விழுப்புரம்: ‘பாமகவில் அனைத்து அதிகாரங்களும், கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் மட்டுமே உள்ளது’ என முன்னாள் தலைவரும், பேராசிரியருமான தீரன் தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாசை, பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாமக மகளிர் மாநாடு, பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடத்தப்படும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளோம். பாமக தலைவராக ஒரு எம்பிசி வகுப்பைச் சேர்ந்தவரும், பொதுச்செயலாளராக ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவரும், பொருளாளராக சிறுபான்மையினரும் இருக்க வேண்டும் என்பது பாமக கட்சியின் சட்ட விதிகளாகும். அதன்படிதான், பொருளாளராக மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே மாநில பொருளாளராக சிறப்புடன் செயல்பட்டுள்ளார். கட்சிக்கு நிதி திரட்டி கொடுத்துள்ளார். திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு, மன்சூரின்…
Author: admin
சென்னை: நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப். 13-ம் தேதி தொடங்கி கடந்த மே 7-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் என 17 இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ம் தேதி இரு கட்டங்களாக நீட் தேர்வு நடைபெறும். இருதரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்படும். இதற்காக…
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார். திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசுசையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கிய பின், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது பரவி வரும் கரோனா, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும்: திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் உள்ளனர். இருந்த போதும், தமிழக அரசு கூறியபடி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை களைப் பின்பற்ற வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கொரிய-ஈர்க்கப்பட்ட தோற்றமும் சரியான அளவிலான பாகங்கள் இல்லாமல் முழுமையடையாது, மேலும் மருனல் அதை ஸ்பாட்-ஆன் பெற்றார். அவர் ஒரு ஜோடி தங்க வளைய காதணிகள், ஒரு மென்மையான வளையல் மற்றும் அடுக்கப்பட்ட மோதிரங்கள் – குறைந்த, நவீன மற்றும் மிகவும் ஜெனரல் இசட் -அங்கீகரிக்கப்பட்ட மோதிரங்களைத் தேர்ந்தெடுத்தார். அவளுடைய தலைமுடி பக்கமாக பிரிக்கப்பட்டு தளர்வாக இருந்தது, மென்மையான அலைகள் அவளது முகத்தை சிரமமின்றி வடிவமைக்க அனுமதித்தன.
சென்னை: அதிமுக ஆட்சி அமைந்ததும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அந்த சாரை முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்துள்ள சென்னை மகளிர் நீதிமன்றம், தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனைக் காப்பாற்ற முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனையோ சித்து வேலைகளை செய்தது. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த…
மகிழ்ச்சியான குழந்தை பருவத்தை உருவாக்குவது எப்படிகுழந்தை பருவம் பெரிய விடுமுறை அல்லது ஆடம்பரமான பரிசுகளைக் கேட்கவில்லை. ஒரு குழந்தையின் இதயத்தில் உண்மையிலேயே தங்கியிருப்பது அன்பு, சிரிப்பு மற்றும் தொடர்பு ஆகியவற்றால் நிரப்பப்பட்ட சிறிய, அன்றாட மரபுகள். குழந்தை பருவ நினைவுகளை வைத்திருக்கும் சில மரபுகள் இங்கே.
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக வகுப்புக்கு வருகை தந்தனர். பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்து கடந்த ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டாலும், கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். அந்த வகையில் இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், வெயில் பாதிப்பு பெரிதாக இல்லாததால் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர். நீண்ட விடுமுறைக்கு பின்னர்…
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல், தொடர் இருமல் இருப்பதால் அவரது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருகிறார். அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உதயநிதியின் உடல்நலம் தேறி விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்களும், அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பூரணமாக குணமடைந்த பிறகு, தள்ளிவைக்கப்பட்ட அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
யூரிக் அமிலம், ஒரு இயற்கை கழிவு ஆர் -ப்ரோடக்ட், உடல் ப்யூரின்களை உடைக்கும்போது உருவாகிறது, பயறு, கீரை போன்ற சில உணவுகளில் காணப்படும் பொருட்கள், மேலும் இயற்கையாகவே நமது சிறுநீரகங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இப்போது, பொதுவாக யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைகிறது, சிறுநீரகங்கள் வழியாகச் சென்று சிறுநீரில் அகற்றப்படுகிறது, ஆனால் உங்கள் உடலில் அதிக யூரிக் அமிலம் இருந்தால், உங்கள் சிறுநீரகங்கள் அதை அகற்ற முடியாவிட்டால், அது ஹைப்பரிசீமியா எனப்படும் ஒரு நிலையை ஏற்படுத்துகிறது, இது கீல்வாதம் (ஆர்த்ரிடிஸ் வடிவம்) அல்லது சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கிறது.
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை முழுமை செய்தனர். இதையடுத்து, முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 29-ம் தேதியும், பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதியும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் தகவல் பலகையிலும் இது ஒட்டப்பட்டது. விரும்பிய பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கு ஜூன்…