Author: admin

புதுடெல்லி: சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் 31 வயதில் நாட்டின் இளம் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ‘எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2025’ வெளியாகி உள்ளது. இதில், ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள 1,687 பேர் இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 284 பேர் கூடுதலாக இடம்பிடித்துள்ளனர். இதில் 148 பேர் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31) முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி ஆகும். மேலும் 1 பில்லியன் டாலருக்கு மேல் (ரூ.8,900 கோடி) சொத்து வைத்துள்ள 350 இந்தியரில் இளையவர் (இளம் பில்லியனர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்டார்ட்-அப் நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனிவாஸ், தகவல் தொடர்பு முறையை வேகமாக மாற்றி வரும் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.…

Read More

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த இளம் பல் மருத்​து​வர், அமெரிக்​கா​வில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்​லப்​பட்​டார். ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர் பிடிஎஸ் பட்​டப்​படிப்பை முடித்து விட்​டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்​படிப்​புக்​காக அமெ ரிக்​கா​வின் டெக்​ஸாஸ் மாகாணத்​தில் உள்ள டல்​லஸ் நகரில் குடியேறி​னார். கடந்த 6 மாதங்​களுக்கு முன்பு மேற்​படிப்பு முடித்த சந்​திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்​கொண்​டே, ஒரு காஸ் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று அதி​காலை​யில் அடை​யாளம் தெரி​யாத நபர் சந்​திரசேகரை துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​று​விட்டு தலைமறை​வாகி விட்​டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலே சந்திரசேகரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். தங்​களது மகன் உயர்ந்த அந்​தஸ்தை அடை​வான் என்று நம்​பிய அந்த பெற்​றோர் அப்​படியே உறைந்து போயுள்​ளனர். அவர்​களை நேற்று நேரில் சந்​தித்த முன்​னாள் அமைச்​சர் ஹரீஷ் ராவ், பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ சுதீர் ரெட்டி ஆகியோர் இரங்​கல்…

Read More

டோக்கியோ: ஜப்​பான் நாட்​டின் முதல் பெண் பிரதம​ராக சனே டகைச்சி தேர்ந்​தெடுக்​கப்​படு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஜப்​பான் நாட்​டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) ஆட்​சி​யில் உள்​ளது. இக்​கட்​சி​யின் தலை​வர் மற்​றும் ஜப்​பான் பிரதமர் ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதற்​கிடை​யில், ஜப்​பான் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்​பான்மை இழந்​தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜி​னாமா செய்​தார். அதனால், ஆளும் லிபரல் டெமாக்​ரடிக் கட்​சி​யின் புதிய தலை​வரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் நேற்று டோக்​கியோ​வில் நடை​பெற்​றது. இதில் முன்​னாள் பொருளா​தார பாது​காப்பு அமைச்​சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்​சர் ஷிஞ்​சிரோ கொய்​சுமி ஆகியோர் போட்​டி​யிட்​டனர். முதல் கட்​ட​மாக கட்​சிக்​குள் நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் சனே டகைச்சி வெற்றி பெற்​றார். உட்​கட்சி தேர்​தலில் சனே 183 வாக்​கு​களும் கொய்​சுமி 164 வாக்​கு​களும் பெற்​றனர். இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்​சித் தலை​வ​ராக சனே…

Read More

புதுடெல்லி: கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வது தொடர்​பான மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி​ வைத்த ஆளுநரின் நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு ரிட் மனு தாக்​கல் செய்​துள்​ளது. சட்​டப்​பேர​வை​யில் கடந்த மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் 2025-26-ம் நிதி ஆண்​டுக்​கான பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்​றது. இதில், முன்​னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்​பகோணத்​தில் ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ உரு​வாக்​கு​வதற்​கான மசோதா தாக்​கல் செய்​து, நிறைவேற்​றப்​பட்​டது. தொடர்ந்​து, ஆளுநர் ஒப்​புதலுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் நிலு​வை​யில் வைத்​திருந்த ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, பின்​னர் குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்​காக அனுப்பி வைத்​தார். பல்​கலைக்​கழக மானியக் குழு (யுஜிசி) விதி​கள், துணைவேந்​தர் நியமன மசோதா உள்​ளிட்​டவை தொடர்​பாக பல்​வேறு வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள நிலை​யில், குடியரசுத் தலை​வருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்​கப்​பட்​ட​தாக கூறப்​பட்​டது. இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய ‘கலைஞர் பல்​கலைக்​கழகம்’ தொடர்​பான மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்​பி வைத்த…

