Author: admin

ஜார்ஜியாவில் இந்திய மூலதன தொழில்நுட்ப மாணவர் அகாஷ் பானர்ஜியைக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டின் காட்சிகளை அட்லாண்டா காவல் துறை வெளியிட்டது. ஜார்ஜியா தொழில்நுட்ப வளாகத்திற்கு அருகே அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்டில் 22 வயதான இந்திய வம்சாவளி தொழில்நுட்ப மாணவர் ஆகாஷ் பானர்ஜி தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மே 18 அன்று நடந்தது, இப்போது ஜார்ஜியா காவல்துறையினர் இது ஒரு இலக்கு செயல் என்று கூறி கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளனர், மேலும் கண்காணிப்பு காட்சிகளிலிருந்து சந்தேக நபரின் புகைப்படம் அவர்களிடம் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் வரலாற்றைக் கொண்ட பானர்ஜியைத் தேடிக்கொண்டிருந்தார், கடந்த கால பானர்ஜிக்கு எந்த வகையான குற்றவியல் உள்ளது என்பதை விரிவாகக் கூறாமல் போலீசார் தெரிவித்தனர். நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், அட்லாண்டா காவல் துறை, மாணவர் அகாஷ் பானர்ஜீ என ஃபுல்டன் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்டதாகக் கூறினார். அவர் போஷ்…

Read More

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறியுள்ளது. தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தார். விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. செபி ஊழியர்களும் அவர் மீது பணி சார்ந்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக லோக்பால் அமைப்பின் வசம் எதிர்க்கட்சிகளில் ஒன்றான திரிணமூல் காங்கிரஸ்…

Read More

சென்னை: கர்னாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆப் கர்னாடிக் மியூசிக் பள்ளியில் கர்னாடக இசையில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 ஆண்டு காலம் கொண்ட இந்த உயர் டிப்ளமோ படிப்பு ஆண்டுக்கு 2 செமஸ்டர்களை (ஜுலை-நவம்பர் மற்றும் ஜனவரி-ஏப்ரல்) கொண்டது. வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும். இந்த படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வர்ணம், கீர்த்தனை பாடத் தெரிந்திருக்க…

Read More

ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடி தோற்றது, இதில் சிகந்தர் ரசா 2-வது இன்னிங்ஸில் 60 ரன்களை அடித்தார். ஆனால், அவருக்கு கடந்த 24 மணி நேரம் கடுமையான பிரயாணமாகவும் வெவ்வேறு உணவுகளுமாக அமைந்தது. ஆனால், கஷ்டப்பட்டது வீண் போகாமல் பாகிஸ்தான் சூப்பர் லீகில் லாகூர் அணியை வெற்றி பெறச் செய்தார். இங்கிலாந்து டெஸ்ட்டை முடித்த கையோடு பர்மிங்ஹாமில் இரவு உணவை முடித்துக் கொண்டு துபாய்க்கு விமானம் ஏறி எகானமி பிரிவில் பயணித்து துபாயில் காலை உணவு, பிறகு அபுதாபியில் மதிய உணவு எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்க லாகூர் விமானம் பிடித்து வந்திறங்கி. லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்கு வெற்றி ரன்களை அடித்து கோப்பையை வெல்லச் செய்தார் சிகந்தர் ரசா. இதற்கு முன்னரும் கூட இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தான் வந்து லாகூர் குவாலண்டர்ஸ் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. அதன்பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. இதனைத் தொடர்ந்து மே 12-ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இரண்டு தரப்பும் எந்த ஒரு துப்பாக்கிச்சூடு அல்லது எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற உறுதிப்பாட்டினைத் தொடர்வது தொடர்பான விஷயம் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்த்தை கடைப்பிடிக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான்…

Read More

‘பராசக்தி’ தலைப்பு சர்ச்சையான சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்க ‘பராசக்தி’ மற்றும் விஜய் ஆண்டனி நடிக்க ‘பராசக்தி’ என இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டன. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக விஜய் ஆண்டனியிடம் பேசி தலைப்பை பெற்றுக் கொண்டது சிவகார்த்திகேயன் படக்குழு. தனது படத்துக்கு ‘சக்தி திருமகன்’ என தலைப்பை மாற்றிக் கொண்டார் விஜய் ஆண்டனி. ‘மார்கன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘பராசக்தி’ தலைப்பு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி, “அவர்களுக்கும் தலைப்பு என்னிடத்தில் இருப்பது தெரியாது. படத்தின் தலைப்பு பதிவு செய்வதற்கு இரண்டு, மூன்று யூனியன்கள் இருக்கின்றன. ‘பராசக்தி’ படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டார்கள். அதுவும் மக்களிடையே போய் சேர்ந்துவிட்டது. எனக்கு ஒரு தயாரிப்பாளரின் வலி தெரியும் என்பதால் நானே நட்பின் அடிப்படையில் விட்டுக் கொடுத்துவிட்டேன். அந்த தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு…

