Author: admin

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல, அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன. வரும் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் ராஜகோபுரம் அருகே யாகசாலை அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. அறநிலையத்துறை ஆகம வல்லுநர் குழுவை சேர்ந்த பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆகம வல்லுநர் குழுவை சேர்ந்த செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் மற்றும் பூமி பூஜைகள் செய்தனர். பின்னர் யாகசாலை…

Read More

மணிரத்னம் இயக்கத்தில் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் டிரெய்லர் நேற்று முன் தினம் வெளியிடப் பட்டது. அப்போது கமல்ஹாசனிடம், சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் கதை இதுதான் என்று சிலர் எழுதி வருகின்றனர். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அதில் சில கதைகள் நன்றாக இருந்தன. நான் விருமாண்டி படத்தை எடுக்கும்போது சிலர் இதுதான் கதை என்று ஐந்தாறு கதைகளை எழுதியிருந்தார்கள். நீங்கள் எழுதிய கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இது வேறு கதை என்று எழுதினேன்” என்றார். சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றி வரும் விமர்சனங்களை பார்ப்பீர்களா? என்று மணிரத்னத்திடம் கேட்டபோது, “சமூக வலைதளங்களில்…

Read More

சென்னை: பிரதமரின் பிம்பம் பலவீனமடைந்ததை மறைக்கவே நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய பாஜக அரசு அமைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக 7 நல்லெண்ண தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்திருப்பதை வரவேற்கிறோம். நல்லெண்ணத் தூதுக் குழுக்களை அனுப்புவது என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக யூகிக்க முடிகிறது. அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது உலக நாடுகளின் ஆதரவைப் பெற இந்திய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர். அதனால் உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. இது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இதேபோல, போர் நிறுத்தத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததும், அதற்கு அவர் கூறிவரும் காரணங்களும் பிரதமர் மோடியின் பிம்பத்தைப் பலவீனப்படுத்துவதாக அமைந்துவிட்டன. இவ்வாறு உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தோற்றத்தை மாற்றுவதற்காகவும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதைத்…

Read More

ஹிசார்: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் குசாலா, யமீன், தேவிந்தர் அர்மான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர் உளவாளி கும்பலின் தலைவராக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஹரியானா போலீஸார் கூறியதாவது: ஹரியானாவின் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தச்சு தொழிலாளி ஆவார். மிகச் சிறிய வீட்டில் ஏழ்மையான சூழலில் வளர்ந்த ஜோதி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார். ஹிசாரில் பிஏ பட்டம் பெற்ற அவர் வேலை தேடி டெல்லி சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் கிடைத்தது. கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் வேலையிழந்தார். இதன்காரணமாக அவர் மீண்டும் ஹரியானாவின் ஹிசாருக்கு திரும்பினார். அப்போதுதான் அவர் சமூக வலைதள பக்கங்கள் மீது கவனம்…

Read More

திருப்பூர்: திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீஸார் இருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூரில் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி சமீபத்தில் நடைபெற்றது. அதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது, அனுப்பர்பாளையம் மற்றும் திருப்பூர் தெற்கு காவல் நிலையங்களில் காவலர்களாகப் பணியாற்றும் மந்திரம், சின்னச்சாமி ஆகியோர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த இந்த காவலர்கள் இருவரும் சகோதரர்கள். பணி நேரத்தில் சீருடையுடன் சென்று தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சித் தலைவரை சந்தித்துப் பேசியதால், இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

தஞ்சாவூர்: திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரத்பீவி(47). இவரது மகன் ரியாஸ்(19). இவர்கள் அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தனர். பின்னர், அதே இடத்தில் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுவெடியை அனுமதியின்றி தயாரித்து, கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்ததுள்ளனர். இந்நிலையில், முகமது ரியாஸ் மற்றும் தொழிலாளர்களான சுந்தரராஜன்(60) உள்ளிட்ட 5 பேர் நேற்று காலை வழக்கம்போல நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களில் இருவர் சாப்பிடுவதற்காக வெளியே சென்றுவிட்டனர். சிவசாமி என்பவர் வெளியே நின்று வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, பட்டாசு ஆலைக்குள் இருந்த வெடிகள் திடீரென வெடித்துச் சிதறின. இதைக்கண்ட சிவசாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ஆனால், கட்டிடத்துக்குள் இருந்த முகமது ரியாஸ், சுந்தரராஜன் ஆகியோருக்கு பலத்த காயம்…

Read More

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தர் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று ஆதீன குருமூர்த்தங்களில் நேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இன்று (மே 19) சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் மேற்கொள்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு விழா மே 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் கடந்த 15-ம் தேதியும், நேற்று முன்தினம் தேரோட்டமும் நடைபெற்றன. இந்நிலையில், ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் சென்று, தருமபுரம் ஆதீன திருமடத்தின் மேல வீதியில் உள்ள, மடத்தின் முந்தைய ஆதீனகர்த்தர்களின் குருமூர்த்தங்களில்…

Read More

சென்னை: மாணவர்களின் கல்வியில் திமுக அரசு தலையிட வேண்டாம் என தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாஜக சார்பில் சென்னை விருகம்பாக்கம், தி.நகர் உள்பட 6 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், பழங்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜகவை பார்த்து சூரியன் அச்சப்படும் காலம் வந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி விவாகரத்து கூட்டணி போல போய் கொண்டிருக்கிறது. பாஜக கூட்டணி நல்ல குடும்பம் போல மகிழ்ச்சியாக இருக்கிறது. பாஜக பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது என்றும், இண்டியா கூட்டணி பலம் இழந்த கூட்டணியாக இருக்கிறது என ப.சிதம்பரம் கூறுகிறார். ப.சிதம்பரம், சசி தரூர் என எதிர்கட்சிகளும் பாஜகவை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்ற குழுவை உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அனுப்புகிறார். அதில் ஒரு…

Read More

சென்னை: விடுமுறைக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் நிறைவடைந்து, தற்போது முடிவுகளும் வந்துவிட்டன. 2025-26-ம் கல்வியாண்டுக்கான பள்ளி திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கின்றனர். காமராஜரின் எண்ணங்கள் நிறைவேற, கல்வி அனைவருக்கும் தரமானதாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும். தமிழக அரசு மாநிலங்கள் முழுவதும் பள்ளி விடுமுறையின்போது கல்வி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மூலம் பள்ளிக் கட்டடங்களின் தகுதி மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து, உரிய சான்று அளிக்க வேண்டும். பழுதடைந்த கட்டடங்களை இடித்து, புதிய வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் வகுப்பறையில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வு செய்து, பாராமரிக்க வேண்டும்.…

Read More

சென்னை: அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி, சேலம் (ஏற்காடு) ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில் சிறந்து…

Read More