Author: admin

நடிகை சமந்தா, ஹைதராபாத்தில் குடியிருந்து வருகிறார். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு அங்கு இருவரும் சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர். விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா, வெப் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். இதன் படப்பிடிப்புக்காக அவர் அடிக்கடி மும்பை சென்று வர நேரிட்டது. இதனால் அவர் மும்பையில் புதிய வீடு வாங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், மும்பை வீட்டின் புகைப் படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, ‘புதிய தொடக்கம்’ என்று தெரிவித்துள்ளார். சாம் என்று எழுதப்பட்டுள்ள அந்த வீட்டின் பூஜை அறையை அவர் பகிர்ந் துள்ளார். நடிகை சமந்தா, ‘த பேமிலி மேன்’ இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமோருவை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Read More

ஆலங்குடி வெங்கடாசலம் என்று சொன்னால் அதிமுக-வின் சீனியர் தலைவர்கள், “அவரா..?” என்று அதிசயித்து வாய்பிளப்பார்கள். ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்பேர்பட்ட அம்மாவுக்கே தனது செல்வாக்கைக் காட்டியவர் வெங்கடாசலம். புதுக்​கோட்டை மாவட்​டம் வடகாடு கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் அ.வெங்​க​டாசலம். கட்​சி​யால் தனக்கு என்ன பலன் என்று பார்ப்​ப​தை​விட தன்​னால் கட்​சிக்கு என்ன பலன் என்று பார்த்த தனித்​து​வ​மான அரசி​யல்​வா​தி​களில் வெங்​க​டாசல​மும் ஒரு​வர். அதி​முக-​வில் சாமானிய தொண்​ட​னாக இருந்து அமைப்​புச் செய​லா​ளர் வரைக்​கும் உயர்ந்​தவர். புதுக்​கோட்டை மற்​றும் சிவகங்கை மாவட்​டத்​தைச் சேர்ந்த முத்​தரையர் சமூகத்து மக்​கள் வெங்​க​டாசலத்தை தங்​களுக்​கான தலை​வ​னாகவே பார்த்​தார்​கள். முதல் முறை​யாக இவருக்கு 1984-ல் ஆலங்​குடி தொகு​தி​யில் சீட் கொடுத்​தார் எம்​ஜிஆர். அந்​தத் தேர்​தலில் வெற்​றி​பெற்​றாலும் அடுத்து வந்த மூன்று தேர்​தல்​களில் போட்​டி​யிடும் வாய்ப்பை அதி​முக இவருக்கு வழங்​க​வில்​லை. 1996-ல் ஜெயலலிதா தனக்கு ஆலங்​குடி​யில் வாய்ப்​பளிப்​பார் என்று பெரிதும் எதிர்​பார்த்​தார் வெங்​க​டாசலம். ஆனால்,…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது. இதையடுத்து அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என ரஜினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமய மலைக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன், அக்டோபர் மாதம் இமய மலை சென்று வந்தார்.’கூலி’ படம் வெளியாகும் முன்பு இமயமலைப் பகுதியில் மழை அதிகமாக இருந்ததால் அங்கு செல்லவில்லை. இந்நிலையில் தற்போது ஒருவார கால பயணமாக இமய மலை சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற அவர், ரிஷிகேஷ் சென்று சேர்ந்தார். அங்குள்ள ஆசிரமத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Read More

தொண்டர்களை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தும் அதேசமயத்தில், புகார்களில் சிக்கும் கட்சிப் நிர்வாகிகளை தேர்தல் சமயம் என்றுகூட பாராமல் களையெடுத்தும் வருகிறது திமுக தலைமை. அந்த விதத்தில் தான் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். ​கார்த்​திக் நீக்​கப்​பட்​டதன் பின்​னணி குறித்து நம்​மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்​வாகி​கள், “கோவை மாவட்​டம் அதி​முக கோட்டை என்ற இமேஜை உடைக்​கவே செந்​தில் ​பாலாஜியை கோவைக்கு அனுப்பி வைத்​தது தலை​மை. அப்​படி கோவைக்கு வந்த அவர், மைக்ரோ லெவலில் கட்​சி​யினரின் நடவடிக்​கை​களை கண்​காணித்து களை​யெடுப்பு நடவடிக்​கை​களை துரிதப்​படுத்தி வரு​கி​றார். அவர் கோவைக்கு பொறுப்​பேற்ற பிறகு நடந்த தேர்​தல்​களில் திமுக வெற்​றி​முகமே கண்​டிருப்​ப​தால் அவர் சொல்​வதை தலை​மை​யும் தட்​டா​மல் ஏற்​றுக் கொள்​கிறது. செந்​தில்​ பாலாஜிக்​கும் கார்த்​திக்​கிற்​கும் தொடக்​கம் முதலே ஒத்​துப் போக​வில்​லை. அதனால் எப்​படி​யும் தனது தலைக்கு கத்தி வரும் என்​பதை உணர்ந்தே இருந்த கார்த்​திக், செந்​தில்​ பாலாஜி​யின் விசு​வாசிகளுக்கு முக்​கிய…

