Author: admin

துஷான்பே: நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெற்ற பனிப்பாறைகள் குறித்த முதல் ஐ.நா.மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பயங்கரவாதத்தின் மூலம் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்று குற்றம்சாட்டினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், “இந்த மன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும், மன்றத்தின் எல்லைக்குள் வராத பிரச்சினைகள் குறித்து தேவையற்ற குறிப்புகளைக் கொண்டுவருவதற்கும் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை கண்டு நாங்கள் திகைக்கிறோம். அத்தகைய முயற்சியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து சூழ்நிலைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாற்றங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்கள்தொகை மாற்றங்கள்,…

Read More

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக பேட்டை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள். வினாத்தாளை தேர்வாணையருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம் பட்டப்படிப்பில் தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ட்ரியல் லா) என்ற பாடத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி பேட்டை காவல் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். கடந்த 27-ம்…

Read More

டோக்கியோ: ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள முக்கிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் இன்று (மே 31) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள நாட்டின் 2-வது பெரிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் சனிக்கிழமை (மே 31) பிற்பகலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 20 கி.மீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

Read More

பிருத்விராஜ் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொம்பாலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஹ்ரித்திக் ரோஷன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் இயக்குநர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை. தற்போது இதன் இயக்குநர் பிருத்விராஜ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. ‘சலார்’ படத்தில் நடித்ததன் மூலம் ஹொம்பாலே நிறுவனத்துடன் பிரித்விராஜுக்கு நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹொம்பாலே நிறுவனம் படம் ஒன்றை பிருத்விராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது அப்படத்தில் தான் ஹ்ரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ‘லூசிஃபர்’ படத்தின் வெற்றிக்குப் பின், ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். அதனைத் தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் படத்தின் பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அடுத்த ஆண்டு இறுதியாகும் எனக்…

Read More

சென்னை: தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்க நகைக் கடன் பெற புதிய விதிமுறைகளை உடனே திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய விதிமுறை ரத்து செய்க; பெருநிறுவனங்களுக்கு துணை போகாதே; ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்காதே என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிருபர்களிடம் அக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது: பன்நெடும்காலமாக, பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்காக தேசிய வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் நகை கடன் பெறுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசு கடந்த வாரம், நகை கடன் வாங்குவதை குறைத்து, சில…

Read More

பல ஆரோக்கிய ஆர்வலர்கள் பாலைத் தவிர்க்கிறார்கள், இது சளியை ஏற்படுத்துகிறது, கொழுப்பானது, அல்லது ஆரோக்கியமற்றது என்று நம்புகிறார்கள். இருப்பினும், பால் என்பது கால்சியம், வைட்டமின் டி மற்றும் உயர்தர புரதத்தின் வளமான மூலமாகும், இது வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இந்த ஊட்டச்சத்துக்களை மாற்றாமல் பாலைத் தவிர்ப்பது பலவீனமான எலும்புகள், பல் பிரச்சினைகள், தசைப்பிடிப்பு மற்றும் பிற்கால வாழ்க்கையில் ஆஸ்டியோபோரோசிஸ் கூட வழிவகுக்கும். உங்களிடம் உண்மையான ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லையென்றால், பால் உங்கள் உணவின் ஆரோக்கியமான பகுதியாக இருக்கலாம். தயிர் போன்ற பல குறைந்த கொழுப்பு அல்லது புளித்த பால் விருப்பங்களும் ஜீரணிக்க எளிதாக இருக்கும். முறையான மாற்றீடுகள் இல்லாமல் பாலை வெட்டுவது உங்கள் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு தற்செயலாக தீங்கு விளைவிக்கும்.

Read More

புவனேஸ்வர்: ‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த சகிகோபாலிலிருந்து ‘விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்’ திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் பிரச்சாரம் மே 29 முதல் ஜூன் 12 வரை 15 நாட்களுக்கு 20 மாநிலங்களில் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்படும். 731 வேளாண் அறிவியல் மையங்கள், 113 ஐசிஏஆர் நிறுவனங்கள், மாநில அளவிலான துறைகள் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ் சிங் சவுகான், “நமது விஞ்ஞானிகளை நான் வாழ்த்துகிறேன். இனிமேல், ​​டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது.…

Read More

சாத்தூர்: “பாமக ஒரு சாதி கட்சி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்பாவும் மகனும் பொழுதுபோக்காக இதைச் செய்கிறார்கள்,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் திறப்பு விழா இன்று (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு நிழற்குடை மற்றும் கலையரங்கத்தை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக தலைவர் விஜய்யை இளம் காமராஜர் என கல்வி விருது வழங்கும் விழாவில் கூறியது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பெருந்தலைவர் காமராஜர் என்பவர் ஒரே ஒருவர் தான். அவரைப்போல் யாரும் வர முடியாது. இரண்டாம் காமராஜர் மற்றும் இளம் காமராஜர் என யாரையும் கூற முடியாது. மேலும், காமராஜர் செய்த சாதனைகளை வேறு யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது. எனவே மிகைப்படுத்தி பெருந்தலைவருடன் ஒப்பிட்டு…

Read More

ஹைதராபாத்: தெலங்கானாவில் 17 மாவோயிஸ்ட்கள் நேற்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் சரண் அடைந்தனர். இதுகுறித்து கொத்தகூடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் ராஜூ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீப காலமாக மாவோயிஸ்ட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. என்கவுன்ட்டர்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். சத்தீஸ்கர், ஒடிசா மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் தலைவர்கள், கமாண்டர்களும் இறந்துள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பில் உள்ள பலர் தங்கள் தவறை உணர்ந்து சரண் அடைகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 282 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்து மீண்டும் மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். தற்போது கொத்தகூடம் பகுதியில் 17 மாவோயிஸ்ட்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் சரண் அடைந்தனர். இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

‘லப்பர் பந்து’ படத்தை இந்தியில் ஷாரூக்கான் ரீமேக் செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டி இருந்தார்கள். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தமிழரசன் பச்சமுத்து. தற்போது ‘லப்பர் பந்து’ படத்தை ஷாரூக்கான் இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக ஸ்வாசிகா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் தனது கதாபாத்திரத்தில் தானே நடிக்க வேண்டும் என்று ஷாரூக்கான் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியில் ‘லப்பர் பந்து’ விரைவில் ரீமேக் ஆகவிருப்பது உறுதியாகி இருக்கிறது. தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Read More