காரைக்கால்: இந்திய கடலோர காவல் படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பல், காரைக்காலில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய கடலோர காவல் படையின் காரைக்கால் மையம் நிரவி பகுதியில் செயல்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் உள்ள அதானி கப்பல் துறைமுகத்தில் உள்ள தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்கள், படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த மையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், கோவா கப்பல் கட்டும் தளத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட ‘அக் ஷர்’ என்று பெயரிடப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா காரைக்கால் துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் தீப்தி மொஹில் சாவ்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கப்பலை இயக்கி வைத்துப் பேசியதாவது: இந்திய கடலோர காவல் படையின் மேம்பாட்டுக்கு அக் ஷர் ரோந்துக் கப்பல் பெரிதும் உதவும். 60 சதவீதம் உள்நாட்டுப் பொருட்கள், தளவாடங்களை…
Author: admin
விஜயவாடா: ஆந்திராவில் ஆட்டோ, டாக்ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று விஜயவாடாவில் தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ‘ஆட்டோ ஓட்டுநர்களின் சேவையில்’ எனும் புதிய திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அறிவித்ததை போலவே அறிவிக்கப்பட்ட தேதியில், இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதிலும் ஆட்டோ, டாக்ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இத்தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.436 கோடி செலவாகும். இதன் மூலம் 2.64 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்கள், 20,072 டாக்ஸி ஓட்டுநர்கள், 6,400 மேக்ஸி கேப் ஓட்டுநர்கள் என மொத்தம் 2.90 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.…
புதுடெல்லி: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க கோரி ஹிமான்ஷு குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சந்துருக்கர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மே 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்தபோது, யுபிஎஸ்சி சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் நாளை மீண்டும் விசாரிக்கவுள்ள நிலையில், யுபிஎஸ்சி ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. முதல்நிலை தேர்வு முடிந்த உடனே விடைக் குறிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மூலவர்: ஸ்ரீபகவத் படித்துறை விநாயகர் தல வரலாறு: வேதாரண்யத்தில் ஸ்ரீபகவர் மகரிஷி தன் சீடருடன் வசித்து வந்தார். முனிவரின் தாயார் இறக்கும் தருவாயில் அவரிடம், “நான் இறந்ததும் என் அஸ்தியை கலசத்தில் சேகரித்து புனிதத் தலங்களுக்கு எடுத்துச் செல். எங்கு என்னுடைய அஸ்தி மலர்களாக மாறுகிறதோ, அங்கு ஓடும் புனிதநதியில் கரைத்து விடு” என்று கூறிவிட்டு உயிர் துறந்தார். இதனால் ஸ்ரீ பகவர் தன் சீடருடன் தாயாரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை சென்றார். அவர் கும்பகோணம் (குடந்தை) வந்து காவிரி நதியில் நீராடும்போது, சீடனுக்கு பசி காரணமாக ஏதாவது பலகாரம் இருக்கும் என்று அஸ்திக் கலசத்தை திறந்து பார்க்க அதில் மலர்கள் இருக்கக் கண்டு ஏமாற்றம் அடைந்து முன்பு இருந்தது போல மூடிவைத்து விடுகிறார். இச்செயல் குருவுக்கு தெரியாது. காசியில்தான் அஸ்தி மலருமென்று எண்ணிய குருநாதர் காசியிலும் மலராதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது குடந்தையில் நடந்ததை சீடர் குருவிடம்…
தொப்பை கொழுப்பு என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது வளர்சிதை மாற்றம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அமைதியாக பாதிக்கும். குடல் சுகாதார நிபுணர் பிரசாந்த் தேசாய்ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணர், தொப்பை கொழுப்பை இழப்பதற்கான ரகசியம் தீவிர உணவுகள் அல்லது முடிவற்ற கார்டியோவைப் பற்றியது அல்ல என்பதை வலியுறுத்துகிறது. இது குடலைப் புரிந்துகொள்வது, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது மற்றும் இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் எளிய பழக்கங்களை உருவாக்குவது பற்றியது. வெறும் 15 நாட்களில் தொப்பை கொழுப்பை உருக உதவும் 10 நடைமுறை வழிகள் இங்கே.
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாட்னாவில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் நவம்பரில் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் சார்பில் பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், பிரதான எதிர்க்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர்…
திருமலை: புரட்டாசி மாதம் முழுவதும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஏற்கெனவே பிரம்மோற்சவ விழாவில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். பிரம்மோற்சவத்தின் 9 நாட்களில் பக்தர்கள் சுமார் ரூ.25 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தினர். பிரம்மோற்சவ விழா முடிந்த நிலையில், நேற்று 3-வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, வெள்ளிக்கிழமை முதலே திருமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் திருமலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய மழை பெய்ததால், பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் சுவாமியை 73,581 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 28,976 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.60 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தினர். தர்ம தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 15 முதல் 18 மணி நேரம் ஆனது. இதற்காக கோயிலுக்கு வெளியே சுமார் 3 கி.மீ. தூரம் வரை…
புதுடெல்லி: சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் 31 வயதில் நாட்டின் இளம் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். ‘எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2025’ வெளியாகி உள்ளது. இதில், ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள 1,687 பேர் இடம்பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 284 பேர் கூடுதலாக இடம்பிடித்துள்ளனர். இதில் 148 பேர் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31) முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி ஆகும். மேலும் 1 பில்லியன் டாலருக்கு மேல் (ரூ.8,900 கோடி) சொத்து வைத்துள்ள 350 இந்தியரில் இளையவர் (இளம் பில்லியனர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்டார்ட்-அப் நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனிவாஸ், தகவல் தொடர்பு முறையை வேகமாக மாற்றி வரும் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.…
ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர், அமெரிக்காவில் நேற்று காலை மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்டார். ஹைதராபாத் பிஎன் நகரைச் சேர்ந்தவர் போலே சந்திரசேகர். இவர் பிடிஎஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு, கடந்த 2023-ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெ ரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் நகரில் குடியேறினார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேற்படிப்பு முடித்த சந்திரசேகர், அங்கு ஒரு நிரந்தர வேலையை தேடிக்கொண்டே, ஒரு காஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர் சந்திரசேகரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலே சந்திரசேகரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது மகன் உயர்ந்த அந்தஸ்தை அடைவான் என்று நம்பிய அந்த பெற்றோர் அப்படியே உறைந்து போயுள்ளனர். அவர்களை நேற்று நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ், பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ சுதீர் ரெட்டி ஆகியோர் இரங்கல்…
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் நாட்டில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் தலைவர் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கிடையில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தது. இதனால் பிரதமர் பதவியை ஷிகெரு கடந்த மாதம் ராஜினாமா செய்தார். அதனால், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று டோக்கியோவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே டகைச்சி (64), வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். முதல் கட்டமாக கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றார். உட்கட்சி தேர்தலில் சனே 183 வாக்குகளும் கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவராக சனே…
