Author: admin

பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும்’ என்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும். நமது தண்ணீர் தமிழ்நாட்டுக்கு செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வருகிறார்கள். நாம் எதிரிகள் அல்ல; நாம் அனைவரும் நண்பர்கள். அந்தப் பிரச்சினையின் வரலாறு குறித்து எனக்குத் தெரியாததால், அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது’…

Read More

புதுச்சேரி: கோடை விடுமுறை பின் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். புதுவையில் இன்று அரசு பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டன. மழலையர் பள்ளிகளில் இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். லப்போர்த் வீதியில் உள்ள எக்கோல் ஆங்கிலேஸ் அரசு தொடக்கப் பள்ளியில், பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் ஹரிஹரன், விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஜோஸ்வா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஒரு நாள் தலைமை ஆசிரியர்களாக அமர வைத்தார். அந்த மாணவர்களை ஆசிரியர்கள் கவுரவித்து வெகுவாக பாராட்டினர்.

Read More

தேன்கனிக்கோட்டை பகுதி கிராமங்களில் தகவல் பலகைகளில் ஊர் பெயர் மற்றும் தெரு பெயரை தமிழில் எழுத வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் பாகலூர், பேரிகை உள்ளிட்ட கிராமங்கள் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளிகளிலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இக்கிராம பகுதிகளில் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் ஊர் பெயர் கன்னட மொழில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களிலிருந்து வரும் தமிழ் மொழி தெரிந்தவர்கள் ஊரின் பெயரை அறிந்து கொள்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இக்கிராம தகவல் பலகையில் தமிழ் மொழியிலு ம் எழுத வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதி…

Read More

சரியான செல்ல நாயைத் தேர்ந்தெடுப்பதற்கு வரும்போது, ​​மனோபாவம், இயல்பு, அளவு, உணவுத் தேவைகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, மேலும் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு வரும்போது, ​​அவை வரையறுக்கப்பட்ட இடமும் கருதப்பட வேண்டிய ஒரு புள்ளியாக மாறும். அதனால்தான் அபார்ட்மென்ட் வாழ்க்கைக்கு சரியான நாயைத் தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் தந்திரமானதாக இருக்கும், குறிப்பாக தி லாப்ரடோர் ரெட்ரீவர் மற்றும் தி பீகிள் போன்ற இரண்டு பிரபலமான இனங்களுக்கு இடையில் தீர்மானிக்கும்போது. நாய் இனங்கள் இரண்டும் நட்பு, புத்திசாலித்தனமான மற்றும் அன்பான தோழர்கள் என்றாலும், அவர்களுக்கு வெவ்வேறு தேவைகள் மற்றும் ஆளுமைகள் உள்ளன, அவை சிறிய வாழ்க்கை இடத்தில் நன்கு பொருந்தக்கூடும். எனவே, நீங்கள் ஒரு குடியிருப்பில் வசிக்கிறீர்கள் மற்றும் ஒரு செல்லப்பிராணி லாப்ரடோர் அல்லது பீகலைப் பெறுவதற்கு இடையில் குழப்பமாக இருந்தால், இரண்டிற்கும் இடையே சில வித்தியாசங்கள் இங்கே உள்ளன, இது ஒரு செல்லப்பிராணியாக வலதுபுறத்தை எடுக்க…

Read More

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது. மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தலைவர்களின் பிறந்தநாள்கள் உள்ளிட்ட சிறப்பு தருணங்களை பயன்படுத்தி தண்டனைக் காலத்தைக் குறைக்கக்கூடாது என்றும் நீதிபதி கட்டுப்பாடு விதித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பாலியல் வழக்குகளில் வழங்கப்படும் தண்டனைகள் அத்தகையக் குற்றத்தை வேறு எவரும் செய்யாமல் தடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அந்த வகையில் குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளிலும் அவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகச்சரியான நடவடிக்கை ஆகும். இதற்கு காரணமான அனைவரும்…

Read More

ஆம், இது ஆச்சரியமாக இருக்கும். சோர்வு என்பது நவீன வாழ்க்கையில் அடிக்கடி வரும் புகார், பெரும்பாலும் மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது அதிக வேலை என்று நிராகரிக்கப்படுகிறது. இருப்பினும், தொடர்ச்சியான சோர்வு மற்றும் ஓய்வு மூலம் மேம்படாத பலவீனம் குடல் புற்றுநோயைக் குறிக்கலாம். இந்த நோய் உள் இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும், இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது இடைவிடாத சோர்வு என்று வெளிப்படுகிறது.

Read More

சென்னை: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா என்பவர் பொது தரவரிசைப் பட்டியலில் (CRL) முதலிடம் பிடித்துள்ளார். அவர் 360 மதிப்பெண்களுக்கு 332 மதிப்பெண்கள் பெற்றார். நாடு முழுவதும் உள்ள ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மே 18 அன்று நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு 1 மற்றும் 2-ம் தாள்களை மொத்தம் 1,80,422 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 54378 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் தேர்வு பெற்றவர்களில் 9404 பேர் பெண்கள் ஆவர். இந்த தேர்வில் ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் (CRL) முதலிடம் பிடித்துள்ளார். அவர் 360-க்கு 332 மதிப்பெண்கள் பெற்றார். ஐஐடி கரக்பூர்…

Read More

ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெளியேற்றியது பஞ்சாப் கிங்ஸ் இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அந்த அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் அணியாக இருப்பதும் இந்த ஐபிஎல் தொடரில் விசேடமாகும். இதன் மூலம் ஸ்ரேயஸ் அய்யர் 3-வது அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தன் கேப்டன்சியினால் அழைத்துச் சென்றுள்ளார். அய்யர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 87 நாட் அவுட் என்று மும்பை இந்தியன்ஸுக்கு இறுதி ஆப்பு வைத்து இறுக்கினார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் 200 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டிச் சாதித்தது பஞ்சாப் கிங்ஸ். இந்தப் போட்டிக்கு முன்னதாக நாக் அவுட் சுற்றுக்களில் மும்பை இந்தியன்ஸ் 18-7 என்ற வெற்றி தோல்வி விகிதத்தை வைத்திருக்கும் பவர்ஃபுல் அணி. அதுவும் கோப்பை வெற்றியாளர்…

Read More

சென்னை: “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எந்தவித தண்டனைக் குறைப்புமின்றி ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தண்டனை விவரம் வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ?…

Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் கஜா புயல் சேதம், காண்டாமிருக வண்டு தாக்குதல், வெள்ளை ஈ தாக்குதலைத் தொடர்ந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ தாக்குதலால் தென்னை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூரில் நெல் சாகுபடிக்கு நிகராக, தென்னை சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கிழக்கு கடற்கரை காற்று வீசுவதால் தென்னை மர வளர்ச்சிக் கும், மகசூலுக்கும் பெரிதும் உதவி வருவதால், பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது தென்னை மரங்களில் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ எனப்படும் ஒருவித வைரஸ் நோய் பரவி வருவதால் தென்னை மரங்கள் காய்ந்து, கருகி பட்டுப் போவதுடன், அடுத்தடுத்த மரங்களுக் கும் பரவும் அபாயம் இருப்பதால் தென்னை…

Read More