகிபாபு தான் இப்படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்வேன். அவர் எப்போதுமே ஆச்சரியம் தான். நிறைய படங்களில் நடிக்கிறார். எப்படி அவருடைய மூளை எப்படி இவ்வளவு யோசிக்குது என நினைப்பேன். அவருடைய சிந்தனை என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்தும். சில சமயங்களில் டப்பிங்கில் டயலாக் சேர்த்துவிடுவார். நான் டப்பிங் செய்து முடித்தவுடன் அவரை அழைத்து படம் போட்டு…
சென்னை: அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், வரும் மே 29, 30 தேதிகளில் கட்சி ரீதியிலான மாவட்ட வாரியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும்…
மிருணாள் தாக்குரின் புதிய க்ளிக்ஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளது. புகைப்படங்களை பொறுத்தவரை மிகவும் கேஷுவலான லுக்கில் கவனம் ஈர்க்கிறார் மிருணாள். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மிருணாள் தாக்குர், துலுவை தாய்மொழியாக கொண்டவர். அவரின் தொடக்கமே மராத்தி படத்தில் இருந்து தான் ஆரம்பமானது. அடுத்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கினார். ஹிருத்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். எல்லாவற்றையும் தாண்டி 2022-ல் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ மிருணாள் தாக்குருக்கு பரவலான ரசிகர்களைப் பெற்று கொடுத்தது. இருப்பினும் அவர் நேரடி தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தெலுங்கில் வெளியான ‘ஹாய் நானா’, ‘ஃபேமிலி ஸ்டார்’, ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் ஜெட்டாவுக்கு புறப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் தமிழக மாநில ஹஜ் குழு தலைவர் ப.அப்துல் சமது, செயல் அலுவலர் மு.அ.சித்திக், நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர் அசன்…
இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டி வருகிறேன். அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. இரு நாடுகள் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் எழுந்தது. உடனடியாக இரு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை, பெயரும், புகழும் கிடைக்கவில்லை. ரஷ்யா, உக்ரைன் போர்: ரஷ்யா, உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக போர்…
சென்னை: கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், கடற்கரை – வேளச்சேரி, அரக்கோணம் வழித் தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வேளச்சேரி – கடற்கரை இடையே இரவு 9, 9.40, 10.20 மற்றும் கடற்கரை – வேளச்சேரி இடையே இரவு 10.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று (17-ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், கடற்கரை – வேளச்சேரி இடையே காலை 5, 5.30, 6, 6.30, 7.05, 7.25, 7.45 மற்றும் வேளச்சேரி – கடற்கரை இடையே காலை 5, 5.30, 6, 6.15,…
மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதியின் உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்தனர். சுமார் 10 மணிநேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என முன்னாள் எம்எல்ஏ-வின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதி. இவர் 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். அக்காலகட்டத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக உசிலம்பட்டி சந்தைப்பட்டியைச் சேர்ந்த ஆர்.கண்ணன் புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், ‘கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2021 வரை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக பி.நீதிபதி பதவி வகித்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக மனைவி ஆனந்தி, மகள் ஜெயதேவி, மகன் இளஞ்செழியன்…
குடும்பம், நிதி அல்லது வாழ்க்கை முறை குறித்த கருத்துக்கள் போன்ற ஒத்த மதிப்புகளைக் கொண்டிருப்பது ஒரு உறவுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. இது நீங்கள் இருவரும் பொதுவானதாகக் கண்டால், நீங்கள் ஒரே இசையையோ அல்லது உணவு வகையையோ ரசித்தாலும், கஷ்டங்களை சகித்துக்கொள்ள முடியும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் நீண்ட கால குறிக்கோள்கள் சீரமைக்கப்பட்டால் உங்கள் எதிர்காலம் மிகவும் சீராக செல்லும்.நீங்கள் சிரித்து வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறீர்கள்உங்கள் பங்குதாரர் சுற்றி இருக்கும்போது நீங்கள் நிறைய சிரிக்கிறீர்களா? ஆம் எனில், ஒரு குறைவான காதல் மொழி சிரிப்பு, உங்கள் போட்டியை நீங்கள் சந்தித்தீர்கள். ஒரு கூட்டு என்பது செயல்பாட்டு மட்டுமல்ல, நீங்கள் ஒருவருக்கொருவர் நிறுவனத்தை ரசிக்கிறீர்கள், அடிக்கடி சிரிப்பீர்கள், மேலும் நினைவுகளை ஒன்றாகச் செய்தால், சிறிய வழிகளில் கூட மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை 3.77 லட்சம் பேரும், ‘டிராவல் வித் ஜோ 1’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கை 1.32 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது சமூக வலைதள பக்கத்தில் தேசம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதே போல அண்டை நாடுகளான சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான் வீடியோக்களும் அடங்கும். அதில் பாகிஸ்தானுக்கு சென்ற வீடியோக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் குறித்து பாசிட்டிவ் கன்டென்டுகள் அவரது பயண வீடியோக்களில் அதிகம் இடம்பெற்றுள்ளது. லாகூர், அந்த நகரில் உள்ள அனார்கலி பஜார், அட்டாரி – வாகா எல்லை, பாகிஸ்தானில்…