Author: admin

அமராவதி: மதச்சார்பின்மை என்பது இருவழி சாலையாக இருக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இன்புளுயன்சரும் சட்டக்கல்லூரி மாணவியுமான ஷர்மிஸ்தா பனோலி (22) சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை, மத ரீதியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் கொல்கத்தா போலீஸார் ஷர்மிஸ்தாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:…

Read More

தமிழ் சினிமாவில் சமூக திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளி வந்து கொண்டிருந்தாலும் 1960 மற்றும் 1970-களில் ஏராளமான புராண மற்றும் பக்தி படங்களும் வெளியாகின. இயக்குநர் ஏ.பி.நாகராஜன், தொடர்ந்து இதுபோன்ற படங்களில் அதிக ஆர்வம் காட்டினார். திருவிளையாடல், திருமால் பெருமை, சரஸ்வதி சபதம், அருட்பெருஞ்சோதி, அகத்தியர் என பல திரைப்படங்கள் உருவாகின. அதில் ஒன்று, ‘திருநீலகண்டர்’. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டரின் கதையை சொன்ன படம் அது. சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் திருநீலகண்டர். மனைவியுடன் வாழ்ந்து வந்த அவர், ஒரு கட்டத்தில் சிற்றின்ப மோகம் காரணமாகத் தவறான பாதைக்குச் செல்கிறார். இதை அறிந்த அவருடைய மனைவி கணவரிடம் கோபம் கொண்டு, இனி தன்னைத் தொடக்கூடாது என்று கூறிவிடுகிறார். தனது தவறை உணர்ந்த நீலகண்டர், மற்ற பெண்களை மனதாலும் நினைக்க மாட்டேன் என்று சிவபெருமான் மீது ஆணையிட்டு, முனிவரைப் போல வாழ்கிறார். வருடங்கள் ஓடியதும் இருவரும் முதுமை அடைந்தனர்.…

Read More

சென்னை: நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யவும், விவசாயிகள் தங்கள் தொழிலை மேற்கொள்ளவும், கிராமப்புற மேம்பாட்டுக்கும் இன்றியமையாததாக விளங்குவது நகைக்கடன். இதை பெறுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி வகுத்திருப்பது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தை அடமானம் வைக்கும்போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும். அடமானம் வைக்கப்படும் நகைக்கான ஆதாரத்தை நகைக்கடன் பெறுவோர் அளிக்க வேண்டும். தங்க நகைகளில் 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும். 24 காரட் தங்க நகையாக இருந்தாலும் 22 காரட் மதிப்பிலேயே கடன் வழங்க வேண்டும். ஒரு கிலோ வரையிலான தங்க நகைகள் மட்டுமே அடமானம் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் நகையில்…

Read More

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி அடைந்து, மொத்த விலையில் கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கோடை காலத்தில் காய்கறி விலை சற்று உயர்ந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைந்த நிலையில், மே 23-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தில் தீவிரமடைந்து பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் கத்திரி வெயிலின் சுவடே தெரியாமல் போனது. இதன் காரணமாக தமிழகத்தில் மே மாதத்தில் காய்கறிகளின் விலை குறிப்பிடும்படியாக உயரவில்லை. முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மொத்த விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்றைய நிலவரப்படி முட்டைக்கோஸ் கிலோ ரூ.5 ஆகவும், புடலங்காய், முள்ளங்கி ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.10 ஆகவும் வீழ்ச்சி அடைந்திருந்தது. மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.70, முருங்கைக்காய் ரூ.50, சாம்பார் வெங்காயம் ரூ.40,…

Read More

இரண்டாவது அழைப்பு, குறிப்பாக திருமண விழாவிற்கு, விஷ்ணு மற்றும் மா லட்சுமி ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. திருமணங்கள் அல்லது ஹவுஸ்வார்மிங்ஸ் போன்ற நிகழ்வுகளில், இருவரின் ஆசீர்வாதங்களும் குறிப்பாக முக்கியம், ஏனெனில் அவர்கள் இருவரும் தம்பதியினரை அன்பு, மிகுதி, சமநிலை மற்றும் பலவற்றை ஆசீர்வதிப்பார்கள். சடங்கு அல்லது நிகழ்வு தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவதை விஷ்ணு பிரபு உறுதிசெய்கிறார் என்று நம்பப்படுகிறது, மேலும் நிகழ்வில் எதையும் பற்றாக்குறை இல்லை என்பதை மா லட்சுமி உறுதி செய்கிறார். மா லட்சுமி ஏராளமான பணம், மகிழ்ச்சி, அன்பு மற்றும் பலவற்றைக் கொண்டுவருகிறார், இதனால் இரண்டாவது அழைப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Read More