Read More

ஜெருசலேம்: இஸ்​ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்​டு​வரும் முயற்​சி​யாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 20 அம்ச அமைதி திட்​டத்தை அறி​வித்​தார். இதை ஏற்​ப​தாக இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு அறி​வித்​தார். எனினும் ஹமாஸ் அமைதி காத்​த​தால் அதற்கு ட்ரம்ப் 3 நாள் கெடு விதித்​தார். இந்​நிலை​யில் அமை​திக்கு ஹமாஸ் தயா​ராக இருப்​ப​தாக​வும் பிணைக் கைதி​களை விடுவிக்க ஒப்​புக்​கொண்​டுள்​ள​தாக​வும் பிற நிபந்​தனை​கள் சில​வற்றை ஏற்​றுக்​கொண்​டுள்​ள​தாக​வும் ட்ரம்ப் அறி​வித்​தார். மேலும் காசா மீது குண்டுவீச்சை நிறுத்துமாறு இஸ்ரேலை கேட்டுக்கொண்டார். இந்​நிலை​யில் ட்ரம்​பின் இந்த அறி​வுரைக்கு அடுத்த சில மணி நேரத்​தில் காசா​வில் இஸ்​ரேலிய துப்​பாக்​கிச் சூட்​டில் 6 பேர் கொல்​லப்​பட்​ட​தாக உள்​ளூர் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். முன்​ன​தாக ஹமாஸின் ஒப்​புதலை தொடர்ந்து இஸ்​ரேலிய பிரதமர் நெதன்​யாகு​வின் அலு​வல​கம் நேற்று அதி​காலை, “இஸ்​ரேலிய பிணைக் கைதிகளை விடு​விப்​ப​தற்​கான டிரம்ப் அமைதி திட்​டத்​தின் முதல் கட்​டத்தை செயல்​படுத்த இஸ்​ரேல் தயா​ராகி வரு​கிறது’’ என அறி​வித்​தது. மேலும் கா​சா​வில்…

Read More

சென்னை: திருச்​சி, மதுரை, சேலம் உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இது தொடர்​பாக மண்டல சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வடகிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் தீவிர புயல் ‘சக்​தி’ நில​வு​கிறது. இது இன்று அரபிக்​கடல் பகு​தி​களில் வடகிழக்கு திசை​யில் நகர்ந்து படிப்​படி​யாக வலு​விழக்​கக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. தமிழகப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (அக்​.5) பெரும்​பாலான இடங்​களி​லும், நாளை முதல் முதல் வரும் 10-ம் தேதி வரை சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இன்று கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலம், திருப்​பத்​தூர், நாமக்கல், திருச்​சி, திண்​டுக்​கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்​றும் ராம​நாத​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.…

Read More

சென்னை: அரசு தொடக்​கப் பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் தரநிலை அறிக்​கையை பயன்​படுத்த வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: எண்​ணும் எழுத்​தும் திட்​டத்​தின்​கீழ் நடப்பு கல்வி ஆண்​டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கும் தரநிலை அறிக்கை அச்​சிட்டு அனைத்து மாவட்​டங்​களுக்​கும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை மாணவர் எண்​ணிக்​கைக்கு ஏற்ப அரசுப் பள்​ளி​களுக்கு பிரித்து வழங்க வேண்​டும். இந்த அறிக்​கையை எவ்​வாறு பயன்​படுத்த வேண்​டும் என்​பது குறித்து வழி​காட்​டு​தல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதை பின்​பற்றி செயல்​படு​மாறு தலைமை ஆசிரியர்​களை அறி​வுறுத்த வேண்​டும். இதுத​விர, தரநிலை அறிக்​கை​யில் மாணவர்​களின் அடிப்​படை விவரங்​களை நிரப்​பி, அவரது பாஸ்​போர்ட் அளவு புகைப்​படத்தை ஒட்ட வேண்​டும். ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் மொத்த வேலை நாட்​கள், மாணவர் பள்​ளிக்கு வந்த நாட்​களின் எண்​ணிக்​கையை நிரப்ப வேண்​டும்.…

Read More

புதுடெல்லி: மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற விழாவில், இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். குறிப்பாக, ரூ.60,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஐடிஐக்கள் மூலம் பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் அளிக்கும் திட்டத்தை (பிஎம்-எஸ்இடியு) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி நிதியுதவி வழங்க உள்ளன. இதன்படி, நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ கல்வி நிறுவனங்களில் புதிய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உலகத் தரத்தில் சிறப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்பட…

Read More

சென்னை: தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகள் மற்றும் சாலை பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார் கடந்த 3-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கரூரில் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, சம்பவ இடத்தில் இருந்த கட்சித் தலை வரும், பிற நிர்வாகிகளும் தங்களுக்கும், நடந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல நடந்துகொண்டுள்ளனர். நெரிசலில் சிக்கியவர்களுக்கோ, தங்களது ஆதரவாளர்களுக்கோ அவர்கள் எந்த…

Read More

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில், விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கியது தங்கத் தகடுகள் அல்ல; செம்பு கலக்கப்பட்டவை என்று தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வெளிப்புறம் மற்றும் பீடத்துடன் கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு கடந்த 1999-ம் ஆண்டு தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டன. இதற்கு முன்னாள் தொழிலதிபர் விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கிய 30 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 2 துவாரபாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீது உள்ள தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தரப்பட்டது. பணி முடிந்த பிறகு, சென்னையில் உள்ள பிரபல நடிகர் ஜெயராம் வீட்டுக்கு அந்த தகடுகளை கொண்டு சென்று பூஜை போட்டுள்ளனர். அப்போது ஜெயராம் தட்சிணையாக பணம் கொடுத்துள்ளார். பின்னர் தங்க முலாம் பூசிய தகட்டை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையே, 42.8…

Read More