Author: admin

புவனேஸ்வர்: ‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த சகிகோபாலிலிருந்து ‘விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்’ திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் பிரச்சாரம் மே 29 முதல் ஜூன் 12 வரை 15 நாட்களுக்கு 20 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும். 731 வேளாண் அறிவியல் மையங்கள், 113 ஐசிஏஆர் நிறுவனங்கள், மாநில அளவிலான துறைகள் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், “நமது விஞ்ஞானிகளை நான் வாழ்த்துகிறேன். இனிமேல், ​​டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது.…

Read More

சாத்தூர்: “பாமக ஒரு சாதி கட்சி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்பாவும் மகனும் பொழுதுபோக்காக இதைச் செய்கிறார்கள்,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் திறப்பு விழா இன்று (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு நிழற்குடை மற்றும் கலையரங்கத்தை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக தலைவர் விஜய்யை இளம் காமராஜர் என கல்வி விருது வழங்கும் விழாவில் கூறியது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான். அவரைப்போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது. மேலும், காமராஜர் செய்த சாதனைகளை வேறு யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு…

Read More

ஹைதராபாத்: தெலங்கானாவில் 17 மாவோயிஸ்ட்கள் நேற்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் சரண் அடைந்தனர். இதுகுறித்து கொத்தகூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக மாவோயிஸ்ட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்கவுன்ட்டர்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். சத்தீஸ்கர், ஒடிசா மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் தலைவர்கள், கமாண்டர்களும் இறந்துள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பலர் தங்கள் தவறை உணர்ந்து சரண் அடைகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 282 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்து மீண்டும் மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். தற்போது கொத்தகூடம் பகுதியில் 17 மாவோயிஸ்ட்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார்கள். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தமிழரசன் பச்சமுத்து. தற்போது ‘லப்பர் பந்து’ படத்தை ஷாரூக்கான் இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக ஸ்வாசிகா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தனது கதாபாத்திரத்தில் தானே நடிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியில் ‘லப்பர் பந்து’ விரைவில் ரீமேக் ஆகவிருப்பது உறுதியாகி இருக்கிறது. தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read More

தைலாபுரம்: “நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். அதாவது, யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போய்விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் இருக்கிறேன்,” என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 31) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இதை நான் சொல்லக்கூடாது. சொன்னால் பாமக நிறுவனர் ராமதாஸ் என் மீது கோபப்படுவார். வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம். செய்தியாளர்கள் ஏதாவது கேட்பார்கள், எனவே செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அது பெரிய செய்தி ஆகிவிட்டது. அதன் தொடர் நிகழ்வுகள் மனதை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாமக…

Read More

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட, (பெரும்பாலும்) மீளமுடியாத மற்றும் வாழ்நாள் முழுவதும் உலகளாவிய மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. ஒரு நாள்பட்ட நிலை, போதிய இன்சுலின் உற்பத்தி இல்லாததால் அல்லது உடலின் இன்சுலின் திறம்பட பயன்படுத்த இயலாமை காரணமாக உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், நீரிழிவு உங்கள் இதயம், நரம்புகள் மற்றும் கண்பார்வை ஆகியவற்றைக் கூட சேதப்படுத்தும். நல்ல செய்தி என்னவென்றால், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான மருந்துகள் மூலம், இந்த நிலையை எளிதில் நிர்வகிக்க முடியும், மேலும் அதிக சர்க்கரை அளவைக் கொண்ட பெரும்பாலான நோயாளிகள் முழு உயிர்களை வழிநடத்துகிறார்கள்.இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் கொண்டுவரும் எந்த உணவும் இருக்கிறதா?நீரிழிவு நோயாளிகளுக்கு, சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியமானவை என்றாலும், சில இயற்கை உணவுகள்…

Read More

போபால்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையின் “துணிச்சலான மகள்கள்” தனித்துவமான வீரத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். போபாலில் நடந்த லோகமாதா தேவி அஹில்யாபாய் பெண் சக்தி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “சக்தி வழிபாட்டின் போது, ​​நாம் குங்குமம் வழங்குகிறோம். இது இன்று இந்தியாவின் வீரத்தின் அடையாளமாக மாறியுள்ளது. பஹல்காமில், பயங்கரவாதிகள் இந்தியர்களின் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரத்தையும் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தை பிளவுபடுத்த முயன்றனர். மேலும், இந்த பயங்கரவாதிகள் இந்தியாவின் பெண் சக்திக்கு சவால் விடுத்தனர். அது இப்போது பயங்கரவாதிகளையும், அவர்களைக் கையாளுபவர்களையும் திருப்பி தாக்கி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாகும். பாகிஸ்தான் ராணுவம் நினைத்துக்கூட பார்க்காத பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நமது படைகள் அழித்தன. பயங்கரவாதத்தின் மூலம் மறைமுகப் போர்களை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை…

Read More

மும்பை: வளர்ந்து வரும் மகளிர் அணிகள் பங்​கேற்​கும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் அடுத்த மாதம் இலங்​கை​யில் நடை​பெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் செப்​டம்​பர் மாதம் ஆடவருக்​கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த இரு தொடர்​களில் இருந்​தும் இந்​திய அணி வில​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகின. ஆப​ரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை தொடர்ந்து பாகிஸ்​தானுடன், கிரிக்​கெட் போட்​டிகள்விளை​யாடுவதை தவிர்க்​கும் பொருட்டு இந்த நடவடிக்​கையை பிசிசிஐ எடுத்​துள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாயின. ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலின் தலை​வ​ராக தற்​போது பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​வர் மொஹ்சின் நக்வி உள்​ளார். இவர், பாகிஸ்​தான் அரசாங்​கத்​தின் உள்​துறை அமைச்​ச​ராக​வும் உள்​ளார். இதன் காரண​மாகவே பிசிசிஐ, ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலக முடிவு செய்​துள்​ள​தாக​வும் அதி​காரப்​பூர்​வ​மற்ற தகவல்​கள் வெளி​யாயின. இந்​நிலை​யில் ஆசிய கோப்​பை​யில் இருந்து இந்​திய அணி வில​கு​வ​தாக வெளி​யான…

Read More

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க புதிய படம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் மகேஷ் நாராயணன். தற்போது மம்முட்டி, மோகன்லால், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார். மும்பையில் சல்மான்கான் – மகேஷ் நாராயணன் முதற்கட்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது. வரும் மாதங்களில் மீண்டும் இருவரும் சந்தித்து முழுக்கதை விவாதம் நடைபெற இருக்கிறது. அந்தச் சந்திப்பு முடிந்தவுடன் இருவரும் இணைவார்களா என்பது தெரியவரும். இப்படத்தை சல்மான்கானின் சகோதரி அல்விரா கான் மற்றும் அவரது கணவர் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். சல்ம்கான் கான் – மகேஷ் நாராயணன் இணையும் படம் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Read More

சென்னை: “மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். திருக்குறளின் மேன்மை அறிந்த மகாகவி பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என அவரை போற்றிக் கொண்டாடினார். நோபல் பரிசு பெற்ற மாமனிதர் ஆல்பர் சுவைட்சர் “வள்ளுவரின் அறநெறியில் காணும் பேரறிவு, உலக இலக்கியங்களில் அரிதாகவே இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் திருக்குறளை…

Read More