சென்னை: 2023-24ஆம் ஆண்டில் அதிக விலை கொடுத்து ரூ.13,179 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டது பற்றி உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியம் 2023-24 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பதும், அதற்காக ரூ.13,179 கோடி கூடுதலாக செலவழித்திருப்பதும் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு யூனிட் ரூ.14.36 என்ற விலைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டதன் பின்னணியில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற என்ற குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகி விட்டது என்று ஆட்சியாளர்கள் பெருமை பேசிக் கொண்டாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில் கிட்டத்தட்ட 70% மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தான் வாங்கப்படுகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை, மின்சார உற்பத்தி ஆகியவற்றைக்…
Author: admin
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர். சிலரைக் காயங்களுடன் மீட்டோம். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.” என்றார். மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, “சார்மினார் நினைவுச் சின்னம் அருகே நகைக் கடைகள் அதிகம் நிறைந்த குல்சார் ஹவுஸ் பகுதியில் ஒரு நகைக் கடைக்கு மேல் உள்ள வீட்டில் உள்ளோர் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்தேன். இது ஒரு துயரச் சம்பவம். இந்த விபத்து தொடர்பாக நான்…
சென்னை: ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக, மின் திட்டங்களை விரைவுபடுத்துவது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது தொடர்பாக அப்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு…
உடல் மிக விரைவாக மீண்டும் மீண்டும் இயக்கங்களுக்கு ஏற்றது. நடைபயிற்சி வழக்கம் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாகத் தெரிந்தால் – ஒரே வேகம், ஒரே பாதை, ஒரே நேரம் – உடல் சவால் செய்யப்படுவதை நிறுத்தலாம். இது அதிகபட்ச மறுபடியும் குறைந்தபட்ச முயற்சியைப் பயன்படுத்தி தன்னியக்க பைலட் பயன்முறையில் நழுவுகிறது. இது காலப்போக்கில் கலோரி எரிப்பைக் குறைக்கிறது.அதற்கு பதிலாக என்ன செய்ய முடியும்? வகையைச் சேர்க்கவும் – விறுவிறுப்பான இடைவெளிகளை முயற்சிக்கவும், மேல்நோக்கி நடந்து செல்லவும் அல்லது நிலப்பரப்புகளை மாற்றவும். அதைக் கலப்பது வளர்சிதை மாற்றத்தை ஆறுதலிலிருந்து வெளியேற்றி, உடலை மேலும் எரிக்க ஊக்குவிக்கிறது.
டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு விவகாரத்தில் 2-வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் சொத்து பத்திரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையின் போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்பட 3 பேரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு,…
சென்னையில் மின்சார பேருந்துகளை ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 பணி மனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அந்த வகையில் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு, மின்சாரப் பேருந்துகளை ஜூன் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணி களை விரைவுபடுத்துமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், சொகுசு வசதி தேவைப்படுவோருக்கு ஏற்பவும் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். மின்சார பேருந்துகள் இயக்கப்படும் பணிமனையில் இருந்து டீசல் பேருந்துகளை இயக்க முடியாது. எனவே, இனி வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். இங்குள்ள பேருந்துகளை வெவ்வேறு பணி மனைகளு…
ஒரு வரலாற்று கண்டுபிடிப்பில், நாசாவைப் பயன்படுத்தும் விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) தொலைதூர இளம் நட்சத்திர அமைப்பில் படிக பனி நீரின் முதல் உறுதியான கண்டறிதலை உருவாக்கியுள்ளது. நமது சூரிய மண்டலத்தில் பனி நீர் பரவலாக இருக்கும்போது, உறைந்த நீர் அதற்கு வெளியே கண்டறியப்படுவது இதுவே முதல் முறை. இந்த கண்டுபிடிப்பு தொலைதூர கிரக அமைப்புகளின் ஒப்பனை மற்றும் வாழ்க்கையின் முக்கிய பொருட்களில் ஒன்றான தண்ணீரின் சாத்தியக்கூறுகள் பற்றிய முக்கியமான தடயங்களை அளிக்கிறது, இது பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு நமது புரிதலுக்கு பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கலாம் கிரக உருவாக்கம் நமது கிரகத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக்கு என்ன தேவை.ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஒரு தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி உறைந்த நீரைக் காண்கிறதுநேச்சர் இதழில் ஆவணப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு, எச்டி 181327 எனப்படும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு வட்டமாக இருக்கும் தூசி வளையத்தில் பனி உள்ளது…
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் எளிதாக ஏமாற்றி உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதன்பிறகு கடந்த 7,8, 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை, இந்திய போர் விமானங்கள் பிரம்மோஸ், ஸ்கால்ப் உள்ளிட்ட ஏவுகணைகள் மூலம் அழித்தன. இந்த தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் ட்ரோன், போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்க அந்த நாட்டின் விமான படை தளங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் லட்சியா என்ற ஆளில்லா ட்ரோன்கள் பாகிஸ்தான் விமான படை தளங்கள்…
சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ. கணேசன் ஆகியோர் வழங்கினர். சென்னை சைதாப்பேட்டையில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரை ராஜ், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மகளிருக்கு வழங்கப்படும் ஆட்டோக்களை 100 சதவீதம் மகளிரே ஓட்டுவது மிகப்பெரிய தலைமை பண்பை பெற்று தரும். மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1 கோடியே 15 லட்சம் மகளிர் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளத்தை…
புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று செலுத்தும் செயற்கைக்கோள் மூலம் இரவுநேர கண்காணிப்பு திறன் அதிகரிக்க உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புதிய ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் 1,696 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இதனை விண்ணில் செலுத்தியது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரேடார் செயற்கைக்கோள் அனைத்து காலநிலையிலும் குறைந்த வெளிச்சத்திலும் பூமியின் மேற்பரப்பை தெளிவாக படம்பிடிக்கக் கூடியது. இது நாட்டின் செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு திறனுக்கு மேலும் பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக…