Author: admin

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் நேற்று மாலை சந்தித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் கட்சியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் சகோதரரும், அக்கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான திருமால்வளவன் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “அரசியலைக் கடந்து ‘அய்யா’ என்ற மாபெரும் போராளியை நீண்ட நாட்களுக்கு பிறகு மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் அரசியல் கற்ற நான், நன்றி உணர்வுடன் சந்திக்க வந்துள்ளேன். அவரை சந்தித்தது, அரசியல் உள்நோக்கம் இல்லை. பாமகவில் இருந்து பிரிந்து சென்ற நாங்கள், அவருக்கு மனமகிழ்வை தர வேண்டும் என்பதற் காக சந்திக்க வந்துள்ளேன். பெரியாருக்கு பிறகு சமூக நீதிக்காகபோராடுபவர் ராமதாஸ். ராமதாசை நான்…

Read More

குல்தீப் யாதவ்- வான்ஷிகா (புகைப்படம்- x) ஐபிஎல் 2025 இப்போதே வருவதால், கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் வான்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்த செய்தி பலருக்கு ஒரு மகிழ்ச்சியான ஆச்சரியமாக இருந்தது. குல்தீப் மற்றும் வான்ஷிகாவின் நெருக்கமான நிச்சயதார்த்த விழா ஜூன் 4 புதன்கிழமை லக்னோவில் நடைபெற்றது, மேலும் இதில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களின் நிச்சயதார்த்தத்தின் படங்கள் புதன்கிழமை மாலை பகிரப்பட்டன, அவை விரைவில் வைரலாகின்றன.அவர்களின் நிச்சயதார்த்தத்தில் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் அவரது மனைவி பிரியா சரோஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். ரிங்குவின் இருப்பு இறுதியாக யாதாவுடனான வீழ்ச்சியின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. டி.சி ஸ்பின்னர் மற்றும் கே.கே.ஆர் இடி இடையே பிரபலமற்ற “ஸ்லாப்” சம்பவத்திற்குப் பிறகு ஊகம் தொடங்கியது, இது டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதிய சிறிது நேரத்திலேயே நடந்தது. ரிங்கு சிங்கைத் தவிர, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் சில…

Read More

புதுடெல்லி: ​​நாடு முழு​வதும் 2026 அக்​டோபர் 1, 2027 மார்ச் 1 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணி தொடங்​கும் என மத்​திய உள்துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது. கடைசி​யாக 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதற்கு அடுத்​த​படி​யாக 2021-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான பணி​கள் 2020 ஏப்​ரல் மாதத்​தில் தொடங்​கு​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. ஆனால், கரோனா பெருந்​தொற்று பரவியதையடுத்​து, இப்​பணி தள்ளி வைக்​கப்​பட்​டது. அதன் பிறகு மக்​கள​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால் மீண்​டும் தள்​ளிப்​போனது. இதனிடையே, நாடு முழு​வதும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என காங்​கிரஸ், திமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை வைத்​தன. இந்த சூழ்​நிலை​யில், அரசி​யல் விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை (சிசிபிஏ) கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் கடந்த ஏப்​ரல் 30-ம் தேதி நடை​பெற்​றது. இதையடுத்து…

Read More

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்துள்ள படம், ‘அக்யூஸ்ட்’. இதை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்தில் பேருந்து சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹைலைட்டான இந்த சண்டைக்காட்சிக்காக ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.இதுபற்றி படக்குழு கூறும்போது, “படத்தின் முக்கியமான இடத்தில் இந்த சண்டைக் காட்சி வருகிறது. இதற்காக ஒரு பேருந்தை விலைக்கு வாங்கியும் மற்றொரு பேருந்தை வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்தினோம். ஸ்டன்ட் சில்வா, இந்த ஆக்‌ஷன் காட்சியை வடிவமைத்தார். இதில் சுமார் 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிக்காக மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளோம்” என்றனர்.

Read More

மதுரை: மதுரை அருகே 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் கோயில், கிராம மக்களால் வெளிக் கொணரப்பட்டுள்ளது. இது வரலாற்றுக்குப் புதிய வரவாகும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்களும், சிற்பத்துறை, தொல்லியல் ஆய்வாளர்களுமான தேவி, அறிவுச் செல்வம் ஆகியோர் கூறியதாவது: மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மலம்பட்டி ஊராட்சியின் சிற்றூர் உடன்பட்டி. இவ்வூரில் ஓட்டக்கோயில் அழைக்கப்பட்ட பழைய சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அதிஷ்டானப் பகுதி முழுவதும் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. அதில் இவ்வூரின் பழமையான பெயர் ‘ஆற்றூர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிதைந்துபோன சிவன் கோயிலின் மூலவர் பெயர் தென்னவனீசுவரம். இங்குள்ள கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. கி.பி.1217-1218-ம் ஆண்டுகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அழகப்பெருமாள் எனும் களவழி நாட்டுத் தலைவன் தனக்கு உரிமையான நாகன்குடி என்னும் ஊரின் குளத்தையும், அதனைச் சுற்றியுள்ள நன்செய், புன்செய், தோட்டம், துரவு அனைத்தையும் ஆற்றூர் நம்பி பேரம்பலக் கூத்தன்…

Read More

புதுடெல்லி: ர​யில் டிக்​கெட் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் முழு​வதும் விற்றுத் தீர்​வதன் பின்​னணி​யில் உள்ள மோசடியை ரயில்வே கண்​டு​பிடித்​துள்​ளது. நாடு முழு​வதும் ரயில்​களில் பயணம் செய்​வதற்​கு, ஐஆர்​சிடிசி இணை​யதளத்​தின் மூலம் பயணி​கள் டிக்​கெட் முன்​ப​திவு செய்​கின்​றனர். எனினும், ஒவ்​வொரு ரயிலுக்​கும் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் மொத்த டிக்​கெட்​டு​களும் விற்​று​விடு​கின்​றன. இதனால் பொது​மக்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு வந்​தனர். குறிப்​பாக பண்​டிகைகள், விடு​முறை நாட்​களில் பயணம் செய்​வதற்​கான டிக்​கெட்​டு​கள் முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் தீர்ந்​து​விடும். இத்​தனைக்​கும் பண்​டிகைக்​காக 60 நாட்​களுக்கு முன்பே முன்​ப​திவு தொடங்​கும். அப்​போதும் கூட டிக்​கெட்​டு​கள் மளமளவென விற்று விடும். இதுகுறித்து நிறைய புகார்​கள் ரயில்​வேக்கு வந்த வண்​ணம் இருந்​தன. போலி ஐ.டி. இதையடுத்​து, ரயில்வே நிர்​வாகம் முன்​ப​திவு டிக்​கெட்​டு​கள் குறித்து தீவிர ஆய்வு நடத்​தி​யது. அப்​போது போலி பயனர் அடை​யாள எண்​களை (யூசர் ஐ.டி.) பயன்​படுத்தி ஏராள​மான டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்து வந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. கடந்த…

Read More

நடிகர் கமல்​ஹாசனும் மணிரத்​ன​மும் 36 வருடங்​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்​துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் சிலம்​பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்​ஜ், ஐஸ்​வர்யா லட்​சுமி, அசோக் செல்​வன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைத்​துள்ள இந்​தப் படம் இன்று (ஜூன் 5) வெளி​யாகிறது. இந்​நிலை​யில், செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த நடிகர் கமல்​ஹாசன் கூறிய​தாவது:தமிழ் சினி​மாவை புரட்​டிப் போட வேண்​டும் என்​பது​தான் எங்​களின் ரொம்ப நாள் ஆசை. அதைசெய்ய முயற்சி செய்​து​கொண்டே இருக்​கிறோம். புரட்​டிப் போடு​வது என்​பது பெரிய விஷ​யம். நாங்​கள் விரும்​பும் திசை நோக்கி கொஞ்​ச​மாவது நகர்த்​தலாம் என்று நினைத்​தோம். அதற்கு எங்​களுக்​குசிறந்த வீரர்​கள் கிடைத்​தார்​கள். சர்​வ​தேச தரத்​தில்இருக்​கும் எங்​கள் டெக்​னீஷியன்​களின் வேலை​யை, வெளி​நாட்​டில் இருந்து வந்து பணி​யாற்​றிய​வர்​கள் பாராட்டி இருக்​கிறார்​கள். நான் அப்​போது பார்த்த இளைஞர் மணிரத்​னம், இன்று சினிமா ஞானி​யாக மாறி​யிருக்​கிறார். அவர் படத்​தில் நடித்​தது எனக்​கு குதூகல​மாக இருந்​தது என்​பது​தான் உண்​மை. இதில் சிறந்த டெக்​னீஷியன்​கள் கடுமை​யாக…

Read More

ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக் காற்றால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மணல் பரவிக் கிடப்பதால், அரிச்சல்முனைக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கியதால் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடரோரப் பகுதிகளில் புழுதி மணல் காற்று வீசி வருகிறது. இதனால் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலும் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஆங்காங்கே மணல் மூடியுள்ளது. அதேபோல, அரிச்சல்முனை பகுதியிலும் மணல் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தனுஷ்கோடி கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகே செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ள போலீஸார், வும், முகுந்தராயர் சத்திரம்,…

Read More

சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படும் சிறுநீரக சேதம், சிறுநீரகங்களை பாதிக்கும் சேதம் அல்லது நோய் இருக்கும்போது ஏற்படுகிறது, அவை இரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுவதற்கு காரணமாகின்றன. சிறுநீரக சேதம் ஏற்பட்டவுடன், இது பொதுவாக மாற்ற முடியாதது, இருப்பினும் மருந்துகள் உதவக்கூடும், மேலும் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கலாம். சிறுநீரக சேதத்திற்கான காரணங்கள் மாறுபட்டவை, ஆனால் நீண்டகால சிறுநீரக நோய் (சி.கே.டி), கடுமையான சிறுநீரக காயம், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், சில தன்னுடல் தாக்க நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஆகியவை அடங்கும். சிறுநீரக சேதம் முதலில் மிகவும் அறிகுறியற்றதாக இருந்தாலும், ஒரு அறிகுறி மிகவும் கவனிக்கத்தக்கது. அதைப் பற்றி பேசலாம் …நுரை சிறுநீர் – சிறுநீரக சேதத்தின் முதல் அடையாளம்நுரை சிறுநீர் என்றால் என்னநுரை சிறுநீர் என்றால் உங்கள் சிறுநீரில் குமிழ்கள் அல்லது நுரை உள்ளது, அது வழக்கத்தை விட நீண்ட காலம் நீடிக்கும். சில…

Read More

புதுடெல்லி: குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுத் தரக் கோரும் டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியிலுளள ஷாதாரா பகுதியில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா அமைந்துள்ளது. ஆனால் குருத்வாரா அமைந்துள்ள இடத்தை டெல்லி வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பான வழக்கை டெல்லி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் கூறும்போது, “தற்போது ஷாதாரா பகுதியில் குருத்வாரா அமைந்துள்ள இடம் டெல்லி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் குருத்வாரா அமைவதற்கு முன்பு அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதி இருந்தது. எனவே, அந்த இடத்தை மீட்டு டெல்லி வக்பு வாரியத்துக்கு வழங்கவேண்டும்” என்றார். அப்போது நீதிபதி சதீஷ் சந்திர சர்மா கூறியதாவது: தற்போது அந்த இடத்தில் குருத்வாரா…

Read More