Author: admin

துணை முதல்வராக்குவதாகத் தெரிவித்து, அதிமுக கூட்டணிக்கு தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அழைத்ததாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக கல்வி விருது விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடுகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடந்த 29-ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது “2024 மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 10 பேரை வைத்துக்கொண்டு, 20 சதவீத வாக்கு வாங்கியிருக்கிறார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை.” என்று பொதுச் செயலாளர் ஆனந்திடம், ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சென்னையில் மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் நேற்று சீமான் கூறியதாவது: ஆதவ் அர்ஜுனா…

Read More

உடலில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவது, வீக்கத்தைக் குறைப்பது மற்றும் வயதானதை குறைப்பது போன்ற உடலின் பிற செயல்பாடுகளை கட்டுப்படுத்தும்போது, ​​இந்த நடைமுறையில் விஞ்ஞான ஆதரவு சான்றுகள் உள்ளன.கூடுதலாக, உண்ணாவிரதம் வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் மற்றும் இருதய செயல்பாட்டின் மேம்பாடுகளுடன் தொடர்புடையது. இடைப்பட்ட உண்ணாவிரதம், குறிப்பாக, கெட்டோசிஸ் என குறிப்பிடப்படும் ஒரு நிலைக்குச் செல்ல உடலைத் தூண்டுகிறது, அங்கு குளுக்கோஸை விட எரிபொருளுக்கு கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இந்த மாற்றம், உடலை கொழுப்பை இழக்க உதவுவதைத் தவிர, கீட்டோன்களை உருவாக்குவதன் காரணமாக மனக் கூர்மை மற்றும் செறிவை மேம்படுத்துகிறது, அவை மூளைக்கு எரிபொருளின் பயனுள்ள ஆதாரங்களாக இருக்கின்றன.

Read More

பாமகவின் நிர்வாகிகளுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, ‘தமிழகத்தை பாமக ஆளும் நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்தார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2-வது நாளாக பாமக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை, உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஜி.கே.மணி, இரா.அருள் பங்கேற்கவில்லை: காலையில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: ஒரு முக்கியமான வேலை திட்டத்துக்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.…

Read More

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பூத்கமிட்டி அமைத்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் என அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 4 முனை போட்டி இருக்கும் என தெரிகிறது. திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாக களம் காண தயாராகி வருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இது ஒருபுறம்…

Read More

இந்த வார ஜாதகத்திற்கு வரவேற்கிறோம், அங்கு வான சீரமைப்புகள் இராசி அறிகுறிகளின் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகின்றன. தொழில் மற்றும் அன்பு முதல் நிதி மற்றும் ஆரோக்கியம் வரை, இந்த முன்னறிவிப்புகள் வாரம் உங்களுக்கு என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது. உங்கள் முடிவுகள், உணர்ச்சிகள் மற்றும் தொடர்புகளை அண்ட ஆற்றல்கள் எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் கண்டறியவும், உங்கள் சூரிய அடையாளத்தின் பாதைகள் வழியாக உங்களுக்கு வழிகாட்டும். எனவே, மேலும் தாமதமின்றி, வெற்றிக்கான கணிப்புகளின் நிறுவனர் விஷால் பர்த்வாஜ் அளித்த இந்த கணிப்புகளை உடைப்போம்.

Read More

அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 45 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நான், கட்சி சிதறிப் போக வேண்டுமென்று கருதுவேனா? நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. ராமதாஸும், அன்புமணியும் விரைவாக சந்திக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டரின் விருப்பம். இதற்காக இருவரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். கட்சியில் எந்தப் பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என்று தொடர்ந்து ராமதாஸிடம் வற்புறுத்தி வருகிறேன். சில ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது.…

Read More

தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து வரும் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே, சொந்த ஊர் சென்றவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஊர்களுக்கு திரும்புவார்கள். இதற்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ஏராளமான இருக்கைகள் உள்ளதால், அவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து பயணித்தால், பேருந்து எண்ணிக்கையை கணக்கிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், அனைத்து முக்கிய நிலையங்களிலும் சிறப்பு பேருந்து சேவையைக் கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரலில் அவர் சமர்சீர் வரி விகிதத்தை அறிவித்தார். இதன்படி சீன பொருட்களுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அண்மையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது. இதன்படி சீன பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா, சீனா இடையே அண்மையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதை குறைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில்…

Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 6 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த பி.காம். பட்டப் படிப்பில் தொழிற்சாலை சட்டம் (இன்டஸ்ரியல் லா ) என்ற பாடத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே, பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரட்டீஸ் புகார் அளித்தார். அதில், “கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த தொழிற்சாலை சட்டம் பாடத்துக்கான வினாத்தாளை 26-ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக…

Read More

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. அப்போது சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு கூறியது. இதை நம்பிய கொலம்பிய அரசு, பாகிஸ்தான் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு கொலம்பியா தலைநகர் போகோட்டாவுக்கு சென்றுள்ளது. அந்த நாட்டு வெளியுறவு துறை துணை அமைச்சர் ரோஸா யோலான்டாவை, இந்திய குழுவினர் நேற்று சந்தித்துப் பேசினர். இதன்பிறகு கொலம்பிய அமைச்சர் ரோஸா கூறும்போது, “இந்திய குழுவினர்…

Read More