Author: admin

புதுடெல்லி: மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில், இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குறிப்பாக, ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி வழங்க உள்ளன. இதன்படி, நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவனங்களில் புதிய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட…

Read More

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகள் மற்றும் சாலை பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் கடந்த 3-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கரூரில் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, சம்பவ இடத்தில் இருந்த கட்சித் தலை வரும், பிற நிர்வாகிகளும் தங்களுக்கும், நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல நடந்துகொண்டுள்ளனர். நெரிசலில் சிக்கியவர்களுக்கோ, தங்களது ஆதரவாளர்களுக்கோ அவர்கள் எந்த…

Read More

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில், விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கியது தங்கத் தகடுகள் அல்ல; செம்பு கலக்கப்பட்டவை என்று தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வெளிப்புறம் மற்றும் பீடத்துடன் கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு கடந்த 1999-ம் ஆண்டு தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. இதற்கு முன்னாள் தொழிலதிபர் விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கிய 30 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 2 துவாரபாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீது உள்ள தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தரப்பட்டது. பணி முடிந்த பிறகு, சென்னையில் உள்ள பிரபல நடிகர் ஜெயராம் வீட்டுக்கு அந்த தகடுகளை கொண்டு சென்று பூஜை போட்டுள்ளனர். அப்போது ஜெயராம் தட்சிணையாக பணம் கொடுத்துள்ளார். பின்னர் தங்க முலாம் பூசிய தகட்டை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையே, 42.8…

Read More

‘பேட்ஏஸ் (BADASS)’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ படத்துக்கு இறுதியாக இசையமைத்திருந்தார் அனிருத். அதனைத் தொடர்ந்து நானி நடித்து வரும் ‘தி பாரடைஸ்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் புதிய படமொன்றுக்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார். நாக வம்சி தயாரிப்பில் சித்து நடிக்கவுள்ள படம் ‘பேட்ஏஸ்’. ரவிகாந்த் இயக்கவுள்ள இப்படத்துக்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. முழுக்க தெலுங்கு திரையுலகினரை கலாய்த்து இப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழில் ‘ஜனநாயகன்’, ‘ஜெயிலர் 2’, ‘எல்.ஐ.கே’, ‘அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம்’, ‘வெற்றிமாறன் – சிம்பு இணையும் படம் ’ உள்ளிட்ட பல படங்களுக்கு பணிபுரிந்து வருகிறார் அனிருத். இவை தவிர்த்து தெலுங்கிலும் அனிருத் கவனித்து செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More

‘ட்யூட்’ படத்தின் தமிழக விநியோக உரிமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’. இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என தெரிகிறது. கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. இதில் சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து வருகிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக நிக்கித் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘ட்யூட்’ படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்று பிரதீப் ரங்கநாதன் பாடி 3-வது பாடல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகமாகவுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

Read More

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் இறப்புக்கு காரணமாக கூறப்படும் இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ளது. உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஒன்று முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரத்தில் செயல்படும் சென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரண்டு இருமல் மருந்துகளை அக் குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக மத்தியப் பிரதேச உணவு, மருந்து கட்டுப்பாட்டுத்துறை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் எஸ்.குருபாரதி தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில்…

Read More

தனுஷின் வேகத்தால் இணையத்தில் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘தேரே இஸ்க் மெயின்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனிடையே வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் பேட்டியொன்றில், பிப்ரவரியில் தனுஷ் – விக்னேஷ் ராஜா படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் ஜூலையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதன் முழுப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. எடிட்டிங் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, காட்சிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ‘போர் தொழில்’ படத்தைப் போலவே இப்படத்தினையும் முழுக்க த்ரில்லர் பின்னணியிலேயே உருவாக்கி இருக்கிறார் விக்னேஷ் ராஜா.

Read More

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்ட செயதிக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளியை முன்னிட்டு அக்.5, 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

கரூர் சம்பவத்தினால் ‘ஜனநாயகன்’ படத்தின் விளம்பரப்படுத்தும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் சிறிய டீஸர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதன் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரூர் துயரச் சம்பவத்தினால் தற்போது இப்பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு. கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தினை முன்வைத்து விஜய்யை பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும், நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் கைதும் நடைபெற்று வருகிறது. இதனை முன்வைத்தே பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது படக்குழு. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. தீவிர அரசியலுக்கு வரும் முன் விஜய் நடித்த கடைசிப் படம் என்பதால்,…

Read More

“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் கட்சிகளைத் தேடி தூதுவர்களை அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் தான், பழைய பகையை எல்லாம் மறந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தேடிச் சென்று சந்தித்துப் பேசி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். பாமகவில் தந்தை – மகன் அரசியல் யுத்தம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்வதால், இவர்களில் யாரை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறது அதிமுக. திமுக-வையும் முதல்வர் ஸ்டாலினையும் அன்புமணி மிகக் கடுமையாக சாடுவதால் அவர் தங்கள் பக்கம் தான் வருவார் எனக் கணிக்கும் அதிமுக, அவர் மட்டும் வந்தால் போதாது ராமதாஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாமக-வும் தங்கள் அணிக்கு வந்தால் தான் பலம் சேர்க்கும் என நினைக்கிறது.…

Read More