“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் கட்சிகளைத் தேடி தூதுவர்களை அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் தான், பழைய பகையை எல்லாம் மறந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தேடிச் சென்று சந்தித்துப் பேசி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். பாமகவில் தந்தை – மகன் அரசியல் யுத்தம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்வதால், இவர்களில் யாரை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறது அதிமுக. திமுக-வையும் முதல்வர் ஸ்டாலினையும் அன்புமணி மிகக் கடுமையாக சாடுவதால் அவர் தங்கள் பக்கம் தான் வருவார் எனக் கணிக்கும் அதிமுக, அவர் மட்டும் வந்தால் போதாது ராமதாஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாமக-வும் தங்கள் அணிக்கு வந்தால் தான் பலம் சேர்க்கும் என நினைக்கிறது.…
Author: admin
நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மஹாநடி’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் நாக் அஸ்வின். ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின். முழுக்க நாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனையும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. சாய் பல்லவி நடிக்கவுள்ள படத்தினை முடித்துவிட்டு, ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தின் பணிகளை நாக் அஸ்வின் தொடங்கவுள்ளார். இதில் தீபிகா படுகோன் விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பதும் விரைவில் தெரியவரும்.
நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தின் தேதி 3-வது முறையாக மாற்றம் செய்யயப்பட்டுள்ளது. இதன்படி அக்.8,9-ம் தேதிக்கு அவரது பிரச்சாரம் மாற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் நாமக்கல் மாவட்டத்தில் அவரது சுற்றுப்பயணம் திட்டப்பட்டிருந்தது. இதில் செப்.19-ம் தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் செப். 20, 21 தேதிகளில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதன்காரணமாக எடப்பாடி பழனிசாமியின் அடுத்த இரு நாட்கள் சுற்றுப்பயணம் அக்.4,5-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின், திடீரென அக்.,5,6-ம்…
சென்னை: தமிழர் அடையாளமான கல் மண்டபங்களை அரசு புதுப்பித்து மறுசீரமைக்க வேண்டும் எனவும், அதுவரையில் ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து காணப்படும் கல் மண்டபங்களுக்கு மக்கள் செல்லத் தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழகத்தில் விழுப்புரம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வரலாற்றுப் பெருமை வாய்ந்த கல் மண்டபங்கள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஒரு காலத்தில் நெடும்பயணம் மேற்கொள்ளும் மன்னர்களும், வழிப்போக்கர்களும் தங்கி இளைப்பாரும் அன்னச்சத்திரங்களாக விளங்கிய கல்மண்டபங்கள், திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் கூடாரமாக நிலைகுலைந்து கிடக்கின்றன. தமிழ்மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் காவலர்களாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தமிழ் மன்னர்களின் கலைநயத்தையும், கருணை உள்ளத்தையும் பறைசாற்றும் கல் மண்டபங்களைக் கண்டுகொள்ளாமல் அசட்டை செய்வது ஏன்? தனது தந்தையின் பேனாவிற்குக் கோடிக்கணக்கில் சிலை…
ஓடிடி தளத்தில் அக்டோபர் 10-ம் தேதி ‘மிராய்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கார்த்தி கட்டாமேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான படம் ‘மிராய்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. செப்டம்பர் 12-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து இப்படம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழுக்க பேன்டஸி படமாக உருவான இதில் மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்திருந்தார். ரித்திகா நாயக், ஜெகபதி பாபு, ஸ்ரேயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் தேஜா சஜ்ஜா உடன் நடித்திருந்தனர். பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வெளியிட்டது. கார்த்திக் கட்டாமேனி இப்படத்தின் இயக்குநர் மட்டுமன்றி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. ‘ஹனுமன்’ படத்தைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் ‘மிராய்’ படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அவருடைய அடுத்டுத்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு: உயிரிழந்த நிர்வாகி ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஈரோடு மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 5-ம் தேதி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் நாங்களே ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வோம் என அறிவித்திருந்தார். இதையடுத்து அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. அதற்கு பதிலாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஒன்றியத்தில் 35-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதில், நம்பியூர் வடக்கு ஒன்றியத்தில் ஒன்றிய பொருளாளராக கடத்தூர் ஆ.