Author: admin

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவினரின் விமானம் மாஸ்கோவில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. 45 நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 நாட்கள் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். சமாஜ்வாதி எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, கொரியா, சிங்கப்பூர் நாடுகளில் பயணம் மேற்கொள்கிறது. சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு ஐக்கிய அரபு அமீரகம், லைபீரியா, காங்கோ, சியேரா லியோனி நாடுகளில் பயணம் மேற்கொள்கிறது. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) எம்பி சுப்ரியா சுலே தலைமையிலான குழு…

Read More

ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்படவுள்ளது. 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘தெகிடி’. இதன் த்ரில்லர் திரைக்கதை, பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க இப்படம் வெளியானது. ஐடி துறையில் பணிபுரிந்து வந்த ரமேஷ் நேரடியாக இயக்குநராக அறிமுகமானார். ‘தெகிடி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஐடி துறை பணிக்கே சென்றுவிட்டார். தற்போது மீண்டும் அவருக்கு இயக்குநர் ஆசை வந்துள்ளது. இம்முறையும் அசோக் செல்வன் நடிக்க புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர், இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரம் விரைவில் தெரியவரும்.

Read More

விழுப்புரம்: ‘‘அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது’’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக இளைஞர் சங்க தலைவராக, தனது மகள்வழி பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். கூட்ட மேடையிலேயே இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதை தொடர்ந்து, சமீபத்தில் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த வாரங்களில் தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய நிர்வாகிகள்…

Read More

சென்னை: இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் நிலையில், தமிழகம் – ஜெர்மனி இடையிலான வர்த்தகம் கணிசமாக அதிகரிக்கும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஜெர்மனியின் தூதரக அதிகாரி கேத்ரின் மிசெரா லாங் தெரிவித்தார். தென்னிந்திய வர்த்தக தொழில் சபை, தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனம் (கைடன்ஸ் தமிழ்நாடு), ஜெர்மனியின் பிவிஎம்டபிள்யூ சங்கம் சார்பில் இந்தியா – ஜெர்மனி இடையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கி, இந்தோ – ஜெர்மன் எம்எஸ்எம்இ உறவுகள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார். பின்னர், அவர் பேசியதாவது: தமிழக பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு தொழில் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கும்…

Read More

ஜார்ஜியாவில் இந்திய மூலதன தொழில்நுட்ப மாணவர் அகாஷ் பானர்ஜியைக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டின் காட்சிகளை அட்லாண்டா காவல் துறை வெளியிட்டது. ஜார்ஜியா தொழில்நுட்ப வளாகத்திற்கு அருகே அவர் தங்கியிருந்த அபார்ட்மெண்டில் 22 வயதான இந்திய வம்சாவளி தொழில்நுட்ப மாணவர் ஆகாஷ் பானர்ஜி தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மே 18 அன்று நடந்தது, இப்போது ஜார்ஜியா காவல்துறையினர் இது ஒரு இலக்கு செயல் என்று கூறி கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளனர், மேலும் கண்காணிப்பு காட்சிகளிலிருந்து சந்தேக நபரின் புகைப்படம் அவர்களிடம் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் வரலாற்றைக் கொண்ட பானர்ஜியைத் தேடிக்கொண்டிருந்தார், கடந்த கால பானர்ஜிக்கு எந்த வகையான குற்றவியல் உள்ளது என்பதை விரிவாகக் கூறாமல் போலீசார் தெரிவித்தனர். நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், அட்லாண்டா காவல் துறை, மாணவர் அகாஷ் பானர்ஜீ என ஃபுல்டன் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்டதாகக் கூறினார். அவர் போஷ்…

Read More

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்னாள் செபி தலைவர் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக லோக்பால் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் அமைப்பு மாதபி புச் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூறியுள்ளது. தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டியது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்தார். விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. 2017-ம் ஆண்டு முதல் இதுவரையில் அவர் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. செபி ஊழியர்களும் அவர் மீது பணி சார்ந்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக லோக்பால் அமைப்பின் வசம் எதிர்க்கட்சிகளில் ஒன்றான திரிணமூல் காங்கிரஸ்…

Read More

சென்னை: கர்னாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆப் கர்னாடிக் மியூசிக் பள்ளியில் கர்னாடக இசையில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 ஆண்டு காலம் கொண்ட இந்த உயர் டிப்ளமோ படிப்பு ஆண்டுக்கு 2 செமஸ்டர்களை (ஜுலை-நவம்பர் மற்றும் ஜனவரி-ஏப்ரல்) கொண்டது. வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும். இந்த படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வர்ணம், கீர்த்தனை பாடத் தெரிந்திருக்க…

Read More

ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடி தோற்றது, இதில் சிகந்தர் ரசா 2-வது இன்னிங்ஸில் 60 ரன்களை அடித்தார். ஆனால், அவருக்கு கடந்த 24 மணி நேரம் கடுமையான பிரயாணமாகவும் வெவ்வேறு உணவுகளுமாக அமைந்தது. ஆனால், கஷ்டப்பட்டது வீண் போகாமல் பாகிஸ்தான் சூப்பர் லீகில் லாகூர் அணியை வெற்றி பெறச் செய்தார். இங்கிலாந்து டெஸ்ட்டை முடித்த கையோடு பர்மிங்ஹாமில் இரவு உணவை முடித்துக் கொண்டு துபாய்க்கு விமானம் ஏறி எகானமி பிரிவில் பயணித்து துபாயில் காலை உணவு, பிறகு அபுதாபியில் மதிய உணவு எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்க லாகூர் விமானம் பிடித்து வந்திறங்கி. லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்கு வெற்றி ரன்களை அடித்து கோப்பையை வெல்லச் செய்தார் சிகந்தர் ரசா. இதற்கு முன்னரும் கூட இங்கிலாந்திலிருந்து பாகிஸ்தான் வந்து லாகூர் குவாலண்டர்ஸ் அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற…

Read More

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. அதன்பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. இதனைத் தொடர்ந்து மே 12-ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இரண்டு தரப்பும் எந்த ஒரு துப்பாக்கிச்சூடு அல்லது எல்லை தாண்டிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற உறுதிப்பாட்டினைத் தொடர்வது தொடர்பான விஷயம் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்த்தை கடைப்பிடிக்கிறோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான்…

Read More

‘பராசக்தி’ தலைப்பு சர்ச்சையான சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்க ‘பராசக்தி’ மற்றும் விஜய் ஆண்டனி நடிக்க ‘பராசக்தி’ என இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டன. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக விஜய் ஆண்டனியிடம் பேசி தலைப்பை பெற்றுக் கொண்டது சிவகார்த்திகேயன் படக்குழு. தனது படத்துக்கு ‘சக்தி திருமகன்’ என தலைப்பை மாற்றிக் கொண்டார் விஜய் ஆண்டனி. ‘மார்கன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘பராசக்தி’ தலைப்பு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி, “அவர்களுக்கும் தலைப்பு என்னிடத்தில் இருப்பது தெரியாது. படத்தின் தலைப்பு பதிவு செய்வதற்கு இரண்டு, மூன்று யூனியன்கள் இருக்கின்றன. ‘பராசக்தி’ படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டார்கள். அதுவும் மக்களிடையே போய் சேர்ந்துவிட்டது. எனக்கு ஒரு தயாரிப்பாளரின் வலி தெரியும் என்பதால் நானே நட்பின் அடிப்படையில் விட்டுக் கொடுத்துவிட்டேன். அந்த தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு…

Read More