பரேலி: உத்தரபிரதேசம், கான்பூர் மாவட்டம் ராவத்பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்கிய பேனர்களையும் கொண்டு சென்றனர். இதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக செப்டம்பர் 26-ம் தேதி இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இந்நிலையில், பரேலி நகரில் டாக்டர் நபீஸ் அகமதுக்கு சொந்தமான ராஸா பேலஸ் என்ற திருமணம் மண்டபத்தை மாவட்ட வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் போலீஸாரின் உதவியுடன் நேற்று இடித்தனர். கட்டுமான விதிகள் மீறப்பட்டுள்ளதால் அந்தக் கட்டிடத்தை இடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பரேலி நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்று இடித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுபோல பர்ஹத் என்பவருக்கு சொந்தமான வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சமீபத்தில் நடந்த வன்முறையைத் தூண்டியதாக…
Author: admin
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (81). காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். வைகோ நலமுடன் இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்: தெலங்கானாவில் தசரா பண்டிகையை கொண்டாட மாமியார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டது. அதோடு மருமகனுக்கு ஒரு சவரன் நகை பரிசாக வழங்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கும் வாரங்கலை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு நவராத்திரி பண்டிகை வந்ததால் புதுமண தம்பதியினர் கொத்தகோட்டாவிற்கு வரும்படி பெண் வீட்டார் அழைப்பு விடுத்தனர். இதையேற்று சுரேஷும் சிந்துவும் கொத்தகோட்டாவுக்கு சென்றனர். பெண் வீட்டார் சார்பில் புதுமண தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மருமகனுக்காக 101 வகையான உணவுகளை சமைத்து தருவதாக மாமியார் உறுதி அளித்திருந்தார். அதில் ஒன்று குறைந்தால்கூட ஒரு சவரன் நகை போட வேண்டும் என்று நகைச்சுவைக்காக மருமகன் நிபந்தனை விதித்தார். இந்த சூழலில் 60 இனிப்பு வகைகள், முறுக்கு, சீடை என 30 அரிசி மாவு வகைகள்,…
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நேற்று ஒப்படைத்தார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார். இவ்வழக்கில் முதலில் விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம்…
சில நேரங்களில் அதிகப்படியான உணவு என்பது தன்னைக் கட்டுப்படுத்தாததற்கான காரணம் அல்ல, உண்மையில், தொடர்ச்சியான மன அழுத்தமும் அதிகப்படியான உணவை உட்கொள்வதற்கு வழிவகுக்கும். கார்டிசோல் வெளியிடப்படும் போது ஆய்வுகள் காட்டுகின்றன, இது பசியை அதிகரிக்கிறது. ‘மன அழுத்தம் சாப்பிடுவது’ என்று ஒரு சொல் உள்ளது, அதன் பின்னால் ஹார்மோன்கள் உள்ளன. இதேபோல், தூக்கமின்மையும் கார்டிசோலை வெளியிடலாம், இதனால், ஒரு நபரை மன அழுத்தத்தை உண்ணும் ஒரு கட்டத்திற்கு தள்ளும். தூக்க அட்டவணையை சரிசெய்தல், தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளை மன அழுத்தத்தை வெளியிடுவதற்கு மாற்றியமைப்பது, அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியதால் அதிகப்படியான உணவைத் தர உதவும்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மேரிலாந்தில் உள்ள இஸ்கான் கோவிலில் துசெஹ்ராவின் “துடிப்பான” கொண்டாட்டத்தில் சேர்ந்தது, மேலும் ஆன்மீகம் மற்றும் இடைக்கால நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் இஸ்கான் நடித்த பாத்திரத்தை பாராட்டினார்.விவரங்களை அமெரிக்காவில் இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) எக்ஸ்.”தூதரகம் இஸ்கான் கோயிலில் துடிப்பான துசெஹெரா கொண்டாட்டங்களில் இணைந்தது, எம்.டி.இந்த நிகழ்வில் லெப்டினன்ட் கோவ் அருணா மில்லர் மற்றும் பல மேரிலாந்து மாநில அரசு பிரமுகர்கள் மற்றும் அமைச்சர் பொருளாதார மற்றும் அமைச்சர் (சி.ஏ & பி), ஈ.ஓ.ஐ.முன்னதாக, ஜனாதிபதி த்ரோபாடி முர்மு, விஜயதாஷாமி முன்னிலையில் தேசத்திற்கு வாழ்த்தியதில், திருவிழாவின் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை எடுத்துரைத்தார்.தனது செய்தியில், ஜனாதிபதி, “விஜயதாஷாமியின் நல்ல சந்தர்ப்பத்தில், எனது அன்பான வாழ்த்துக்களையும் சக குடிமக்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.”அதர்மா மீது தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் விஜயதாஷாமியின் திருவிழா, உண்மை மற்றும் நீதியின் பாதையைப் பின்பற்றுவதற்கு நம்மைத் தூண்டுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரவணா…
புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்களுக்கு முன்னர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது இஐஏ பல்லைக்கழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்தியாவில் பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ளன. ஜனநாயக அமைப்பு அனைவருக்கும் இடமளிக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது. தற்போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலைமையிலான அரசின் கீழ் பல திசைகளில் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது’’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் கூறியதாவது: அடிப்படை இல்லாத விஷயங்களை எல்லாம் ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசி வருகிறார். வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்திய அரசின் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார். அந்த பேச்சுகள், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் அரசு கொள்கைகளைப்…
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அணியில் தொடர்கிறார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நேற்று தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதுநாள் வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் அணியில் ரோஹித் சர்மா, விராட்…
தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரூர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புடனும், நிதானமாகவும் செயல்பட்டு வருகிறார். யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் முதல்வருக்கு இல்லை என்று தெரிகிறது. 41 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசுக்கு உள்ளது. ஆனால், விஜய் கைது செய்யப்படவில்லை. நான் அரசுக்கு ஆதரவாகப் பேசவில்லை. நடுநிலையாகப் பார்க்கும்போது, எல்லாம் சரியாக தான் நடக்கிறது. தவெகவும் திட்டமிட்டு செய்யவில்லை. நிர்வாகிகளுக்கு அனுபவம் குறைவு என்பதால் விபத்து நடந்துள்ளது. விஜய் தார்மிகப் பொறுப்பு ஏற்றிருந்தால், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்காது. ஆனால், தங்களின் மீது பழி வந்துவிடும் என ஆலோசகர்களோ, வழக்கறிஞர்களோ கூறியதால், விஜய் அமைதியாக இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். இவ்விவகாரத்தில் பல தலைவர்கள் நிதானமாக பேசினார்கள். ஆனால், எம்.பி.க்கள் குழு அமைத்து, பழனிசாமிக்கு நிகராக பாஜக அரசியல்…
காரைக்கால்: இந்திய கடலோர காவல் படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பல், காரைக்காலில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய கடலோர காவல் படையின் காரைக்கால் மையம் நிரவி பகுதியில் செயல்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் உள்ள அதானி கப்பல் துறைமுகத்தில் உள்ள தளத்தில் இருந்து கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்துக் கப்பல்கள், படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த மையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், கோவா கப்பல் கட்டும் தளத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட ‘அக் ஷர்’ என்று பெயரிடப்பட்ட அதிநவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா காரைக்கால் துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் தீப்தி மொஹில் சாவ்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, கப்பலை இயக்கி வைத்துப் பேசியதாவது: இந்திய கடலோர காவல் படையின் மேம்பாட்டுக்கு அக் ஷர் ரோந்துக் கப்பல் பெரிதும் உதவும். 60 சதவீதம் உள்நாட்டுப் பொருட்கள், தளவாடங்களை…
