Author: admin

இணையம் இனி உங்களை ஆச்சரியப்படுத்த முடியாது என்று நீங்கள் நினைக்கும் போது, ​​ஏதோ காட்டு மேலெழுகிறது. சீனாவில் ஒரு பூங்கா வழியாக உலா வருவதையும், வயதானவர்களின் ஒரு குழுவினரை -ஆம், மூத்தவர்களாகவும் – மரக் கிளைகள் அல்லது வொர்க்அவுட் பார்களிலிருந்து கழுத்தில் தொங்கவிடுவதைப் பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். இல்லை, இது ஒரு அறிவியல் புனைகதை அல்லது சில வினோதமான ஸ்டண்ட் நிகழ்ச்சியின் காட்சி அல்ல. இது சீனாவின் பழைய மக்கள்தொகையில் ஒரு உண்மையான உடற்பயிற்சி போக்கு, அது ஒலிப்பது போலவே விசித்திரமானது.இது எப்படி தொடங்கியது?இந்த போக்கு வடகிழக்கு சீனாவில் உள்ள ஷென்யாங்கில் என்ற நகரத்தில் தொடங்கியதாக தெரிகிறது. 57 வயதான ஒருவர் தனது சொந்த கழுத்து வலியைச் சமாளிக்க DIY கழுத்து தொங்கும் சாதனத்தை கொண்டு வந்தார். இது அதிசயங்களைச் செய்ததாக அவர் கூறுகிறார். சொல் பரவியது, உங்களுக்குத் தெரிவதற்கு முன்பு, மற்ற மூத்தவர்கள் அதை ஒரு ஷாட் தருகிறார்கள்…

Read More

புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக, என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் 75 ஆண்டுகால செயல்பாட்டில் முதல்முறையாக 17 பெண்கள் பட்டம்பெற்று சாதனை படைத்துள்ளனர். என்டிஏ-வில் கடுமையான பயிற்சிகளைப் பெற்று ஆண்கள் மட்டுமே பட்டங்களைப் பெற்றுவந்தனர். இந்த நிலையில், பெண்களையும் அந்த அகாடமியில் அனுமதிக்க கோரி கடந்த 2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, யுபிஐஎஸ்சி தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயில்வதற்கு முதல் முறையாக பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் 300 ஆண்களுடன் சேர்ந்து முதல்முறையாக 17 பெண்களும் படித்து பட்டம் பெற்று வெளியேறி உள்ளனர். ஆணும்-பெண்ணும் சேர்ந்து படித்து பட்டம்பெற்ற முதல் பேட்ச் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்சின் தேர்ச்சியை குறிக்கும் வகையில் கடக்வாஸ்லாவில் உள்ள கேதர்பால் மைதானத்தில் நேற்று அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு, முன்னாள் ராணுவத் தளபதியும், தற்போதைய மிசோரம் ஆளுநருமான…

Read More

Last Updated : 21 May, 2025 06:53 AM Published : 21 May 2025 06:53 AM Last Updated : 21 May 2025 06:53 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா படத்திலிருந்து விலகினார் தீபிகா படுகோன். இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் எனக் கூறப்பட்டது. தற்போது அட்லீ – அல்லு அர்ஜுன் இணைப்பில் உருவாகும் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரிக்கிறது. அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் 5 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதில் மிருணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பது உறுதியாகி இருந்தது. அவர்களைத் தொடர்ந்து முக்கியமான நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதர 2 நாயகிகளில் ஒருவராக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவில் இப்படியொரு கதைக்களம் வந்ததில்லை என்கிறார்கள். அந்தளவுக்கு ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து…

Read More

திருச்சி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிப்பதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் திறம்படச் செயல்பட்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. நதி நீர் இணைப்பு தொடர்பாக யாரும் சிந்திக்காத காலத்திலேயே தனி நபர் மசோதா கொண்டு வந்தவர். 1978-ல் இந்தி திணிப்புக்கு எதிராகப் பேசிய அவர், தற்போது 81-வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் நேரத்திலும் மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்புக்கும் எதிராகப் பேசினார். 3 முறை மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தபோதும் மறுத்தவர் வைகோ. அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் வாய்ப்பு அளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. அதேநேரத்தில், வைகோவுக்கு பதவி பொருட்டல்ல, அவரது மக்கள் பணி தொடரும். நாங்கள் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல்…

Read More

தாஹோத்: இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதும்தான் பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக குஜராத் மாநிலத்துக்கு நேற்று வருகை தந்தார். இந்நிலையில் தாஹோத் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு இதே தினத்தில் (2014, மே26) முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன். அப்போது முதல் நாட்டின் வளர்ச்சி ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். நாடு முழுவதும் 70 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நமது நாடு வறுமையை ஒழித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதும்தான் பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது. நமது சகோதரிகளின் சிந்தூரை(குங்குமம்)…

Read More

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 48-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மானவ் தாக்கர், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹரிமோட்டோ டொமோகாஸுடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய மானவ் தாக்கர் 11-13, 3-11, 11-9, 6-11, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, 130-வது இடத்தில் உள்ள தென் கொரிய வீராங்கனை பார்க் கஹியோனுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 8-11, 7-11, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு இந்திய வீராங்கனையான தியா சித்தலே 3-7, 7-11, 6-11, 11-6, 5-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சென் ஐ ஷிங்கிடம் வீழ்ந்தார்.

Read More

‘தக் லைஃப்’ படத்தை வெவ்வேறு மாநிலங்களில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் “ஹாரிஸ், அனிருத், சாய் அபயங்கர் உள்ளிட்ட பலர் உங்களிடம் இருந்து சென்று பெரிய இசையமைப்பாளராக ஆகியிருக்கிறார்கள். அதில் உங்களுக்கு சந்தோஷமா, பொறாமையா?” என்ற கேள்வி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு குறைவாக படங்கள் செய்கிறோமோ, அவ்வளவு திறமையாக இசையமைக்க முடியும். நிறைய பேர் இல்லையென்றால் என்னிடம் வருவார்கள். முடியாது என்று சொன்னால் படம் பண்ண மாட்டேன் என்கிறார் என்று சொல்வார்கள். அது இப்போது முடியாது. ஹாரிஸ், அனிருத், சாய் எல்லாம் பண்ணும்போது என்னுடைய படங்களுக்கு இசையமைக்க இன்னும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனால், நிறைய தரமான இசையைக்…

Read More

மதுரை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் 16 கி.மீ. தொலைவுக்கு `ரோடு ஷோ’ செல்கிறார். நாளை திமுக பொதுக் குழுவில் பங்கேற்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதியம் 12 மணியளவில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, எம்.மணிமாறன் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர். தனியார் ஹோட்டலில் சிறிது தூரம் ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், மாலை 5 மணியளவில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பெருங்குடி, வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ்…

Read More

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71.360-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71,360-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.77,840-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ரூ.1,11,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Read More