பெங்களூரு: சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள கன்னட அமைப்​பினர், அவருக்கு எதி​ராக பெங்​களூரு போலீ​ஸில் புகார் அளித்​தனர். கர்நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்டோரும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் கன்னட கலை மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் தங்​கடகி கூறும்போது, “கமல்​ஹாசனின் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. கன்னட மொழிக்கு எதி​ரான சிறு கருத்​தை​யும் எங்​களால் ஏற்க முடி​யாது. கமல்​ஹாசன் கட்​டா​யம் மன்​னிப்பு கேட்க வேண்​டும். இல்​லா​விடில் அவர் நடித்த அனைத்து திரைப்​படங்​களை​யும் கர்​நாட​கா​வில் திரை​யிட அனு​ம​திக்க மாட்​டோம்​” என்​றார். கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை தலை​வர் நரசிம்​மலு கூறும்போது, ‘‘கமல்​ஹாசன் கன்னட மக்​களிடம் மன்​னிப்பு கேட்​கா​விடில் அவரது படங்​களுக்கு கர்​நாட​கா​வில் தடை விதிக்​கப்​படும்​”…

Read More

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் உக்​ரைன் வீராங்​கனை எலீனா ஸ்விட்​டோலினா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார். பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் எலீனா ஸ்விட்​டோலி​னா​வும், இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி​யும் மோதினர். இதில் எலீனா 4-6, 7-6 (6), 6-1 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார். ஆடவர் பிரிவு 4-வது சுற்​றில் அமெரிக்க வீரர் டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸி பாப்​பிரின்னை தோற்கடித்தார். போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்​டையர் பிரிவு 3-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ரோஹன் போபண்​ணா, செக் குடியரசின் ஆதம் பாவ்​லாசக் ஜோடி 2-6, 6-7(5) என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் மார்​செல் கிரானோலர்​ஸ், அர்​ஜெண்​டி​னா​வின்​ ஹொராசி​யோ ஜெபலோஸ்​…

Read More

“உழைத்தவரும், உழைத்து களைத்தவரும் என்றும் இளைத்தவரும் ஏய்த்து பிழைப்பவரும், படிப்பவரும், கொள்ளை அடிப்பவரும், இங்கு குடிப்பவரும், அன்பில் துடிப்பவரும் எவர் எவராகினும் அவர்க்கொரு துயரம் உயர் இசை கேட்டில் துயர் மனமுருகும், இன்னிசை என்னிசையென” எவர்க்கும் பொதுவென்று அள்ளிக் கொடுப்பவர் இசைஞானி இளையராஜா. அதனால்தான் அதிசயங்களை நிகழ்த்தியப் பிறகும் தொடரும் அவரது தீரா இசை தேடல் இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திரை இசைத் துறையில் பின்னணி பாடகராக விரும்புகின்ற பலருக்கும் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருக்கும். விவரிக்க இயலாத இசை ஆற்றலைப் பெற்ற இளையராஜா, பாடலுக்கான இசைக் குறிப்புகள் முழுவதையும் எழுதிய பிறகுதான், அந்தப் பாடலை யார் பாடப் போகிறார்கள் என முடிவு செய்வதாக கூறுகிறார். பிரபலமான தென்னிந்திய பாடகர்கள் துவங்கி, பாலிவுட்டின் பெருமைமிகு குரல்கள் வரை இளையராஜாவின் இசை சுவைத்தவையே. அந்த வகையில், இளையராஜா தன்னுடைய இசையில் பல…

Read More

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் சாதித்து, படிப்படியாக கட்சியை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பாக செயல்பட்ட பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசுவது கண்டிக்கத்தக்கது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான ஆட்சி நிச்சயம் அமையும் என்றார். அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, போகப்போக தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவை பழனிசாமி அறிவிப்பார் என தெரிவித்தார்.

Read More

எங்களுக்கு போதுமான நேரம் இல்லை என்று நாங்கள் அடிக்கடி கூறுகிறோம் – ஆனால் பெரும்பாலும், இது ஒரு நாளில் மணிநேரங்களைப் பற்றியது அல்ல. நாங்கள் அவற்றை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது பற்றியது. நம்மில் பலர் எங்கள் காலையை நிரம்பிய செய்ய வேண்டிய பட்டியல்களுடன் தொடங்குகிறோம், எல்லா நேரங்களும் எங்கு சென்றன என்று யோசித்து நாள் முடிக்க மட்டுமே.நாங்கள் போதுமானதாக இல்லை என்பது பிரச்சினை அல்ல. ஏதேனும் இருந்தால், நாங்கள் எப்போதும் ஏதாவது செய்கிறோம் – செய்திகளுக்கு பதிலளிப்பது, பணிகளுக்கு இடையில் மாறுவது, ஒழுங்கீனத்தைத் துடைப்பது அல்லது பொறுப்புகளை ஏமாற்றுதல். ஆனால் பெரும்பாலும், நம் கவனத்திற்கு தகுதியானதை வேண்டுமென்றே தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வினைபுரியும் சுழற்சியில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.பிஸியாக இருக்க ஒரு நிலையான அழுத்தம் உள்ளது, இது உண்மையான முன்னேற்றத்துடன் செயல்பாட்டை குழப்புவதை எளிதாக்குகிறது. முடிவு? நிறைய இயக்கம், ஆனால் அதிக அர்த்தம் இல்லை.நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் நேரத்தை எண்ணுவதற்கு ஒவ்வொரு நிமிடமும்…

Read More