செங்காளிபாளையத்தை சேர்ந்த எஸ்.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், கடந்த மே மாதம் 12-ம் தேதி இறந்து விட்டார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் யார்…
அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்களில் வெற்றி பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல் மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து மூன்றாம் (சனிக்கிழமை) நாள் ஆட்டம்…
சென்னை: வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசிப்போருக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அப்புறப்படுத்தும் ரயில்வேயின் முடிவுக்கு எஸ்ஆர்எம்யு கண்டனம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே காலனியில் 64 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் பாதுகாப்பு காரணம் காட்டி, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, மாற்று ஏற்பாடு செய்யாமல் அப்புறப்படுத்த சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது. இதற்கு எஸ்ஆர்எம்யு எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் கண்டனம் தெரிவித்து, இதன் பொதுச் செயலாளர் என். கண்ணையா வழிகாட்டுதலின்படி சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் தலைமையில் இன்று கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.எம்.யு.,வை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து எஸ்ஆர்எம்யு சென்னை கோட்ட செயலர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் கூறியதாவது: “வண்ணாரப்பேட்டை ரயில்வே காலணியில் 64 குடியிருப்புகளில் இருப்போரை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டுள்ள ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கிறோம். கட்டி முடித்து சில ஆண்டுகளே ஆன…
ஒரு கொண்டாட்டத்தில் இரவு உணவோடு ஒரு கிளாஸ் மது அல்லது ஒரு சிற்றுண்டி, வாழ்க்கையின் பல தருணங்களில் ஆல்கஹால் ரசிக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு ஊற்றத்திற்கும் பின்னால் பல தசாப்தங்களாக சுகாதார நிபுணர்களைக் குழப்பிய ஒரு கேள்வி உள்ளது: ஆல்கஹால் குடிக்க எவ்வளவு பாதுகாப்பானது?பதில், அது மாறிவிட்டால், ஒருவர் நம்புவது போல் எளிதானது அல்ல. ஆல்கஹால் இரட்டை முனைகள் கொண்ட வாள் போல செயல்படுகிறது, கொஞ்சம் பாதிப்பில்லாததாகவோ அல்லது இதயத்திற்கு பாதுகாப்பாகவோ தோன்றலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால், அதே பானம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் அமைதியாக தீங்கு விளைவிக்கும்.”பாதுகாப்பானது” என்பது உண்மையில் என்ன அர்த்தம்ஆராய்ச்சியாளர்கள் உடலில் ஆல்கஹால் விளைவுகளை பைபாசிக் என்று விவரிக்கிறார்கள், அதாவது இது இரண்டு எதிர் பக்கங்களைக் கொண்டுள்ளது. குறைந்த மட்டத்தில், இது இருதய ஆரோக்கியத்திற்கு நடுநிலை அல்லது சற்று பாதுகாப்பாகத் தோன்றலாம், குறிப்பாக ஆரோக்கியமான உணவுடன் ஜோடியாக இருக்கும்போது. ஆனால் அளவு ஒரு வாசலைக்…
செங்கல்பட்டு: ‘கொள்கையற்ற அதிமுகவினால் பத்தாண்டுகள் பாழான தமிழ்நாட்டை மக்களின் ஆதரவுடன் மீட்டெடுத்து, இந்த நான்கு ஆண்டுகளில் வளப்படுத்தியிருக்கிறோம். வரலாறு காணாத வகையில், வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இதை திராவிடத்துக்கு எதிரான பாஜகவும், “திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது” என்று சொன்ன பழனிசாமியின் அதிமுகவும், மீண்டும் கபளீகரம் செய்யலாம் என்று பார்க்கிறார்கள்’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “ சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால், திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். கருத்தியல் உறுதியோடு போராட்ட வாழ்வை வாழும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ‘சல்யூட்!’ அதிலும், 92 வயது இளைஞராக, ஓய்வின்றி, தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் கி.வீரமணிக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக உருவானபோது,…
