திண்டுக்கல்: காந்திகிராம பல்கலை உலக ஆராய்ச்சி துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பல்கலை தனது பொன்விழா கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், எதிர்கால இலக்குகளை வகுக்க வேண்டியது அவசியம், என பல்கலை வேந்தர் கே.எம்.அண்ணாமலை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையின் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலை துணைவேந்தர் என்.பஞ்சநதம் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். காந்திகிராம கிராமிய பல்கலை வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து வேந்தர் கே.எம்.அண்ணாமலை தனது பட்டமளிப்பு உரையில் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் பல துறைகளிலும் காந்திகிராம கிராமிய பல்கலை அபாரமான முன்னேற்றம் பெற்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில் பல்கலை இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும். காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகளில்…
Author: admin
மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து விஷாலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் விஷால். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி மீண்டும் இணையும் படத்துக்கும் விஜய் ஆண்டனியே இசையமைக்கவுள்ளார். ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர்.சி. அதனை முடித்துவிட்டு விஷால் படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனிக்கவுள்ளார். இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் நவம்பரில் தொடங்கவுள்ளார்கள். இதில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வும் விரைவில்…
புதுச்சேரி: திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் ஐந்தாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய நாளை முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக திமுக அறிவித்துள்ளது. புதுவை மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா இன்று கூறியிருப்பதாவது: பாஜக கூட்டணி அரசிடமிருந்தும் புதுவை மாநிலத்தை மீட்டு, மண்–மொழி–மானம் காக்க, திமுக சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரையை முன்னெடுக்க திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். புதுச்சேரி, மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பாஜக கூட்டணி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளர், ஜெகத்ரட்சகன், எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில திமுக சார்பில்…
அறிமுக இயக்குநர் பி.நாராயணன் இயக்கியுள்ள அனிமேஷன் படம். ‘கிகி அண்ட் கொகொ’. இந்தப் படம் பற்றி அவர் கூறும்போது, “இது இந்தியாவின் முதல் அனிமேஷன் படம். கிகி என்ற அன்பான செல்லப் பிராணிக்கும் கொகொ என்ற சிறுமிக்கும் இடையிலான அழகான கதையை இந்தப் படம் சொல்கிறது. அவர்களின் பயணம் அன்பு, வாழ்க்கை பாடங்கள் என தலைமுறைகள் தாண்டி பார்வையாளர்கள் மனதைத் தொடும் மேஜிக்கல் தருணங்களைக் கொண்டிருக்கிறது. வேறு எதையும் விட குழந்தைகளுக்குக் கல்வி தொடர்பான படங்கள்தான் இன்றைய தேவை. அந்த வகையில், இந்தப் படத்தில், குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு இடையிலான உறவு பற்றி பேசியிருக்கிறோம்” என்றார். இனிகா புரொடக் ஷன்ஸ் இதைத் தயாரித்திருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், குஜராத் மாநிலம் துவாரகாவிலிருந்து மேற்கே 820 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக்.6) முதல் அக்.11-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். 8-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி,…
மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அவரது தேர்வு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர். எதிர்வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதை சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இருப்பினும் இதன் பின்னர் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் அறிவித்தார். அவருடன் கோலியும் இணைந்து கொண்டார். ஏற்கெனவே 2024-ல் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதும் ஓய்வு பெறுவதாக இருவரும் அறிவித்தனர். இந்த சூழலில் தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன்…
சிரஞ்சீவி ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். இவர் இதற்கு முன், ‘பகவந்த்கேசரி’, ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’ உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இப்போது இயக்கும் படத்துக்கு ‘மன சங்கர வரபிரசாத் காரு’ என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் சசிரேகாவாக நடிக்கும் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ வில்லனாக நடிக்க இருக்கிறார். இவர் தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி படங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
சென்னை: தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே பின்பற்றும் வகையில், கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்க்க, அனைவரிடமும் கலந்தாலோசித்து ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிகழ்வில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கரூர் துயரம் குறித்து உயர் நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடங்கும். இதன்மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதல்வராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு…
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியது தொடர்பாக அவர்களது மகள் இந்திரஜா விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த மாதம் முன்னணி நடிகரான ரோபோ சங்கர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடி வழியனுப்பி வைத்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, பேசுபொருளானது. இது தொடர்பாக ரோபோ சங்கர் குடும்பத்தினர் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதனிடையே, ரோபோ சங்கர் மறைந்து 16-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவருடைய உருவப்படத்தினை திறந்து வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ரோபோ சங்கர் குடும்பத்தினர். அப்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, “அப்பா சாமியிடம் சென்றபோது வழியனுப்ப உறுதுணையாக இருந்த காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவருடைய கைதட்டல்களில் தான் அப்பா உருவானார். எங்கெல்லாம் கைதட்டல்கள் இப்போது இருக்கிறதோ, அங்கெல்லாம் அப்பா இருப்பார். அப்பா விட்டுவிட்டுச் சென்ற பொறுப்புகள் நிறைய இருக்கிறது. கண்டிப்பாக அதனை முடிப்போம்” என்று பேசினார்.…
சென்னை: பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனும் நிலையில், ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர்…
