இந்தியன்-ஆரிஜின் மாகா பல் மருத்துவர் ஹார்லீன் க்ரூவால், தனது பழைய வீடியோ வைரலாகிவிட்டதால், கலாச்சாரத்தை ரத்துசெய்யும் இலக்காக மாறியதாகக் கூறினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னியா பல் மருத்துவரான டாக்டர் ஹார்லீன் க்ரூவால் ஒரு பழைய வீடியோவுக்கு வைரலாகினார், அதில் ஜனநாயகக் கட்சியின் நோயாளிகளைப் பற்றி கேலி செய்வதைக் காண முடிந்தது, அவர்கள் ஸ்கைலைன் புன்னகையில் குடியரசுக் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். “டிரம்ப் அறையில் வருவது போல் அவர்கள் மேலே குதித்து புறப்படுகிறார்கள்,” என்று அவர் கூறி, இந்த நோயாளிகளுக்கு, சிரிக்கும் வாயுவை வெட்டுகிறார் என்ற ரகசியத்தை அவர் வெளிப்படுத்தினார். தனது அதிக கட்டணத்தைப் பற்றி புகார் செய்யும் அத்தகைய நோயாளிகளுக்காகவும், அவர் ஒரு மாகா பாணி தொப்பியை அணிந்துள்ளார்: ‘உங்கள் புன்னகையை மீண்டும் பெரிதுபடுத்துங்கள் “. “எனவே நான் என் நோயாளிகளுக்கு வேலை செய்யும் போது அதை அணியிறேன், எனவே அவர்கள் திகிலடைந்தால் அல்லது புகார் செய்யும்போது,…
Author: admin
புதுடெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும், மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 29 முதல் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய போராட்டத்தின்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில், 12 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டாடியாலில் தொடங்கி முசாபராபாத், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி வரை இந்த போராட்டங்கள் பரவியுள்ளது. போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள்…
மதுரை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. ‘கரூரில் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்தது நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது’ என நீதிபதி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜோதிராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முதல் மனுதாரர் புஸ்ஸி ஆனந்த் வேலுச்சாமிபுரத்தில் பக்ல 12 மணியளவில் விஜய் பேசுவார்…
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்.3) காலையில் பவுனுக்கு ரூ.880 குறைந்த நிலையில், இன்று மாலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.79 அளவில் கடும் வீழ்ச்சி கண்டிருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அக்.1-ம் தேதி அன்று தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இந்நிலையில், இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,840-க்கு விற்பனை ஆனது. அதேபோல, பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.86,720-க்கு விற்பனை ஆனது. இதேபோல 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.94,608-க்கு விற்பனை ஆனது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் மாலை நிலவரப்படி தங்கம் பவுனுக்கு…
உங்கள் ஸ்னோட் ஒரு சிரமமாக இல்லை; இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சாளரம். நாசி சளியின் நிறம் மற்றும் நிலைத்தன்மை உங்கள் உடலைப் பற்றி, ஒவ்வாமை முதல் தொற்றுநோய்கள் வரை நிறைய வெளிப்படுத்தலாம். இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வது சாத்தியமான சுகாதார பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் காண உதவும்.தெளிவான சளி பொதுவாக ஆரோக்கியமான சைனஸைக் குறிக்கிறது, அதே நேரத்தில் மஞ்சள் அல்லது பச்சை சளி பெரும்பாலும் உங்கள் உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதைக் காட்டுகிறது. சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு சளி எரிச்சல் அல்லது வறட்சி காரணமாக சிறிய இரத்தப்போக்கைக் குறிக்கலாம், மேலும் பழுப்பு நிற சளி உள்ளிழுக்கும் மாசுபடுத்திகள் அல்லது உலர்ந்த இரத்தத்தால் ஏற்படலாம். கருப்பு சளி அரிதானது, ஆனால் ஒரு பூஞ்சை தொற்றுநோயை சுட்டிக்காட்டலாம், குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் உள்ள நபர்களில்.என்.பி.ஜே முதன்மை பராமரிப்பு சுவாச மருத்துவத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிஓபிடி நோயாளிகளில், பச்சை நிற ஸ்பூட்டம்…
அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் யாவும் அதற்கேற்ற விளைவுகளை உலகம் முழுவதும் கடத்துவது காலங்காலமாகவே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான், அமெரிக்கா என்றால் ‘பொருளாதார சூப்பர் பவர்’ என்ற அந்தஸ்து இருக்கிறது. இந்தச் சூழலில்தான் அமெரிக்காவில் ‘எகனாமிக் ஷட்டவுன்’ என்ற செய்தி பரவலாக பெரும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்கா ஷட்டவுன் / பணி முடக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இந்த ஷட்டவுன் என்ன மாதிரியான தாக்கத்தை அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்? உலக நாடுகளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா போன்றவற்றை சற்றே சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்க்கலாம். ஷட்டவுன் அல்லது பணி முடக்கம் என்றால் என்ன? – முதலில் யுஎஸ் ஷட்டவுன் அல்லது பணி முடக்கம் என்றால் என்னவென்று பார்ப்போம். அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அமெரிக்க நாடாளுமன்றத்தின்…
திருநெல்வேலி: “அரசியலில் நடிக்க அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு விஜய் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்” என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான மகளிர் ஹாக்கி போட்டிகளை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திலுள்ள செயற்கை இழை மைதானத்தை புனரமைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழக முதல்வர் எந்த ஒரு காரியத்தையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என செய்ய மாட்டார். கரூர் சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் உறக்கமில்லாமல் நள்ளிரவில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார். வேண்டுமென்றே விஜய் சதி செய்து காலதாமதத்தை ஏற்படுத்தி கரூர் வந்ததாலேயே இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டது. 19 அடி அகலம் உள்ள சாலையில் 12 அடி அகலம் உள்ள பேருந்தில்…
உப்பு என்பது சமையலில் எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களில் ஒன்றாகும். சரியான அளவு சுவைகளை மேம்படுத்தலாம், இயற்கையான சுவைகளை வெளிப்படுத்தலாம் மற்றும் சாதாரண உணவுகளை சிறப்பானதாக மாற்றும். ஆனால் நீங்கள் எவ்வளவு உப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல, நீங்கள் சேர்க்கும்போது அதைச் சேர்க்கும்போது முக்கியமானது. வெவ்வேறு உணவுகள் உப்பை வித்தியாசமாக உறிஞ்சிவிடும், மேலும் நேரம் அமைப்பு, பழச்சாறு மற்றும் ஒட்டுமொத்த சுவை பாதிக்கும். இறைச்சிகள் மற்றும் சூப்கள் முதல் அரிசி, பாஸ்தா, பீன்ஸ் மற்றும் காய்கறிகள் வரை, பருவத்திற்கு சரியான தருணத்தை அறிந்துகொள்வது முற்றிலும் சீரான உணவுகளை உறுதி செய்கிறது. சிறந்த முடிவுகளுக்கு பல்வேறு உணவுகளை எவ்வாறு உப்பு செய்வது என்பதை இந்த வழிகாட்டி விளக்குகிறது.நீங்கள் எப்போது உப்பு சேர்க்க வேண்டும் சிறந்த சுவைக்காக சமைக்கும்போது?இறைச்சி மற்றும் கோழிக்கு: ஆழமான சுவைக்கு ஆரம்பத்தில் உப்புஇறைச்சியை சமைக்கும்போது, ஆரம்பத்தில் சுவையூட்டுவது பொன்னான விதி. ஆரம்பத்தில் எப்போதும் உப்பு சேர்க்கவும், இறைச்சி இன்னும்…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து கூடுதலாக 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான காரணங்களைக் கூற வேண்டும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா வலியுறுத்தியுள்ளார். பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 21.53 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம், மொத்தத்தில் 47 லட்சம் பெயர்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக, கடந்த ஜூன் 24-ம் தேதி நிலவரப்படி 7.89 கோடியாக இருந்த பிஹார் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 7.42 கோடியாக குறைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள…
சென்னை: தமிழகத்தில் சென்னை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை (அக்.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நாளை (அக்.4) முதல் அக்.9-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (அக்.4) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், அக்டோபர் 5-ம் தேதி நாளை மறுநாள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.4) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில்…