Read More

இந்த வசீகரிக்கும் காட்சி மாயை 15 வினாடிகளுக்குள் ஒரு வனக் காட்சியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு புத்திசாலித்தனமாக உருமறைப்பு மான்களைக் கண்டுபிடிக்க வாசகர்களுக்கு சவால் விடுகிறது. இந்த புதிரான புதிர் கூர்மையான பார்வை மட்டுமல்லாமல், முறை அங்கீகாரம் மற்றும் இடஞ்சார்ந்த விழிப்புணர்வையும் சோதிக்கிறது. இத்தகைய மூளை டீஸர்கள், பொழுதுபோக்கு செய்யும் போது, ​​ஒரு அறிவாற்றல் நோக்கத்திற்கு சேவை செய்கின்றன, விவரங்களுக்கு கவனம் செலுத்த உதவுகின்றன மற்றும் புத்துணர்ச்சியூட்டும் மன உடற்பயிற்சியை வழங்குகின்றன. காட்சி மாயைகள் ஒரு தனித்துவமான கவர்ச்சியைக் கொண்டுள்ளன, பெரும்பாலும் நம்முடைய கண்பார்வை கேட்கவும், தலையை சாய்க்கவும், கேள்விக்குள்ளாக்கவும் நம்மைத் தூண்டுகின்றன. இந்த குறிப்பிட்ட மாயையில், ஒரு வனக் காட்சி வழங்கப்படுகிறது, மேலும் கிளைகளுக்குள் அமைந்துள்ளது மற்றும் சூரிய ஒளி ஒரு மான் புத்திசாலித்தனமாக உருமறைப்பு. மான் 15 வினாடிகளுக்குள் கண்டுபிடிப்பதே உங்கள் சவால். இது நேரடியானதாகத் தோன்றலாம், ஆனால் பலர் தங்களைத் தாங்களே ஸ்டம்பிங் செய்துள்ளனர், இது கூர்மையான…

Read More

டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 12 மணி நேரம் பெய்த தொடர் கனமழையால் 7 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 17 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகி உள்ள நிலையில் மீட்புப் பணிகள் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை டார்ஜிலிங் செல்ல உள்ளார். டார்ஜிலிங்கில் சனிக்கிழமை அன்று கனமழை பொழிந்த நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மக்களின் வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. மழையினால் சில பகுதிகளுக்கான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமை இணைக்கும் முக்கிய சாலை இதில் சேதமடைந்துள்ளது. டார்ஜிலிங்கின் சார்ஸ்லே, ஜெஸ்பீர்கான், மிரிக் பஸ்தி, தார் கான், மிரிக் லேக் ஏரியா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் மற்றும் தேரிய பேரிடர் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் நிலச்சரிவில்…

Read More

திண்டுக்கல்: காந்திகிராம பல்கலை உலக ஆராய்ச்சி துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பல்கலை தனது பொன்விழா கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், எதிர்கால இலக்குகளை வகுக்க வேண்டியது அவசியம், என பல்கலை வேந்தர் கே.எம்.அண்ணாமலை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையின் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலை துணைவேந்தர் என்.பஞ்சநதம் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். காந்திகிராம கிராமிய பல்கலை வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து வேந்தர் கே.எம்.அண்ணாமலை தனது பட்டமளிப்பு உரையில் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் பல துறைகளிலும் காந்திகிராம கிராமிய பல்கலை அபாரமான முன்னேற்றம் பெற்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில் பல்கலை இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும். காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகளில்…

Read More

மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து விஷாலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் விஷால். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி மீண்டும் இணையும் படத்துக்கும் விஜய் ஆண்டனியே இசையமைக்கவுள்ளார். ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர்.சி. அதனை முடித்துவிட்டு விஷால் படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனிக்கவுள்ளார். இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் நவம்பரில் தொடங்கவுள்ளார்கள். இதில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வும் விரைவில்…

Read More

புதுச்சேரி: திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய நாளை முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக திமுக அறிவித்துள்ளது. புதுவை மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா இன்று கூறியிருப்பதாவது: பாஜக கூட்டணி அரசிடமிருந்தும் புதுவை மாநிலத்தை மீட்டு, மண்–மொழி–மானம் காக்க, திமுக சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரையை முன்னெடுக்க திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். புதுச்சேரி, மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பாஜக கூட்டணி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளர், ஜெகத்ரட்சகன், எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில திமுக சார்பில்…

Read More

அறிமுக இயக்குநர் பி.நாராயணன் இயக்கியுள்ள அனிமேஷன் படம். ‘கிகி அண்ட் கொகொ’. இந்தப் படம் பற்றி அவர் கூறும்போது, “இது இந்தியாவின் முதல் அனிமேஷன் படம். கிகி என்ற அன்பான செல்லப் பிராணிக்கும் கொகொ என்ற சிறுமிக்கும் இடையிலான அழகான கதையை இந்தப் படம் சொல்கிறது. அவர்களின் பயணம் அன்பு, வாழ்க்கை பாடங்கள் என தலைமுறைகள் தாண்டி பார்வையாளர்கள் மனதைத் தொடும் மேஜிக்கல் தருணங்களைக் கொண்டிருக்கிறது. வேறு எதையும் விட குழந்தைகளுக்குக் கல்வி தொடர்பான படங்கள்தான் இன்றைய தேவை. அந்த வகையில், இந்தப் படத்தில், குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு இடையிலான உறவு பற்றி பேசியிருக்கிறோம்” என்றார். இனிகா புரொடக் ஷன்ஸ் இதைத் தயாரித்திருக்கிறது.

Read More