சென்னை: “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை வழக்கின் விபரங்களுடன், பாதிக்கப்பட்ட பெண் அடையாளங்களை உள்ளடக்கிய முதல் தகவல் அறிக்கை கசியவிட்ட வழக்கில் தேசிய தகவல் மையம் உள்பட விசாரித்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத விதத்தில் கடும் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வரவேற்கிறது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவி, காவல்துறையில் புகார் அளித்த நிலையில், துரிதமான செயல்பாட்டை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உடனடியாக பல்கலை…
Author: admin
விருதுநகர்: “இந்தியா முழுவதும் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. சாதாரண மனிதர்கள் பயன்படுத்தி வரும் ரயில்வே, பணக்காரர்களுக்காக மாற்றப்படுகிறது,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “ஞானசேகரன் வழக்கு விரைவாக முடிக்கப்பட்டதற்கு நீதித்துறைக்கும் சட்டத்துறைக்கும் பாராட்டுக்கள். கடுமையான தண்டனை விதித்து பெண்களின் பாதுகாப்புக்கு இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டாக உள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றங்கரையில் மதராசி காலனி என்பது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்களின் வீடுகளை பாஜக அரசு அமைந்த பிறகு அவசர அவசரமாக இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆம்ஆத்மி இருந்தாலும், காங்கிரஸ் கட்சி இருந்தாலும் சரி நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆம்-ஆத்மி கட்சி இருக்கும்போது ஓராண்டுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு இதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு…
மதுரை: ‘உரிமையாளர்’ இன்னும் பொதுப் பணித் துறை பெயரிலேயே உள்ளதால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 16 மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, கால்வாய்களை தங்கள் பெயருக்கு எழுதி தர மாநகராட்சி கடிதம் எழுதி ஓர் ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் பொதுப் பணித் துறை பதில் அளிக்காமல் உள்ளதால், கால்வாய்களை பராமரிப்பு 16 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி 100 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 16 மழைநீர் கால்வாய்கள் 44.23 கி.மீ. தூரம் செல்கின்றன. இந்த கால்வாய்கள் அனைத்தும் பொதுப் பணித் துறை வசம் உள்ளன. கடந்த 50 ஆண்டுக்கு முன்பு வரை, இந்த கால்வாய்கள் அனைத்தும், பாசன கால்வாய்களாக இருந்துள்ளன. இந்த கால்வாய்களை கொண்டு தற்போது அறியப்படும் மாநகரப் பகுதியில் இருந்த 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிப் பெற்றன. நெல், வாழை, கரும்பு, காய்கறி போன்ற பல்வேறு விவசாயப் பணிகள் நடந்து வந்தன. காலப்போக்கில்…
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக திமுக-வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி உள்ளார். துணை தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கண்ணன் என்ற ராஜு உள்ளார். கடந்த பல மாதங்களாக சங்கரன்கோவில் நகராட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். திமுக உறுப்பினர்களும் நகராட்சி தலைவர் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்றும், டெண்டர் முறைகேடு நடப்பதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கரன்கோவில் நகராட்சி கூட்டங்களில் உறுப்பினர்கள் அடிக்கடி வாக்குவாதம், வெளிநடப்பு செய்து வந்தனர். போதிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் நகராட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நடைபெற இருந்த நிலையில், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி அதிமுக, திமுக, மதிமுக,…
மதுரை: “கடந்த 1977-ல் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்த பிறகு 12 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான். அதுபோல், தற்போது நடந்துள்ள மதுரை பொதுக்குழு கூட்டதால் இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது. அதிமுக ஆட்சிதான் அமையும்,” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (ஜூன் 2) அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது வழக்கம்தான். ஆனால், 3 மணி நேர போக்குவரத்தை தடை செய்வதும், நிரந்தரமாக போக்குரவத்தை நிறுத்துவதும் என முதல்வரின் மதுரை வருகை, மக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். வாயில் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே. மக்கள் நினைத்திருந்தால் முதல்வரை வரவேற்க லட்சக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். முதல்வரின் ‘ரோடு ஷோ’…
‘வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். மத்திய வட்டார துணை ஆணையர் பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கல்வி அலுவலர் கலைச்செல்வம், தலைமை ஆசிரியர் பத்மஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது; தமிழக அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் முதல்வரின் வழிகாட்டுதலோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. முதல்வரைப் பொறுத்தவரை, பள்ளி கல்விகளின் தரம் இன்றைக்கு இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வருவதற்கு தொடர்ச்சியாக இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார். தமிழகம்…
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையும் குறைந்தது. எங்கும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைந்துள்ளதால், வெப்பநிலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 8-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரம், இன்றும், நாளையும் (மே 3, 4) ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட்…
மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதில் தங்கள் இருவரின் திரையுலகப் பயணம் குறித்து அவர் விவரித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு தற்போது கமல் – மணிரத்னம் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் ‘தக் லைஃப்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இன்று மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். அதில், “‘நாயகன்’ முதல் ‘தக் லைஃப்’ வரையில் நாம் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளோம். சக கலைஞர்களாக, குடும்பத்தினராக, இணைந்து கனவு காண்பவர்களாக மற்றும் அனைத்துக்கும் மேலாக சினிமாவின் மாணவர்களாக இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வோர்…
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வந்துள்ள ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் சந்தன் கவுடரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் வந்த அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. அதேநேரம் காலியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் 1969-ம் ஆண்டு செப்.28 அன்று பிறந்தார். 1994-ல் கர்நாடக மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 2019-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். தற்போது அவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
திரையுலகத்தை விட்டே போய்விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன் என்று ‘அக்யூஸ்ட்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் உதயா பேசினார். ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம். தங்கவேல் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அக்யூஸ்ட்’. இதில் உதயா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இப்படத்துக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் உதயா பேசும்போது, “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால், எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால்…