Read More

சென்னை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு முன்கூட்டி, கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், அசாம், பஞ்சாப்,ஹரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.கர்நாடகாவில் தக்‌ஷின கர்நாடகா,உடுப்பி, உத்தர கன்னடா உட்பட மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் தலைநகர்பெங்களூரு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தலைநகர் மும்பை, தாணே, பால்கர், ராய்கட் உட்பட மாநிலம்முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மே மாதத்தில்…

Read More

சென்னை: கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 1.06 லட்சம் சிறிய ரக சிலிண்டர் இணைப்புகளை வழங்கி, தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வீடுகளில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களையும், வர்த்தகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர்களையும் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்யும் போது எளிதாக கொண்டு செல்லும் வகையில், 10 மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிறிய வகை சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இந்த சிலிண்டர்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: “இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் சிலிண்டர்களை 1.34 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ‘எக்ஸ்ட்ரா லைட்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிய ரக சிலிண்டர்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதன்படி, கடந்த 2024-25-ம் ஆண்டில் 1.06 லட்சம்…

Read More

நாசா விஞ்ஞானிகள் ‘அவசர’ எச்சரிக்கையை வெளியிடுகிறார்கள்: சமூக ஜெட் லேக் என்பது நீங்கள் புறக்கணிக்கும் ஆபத்தான தூக்க பழக்கம் “ஜெட் லேக்” என்ற வார்த்தையை நாம் கேட்கும்போது, ​​நீண்ட தூர விமானத்தில் பல நேர மண்டலங்களைக் கடந்த பிறகு திசைதிருப்பல் மற்றும் சோர்வு ஆகியவற்றை நம்மில் பெரும்பாலோர் உடனடியாக சித்தரிக்கிறோம். ஆனால் விமானத்தில் ஏறாமல் ஜெட் லேக் நடக்க முடிந்தால் என்ன செய்வது? சமீபத்திய ஆராய்ச்சி, நுண்ணறிவு உட்பட நாசா தூக்க வல்லுநர்கள்உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் சமூக ஜெட் லேக் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வை அனுபவிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது -இது அவர்களின் உள் உடல் கடிகாரங்களுக்கும் தினசரி அட்டவணைகளுக்கும் இடையில் ஒரு நாள்பட்ட தவறான வடிவமைப்பை, சோர்வு, மோசமான கவனம் மற்றும் பலவீனமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.பாரம்பரிய ஜெட் லேக் போலல்லாமல், சமூக ஜெட் லேக் வார இறுதி நாட்களில் தூங்குவது அல்லது தாமதமாக தங்குவது, உங்கள் உடலின்…

Read More

அகமதாபாத்: 2022 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக அமெரிக்காவைக் கடக்கும் போது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை இழந்த காந்திநகரில் உள்ள டிங்குச்சா கிராமம் மீண்டும் ஆயுதக் கொள்ளையில் கொல்லப்பட்ட பின்னர் மீண்டும் விரக்தியில் மூழ்கியுள்ளது.செவ்வாயன்று டென்னசியில் உள்ள மராத்தான் எரிவாயு நிலையத்தில் நடந்த ஆயுதக் கொள்ளையில், ஒரு வசதியான கடையில் எழுத்தராகப் பணிபுரிந்த பரேஷ் படேல், 30, ஒரு வசதியான கடையில் எழுத்தராக பணிபுரிந்தார். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள், உள்ளூர் லூயிஸ்பர்க் காவல் துறை இந்த வழக்கில் சந்தேக நபரை கைது செய்தது.உள்ளூர் காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ஒரு வாடிக்கையாளராகக் காட்டி கடைக்குள் நுழைந்து, ஒரு பொருளைக் கேட்டார், பின்னர் திடீரென்று ஒரு துப்பாக்கியை வெளியே இழுத்து பணம் கோரினார். சி.சி.டி.வி காட்சிகள் படேல் கோரிக்கையுடன் இணங்குவதைக் காட்டுகிறது, பதிவேட்டில் இருந்து பணத்தை தனது கைகளை உயர்த்தியது. ஒத்துழைத்த போதிலும், தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கிச் சூடு…

Read More