முடி உதிர்தல் என்பது கீமோதெரபியின் மிகவும் பொதுவான மற்றும் உணர்ச்சி ரீதியாக சவாலான பக்க விளைவுகளில் ஒன்றாகும், இது சுயமரியாதை, அடையாளம் மற்றும் சமூக நம்பிக்கையை பாதிக்கிறது. கீமோதெரபி-தூண்டப்பட்ட அலோபீசியா (சிஐஏ) என அழைக்கப்படும் இது நிகழ்கிறது, ஏனெனில் கீமோதெரபி மருந்துகள், விரைவாகப் பிரிக்கும் புற்றுநோய் செல்களை குறிவைக்கும் அதே வேளையில், மயிர்க்கால்கள் உட்பட வேகமாக வளர்ந்து வரும் பிற உயிரணுக்களையும் சேதப்படுத்துகின்றன. இந்த இடையூறு நுண்ணறைகள் புதிய கூந்தலை உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது, இது மெலிந்து போடுவதற்கு வழிவகுக்கிறது. உச்சந்தலையில் வளர்ச்சி சுழற்சிகள் மற்றும் தனிப்பட்ட உயிரியலைப் பொறுத்து முடி உதிர்தல் ஒட்டுக்கட்டமாக அல்லது சீரானதாக தோன்றும். கீமோதெரபி ஏன் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது நோயாளிகளுக்கு மனரீதியாக தயாரிக்கவும், மாற்றங்களைச் சமாளிக்கவும், முடி மீண்டும் வளர்ந்தது பொதுவாக தற்காலிகமானது என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.கீமோதெரபி ஏன் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது?மயிர்க்கால்கள் விரைவாக பிரிக்கும் சேதம்கீமோதெரபி மருந்துகள் புற்றுநோய்…
Author: admin
போபால்: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்தை பரிந்துரைத்த சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105, 276 மற்றும் மருந்துகள் மற்றும் காஸ்மெடிக்ஸ் சட்டப்பிரிவு 27 ஆகியனவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவரிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிகிறது. முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானில் ஒரு குழந்தை என 12 குழந்தைகள் இருமல் சிரப் உட்கொண்டதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாவில் இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் இறப்புகளுக்கான காரணத்தை கண்டறிவதற்கு தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,…
சென்னை: வள்ளலாரின் பிறந்தநாளான இந்த தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளான இந்த தனிப்பெருங்கருணை நாளில், அவர் கூறிய “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்த் தத்துவ மரபில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர் வள்ளலார். வரையறையற்ற மானுட நேயத்தை முன்வைத்த அவரது கருத்துகள் அன்றைய சூழலில் தேவையும் நியாயமும் கொண்டவையாக இருந்தன. அதன் வீச்சு இன்றளவும் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. ராமலிங்க அடிகள் (Ramalinga Adigal) பற்றி.. l சிதம்பரம் அடுத்த மருதூரில் (1823) பிறந்தார்.…
மாதுளை இயற்கையின் மிகவும் மகிழ்ச்சியான பழங்களில் ஒன்றாகும், வண்ணத்தில் துடிப்பானது, ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது, மற்றும் இனிப்பு, உறுதியான சாற்றால் வெடிக்கிறது. ஆனாலும், சரியானதைத் தேர்ந்தெடுப்பது ஒரு சூதாட்டமாக உணர முடியும். சில நேரங்களில் நீங்கள் ஒரு பழத்தை உலர்ந்த, புளிப்பு அல்லது உள்ளே இருப்பதைக் காண மட்டுமே திறந்து வெட்டுகிறீர்கள். ஒரு மாதுளை பழுத்த, தாகமாக, இயற்கையாகவே இனிமையானதா என்பதை வெளிப்படுத்தும் சில எளிய தந்திரங்களை அறிந்து கொள்வதில் ரகசியம் உள்ளது. அதன் எடை, வடிவம், நிறம், தோல் மற்றும் அது உருவாக்கும் ஒலி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் ஷாப்பிங் செய்யும் ஒவ்வொரு முறையும் சிறந்த மாதுளைத் தேர்ந்தெடுக்கும் கலையை மாஸ்டர் செய்யலாம்.அனார் நன்மைகள்: தினமும் ஒரு கிண்ண மாதுளை சாப்பிட 5 காரணங்கள்இனிமையான மாதுளை கண்டுபிடிக்க 5 எளிதான வழிகள்எடையைச் சரிபார்க்கவும்ஒரு இனிமையான மாதுளை அடையாளம் காண்பதற்கான எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று அதன்…
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அக்டோபர் 7 இல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இதன்மூலம், அவர் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பாலமாக முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது. அநேகமாக இது, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்பாகவே அனைத்துக் கட்சி கூட்டத்தை குடியரசு துணைத் தலைவர் நடத்துவது உண்டு. இந்தமுறை கூட்டத்தொடருக்கு முன்பாகவே புதிய குடியரசு துணை தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறார். அக்டோபர் 7-ம் தேதி மாலையில் நடைபெறும். இக்கூட்டத்திற்கான அறிவிப்பு அவரது அலுவலகத்திலிருந்து வெளியாகி உள்ளது. இது, புதிய குடியரசு துணை தலைவரது எதிர்க்கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் நாடாளுமன்ற அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், ’அனைத்து கட்சி கூட்டத்திற்கு…
சூரி நடித்து வரும் ‘மண்டாடி’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படப்பிடிப்பு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வரும் படம் ‘மண்டாடி’. இதன் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தொண்டி என்ற பகுதியில் கடலில் முக்கிய காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. அப்போது எதிர்பாராத விதமாக கேமரா இருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 2 பேர் கடலில் மூழ்கினர். அவர்களை சுற்றியிருந்தவர்கள் பத்திரமாக மீட்டார்கள். இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், கேமராக்கள் கடல் நீரில் வீழ்ந்ததில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ.1 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் ரெட் டிஜிட்டல் என்ற உயர்ரக கேமராவில் படத்தை படக்குழுவினர் படமாக்கி வந்திருக்கிறார்கள். இந்த விபத்தினால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தாலும், உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்பதால்…
கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (அக்5-ம் தேதி) கரூர் வருகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் அன்றைய தினம் இரவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வந்து உயிரிழந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதியை அறிவித்துச் சென்றார். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அவர் சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், உயிரிழந்தர்கள் குடும்பங்களை சந்தித்து 2 நாட்கள் விசாரணை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர்…
வயிற்று உணவுக்குப் பிறகு சங்கடமாகவும் கனமாகவும் உணர்கிறது என்பது உங்களுக்கு எப்போதாவது நேர்ந்ததா? சரி, நீங்கள் அதை எதிர்கொள்ளவில்லை. வீக்கம் என்பது ஹார்வர்டின் படி, மில்லியன் கணக்கான பெரியவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை. இருப்பினும், சிறிய மாற்றங்கள் அச om கரியத்தை போக்க உதவும். ஹார்வர்ட் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி 10 சிறந்த உணவுகளை அறிவுறுத்துகிறார், அவை வீக்கத்தைக் குறைக்க உதவும்.அதிகப்படியான காற்று அல்லது எரிவாயு கட்டமைப்பை செரிமானத்தில் சிக்கும்போது அல்லது குடல் தசைகள் உணவை திறமையாக நகர்த்தத் தவறும் போது வீக்கம் ஏற்படுகிறது. மிக வேகமாக சாப்பிடுவதன் மூலமும், காற்றை விழுங்குவதன் மூலமும், பீன்ஸ், வெங்காயம் அல்லது கார்பனேற்றப்பட்ட பானங்கள் அல்லது உணவு சகிப்புத்தன்மை போன்ற வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொள்வதன் மூலமும் இது தூண்டப்படலாம். சில நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.வரவு: கேன்வா நல்ல செய்தி என்னவென்றால்,…
புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் த்வனி ஏவுகணை டிசம்பரில் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகியவை முன்னோடிகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது பிரம்மோஸைவிட அதிவேகமாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவுகணையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து உள்ளது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மணிக்கு 7,400 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டதாகும். இதுகுறித்து டிஆர்டிஓ வட்டாரங்கள் கூறியதாவது: ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட 5 முதல் 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாயும். இந்த வகை ஏவுகணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கி.மீ. தொலைவை தாண்டி செல்லும். அதாவது வளிமண்டலத்தை தாண்டி சென்றுவிடும். பின்னர்…
கரூர்: கரூர் ஆட்சியர் குறித்து முதநூலில் அவதூறு பதிவு தொடர்பாக பிஆர்ஓ புகாரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 116 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக முகநூலில் செல்வராமச்சந்திரன் சின்னதுரை என்ற பெயரில் ஆட்சியர் மீ.தங்கவேல் குறித்து அவதூறாக நேற்று பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த முகநூல் பதிவில், “இந்த கரூர்ல கலெக்டர், கலெக்டர்னு ஒருத்தர் இருப்பாரு அவருக்கு வேலை ஸ்கூலுக்கு போய் ரீல்ஸ் போடுறது. பாலத்துக்கு அடியில் ரீல்ஸ் போடுறது. டூவீலர் ஓட்டுறவன ஓவர்டேக் பண்ணி ஏன் ஹெல்மெட் போடலை என்று சொல்லி அந்த வீடியோ போடுறது. இந்த சம்பவத்தின் போது எந்த…
