ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் பிறபகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் உடனடியாக அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும்…
Author: admin
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள திரைப்படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முதல் பாகமாக உருவாகியுள்ள இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். அக்.2-ம் தேதி வெளியான இந்தப் படம் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 3 நாட்களில், உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூலித்த இந்தப் படம் 4-வது நாளில் ரூ.335 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் 4 நாட்களில் அதிகம் வசூலித்த 3-வது கன்னடப் படமாக இது மாறியுள்ளது. முன்னதாக ‘காந்தாரா’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்கள் 4 நாட்களில் இதை விட அதிகம் வசூலித்திருந்தன. இந்தப் படம் ரூ.1000 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக்கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், மந்திரா எனும் தனியார் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் செட்டாப் பாக்ஸ்களை வாங்கவும், நல்ல நிலையில் இருக்கும் பாக்ஸ்களை மாற்றவும் நிர்ப்பந்திப்பதை தடுக்க வேண்டும். ஏற்கெனவே தொழில் நடத்திவரும் இடங்களில் புதியவர்களுக்கு ஒளிபரப்பு (எல்சிஓ) உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களைத்தான் பொருத்த வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கேபிள் டிவி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் அறிவித்தது. இதையொட்டி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று சங்கத்தினர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். சங்கத்தின் தலைவர்…
யு.இ.ஜி வாரம் 2025 இல் வழங்கப்பட்ட ஒரு புதிய ஆய்வில், சர்க்கரை-இனிப்பு மற்றும் செயற்கையாக இனிப்பு செய்யப்பட்ட பானங்கள் இரண்டும் வளர்சிதை மாற்ற செயலிழப்பு-தொடர்புடைய ஸ்டீடோடிக் கல்லீரல் நோய் (MASLD) அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. குறைந்த அல்லது சர்க்கரை இல்லாத பானங்கள் கல்லீரல் தொடர்பான இறப்புக்கான அதிக ஆபத்துடன் கூட தொடர்புடையவை என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, அவை ஆரோக்கியமான மாற்றாக இருப்பதைப் பற்றிய கருத்தை சவால் செய்கின்றன. வழக்கமானவற்றுக்கு பதிலாக சர்க்கரை அல்லது பூஜ்ஜிய-சர்க்கரை பானங்களைத் தேர்வுசெய்கிறீர்களா? சரி, நீங்கள் தனியாக இல்லை. பூஜ்ஜிய சர்க்கரை என்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக கல்லீரலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.ஒரு பெரிய புதிய ஆய்வு கல்லீரலில் செயற்கையாக இனிப்பு மற்றும் சர்க்கரை பானங்களின் தாக்கத்தை ஆய்வு செய்தது. இந்த வார தொடக்கத்தில் UEG வாரம் 2025 இல் இந்த ஆய்வு வழங்கப்பட்டது. செயற்கையாக இனிப்பு மற்றும்…
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் மதுபான விற்பனையில் போலி ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டதால், அரசுக்கு ரூ.49.42 கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்தூரில் உள்ள ராவ்ஜி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறையும் விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட திரிவேதி மற்றும் தஷ்வந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அமலாக்கத்துறை காவலில் எடுக்கப்பட்டு உள்ளனர். நிதி மோசடி பணம் எவ்வாறு பிறருக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வரும் நாட்களில் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டில் ஃபோர்பீச்சர் என்ற சட்டம் ஒன்று உள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட போட்டியை விளையாட விருப்பம் இல்லையென்றால் அந்த அணியின் கேப்டன் அந்த போட்டியை ஃபோர்பிட் செய்ய முடியும். அதாவது ஒரு போட்டியின் இன்னிங்ஸை விளையாடாமல் விலக முடியும். ஆனால் ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் இதை செய்தால் அந்த போட்டியில் இருந்து விலகுவதற்கு சமம். அதாவது அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. கிரிக்கெட் வரலாற்றில் இது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. சரியான காரணம் இல்லாமல் இந்த முடிவை எடுத்தால் போட்டியை ஏற்பாடு செய்யும் வாரியத்தை அவமதிப்பது போன்று ஆகிவிடும். மேலும் சர்வதேச அரங்கில் அந்த அணியின் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்படும். முதன் முறையாக ஃபோர்பிட் நிகழ்வு 1978-ல் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது அரங்கேறியது. இந்திய அணி பேட்டிங் செய்த போது…
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், ஹெச்ஆர்எக்ஸ் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதன் மூலம் அமேசான் பிரைம் வீடியோவுக்கு வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார். ‘தப்பார்’ படத்தை இயக்கிய அஜித் பால் சிங் இதை இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத த்ரில்லர் வெப் தொடரான இதில், பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அலயா எஃப், சிருஷ்டி வஸ்தவா, ரமா சர்மா, சபா ஆசாத் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிருத்திக் ரோஷன் இதில் நடிக்கவில்லை என்றும் தயாரிப்பு பணியை மட்டுமே செய்கிறார் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகையான பார்வதி திருவோத்து, தமிழில், பூ, மரியான், உத்தம வில்லன், தங்கலான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது. இதனிடையே, டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்தது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு நேற்று காலை முதல் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாக நீடிக்கிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,256 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று 6,251 கனஅடியாக அதிகரித்தது.…
அந்த தொல்லைதரும் குழிகளை வளைகுடாவில் வைத்திருக்க, முக்கியமாக துலக்குதல் அடங்கிய நல்ல வாய்வழி பராமரிப்பு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், வாய்வழி சுகாதாரமும் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அது சரி! காலப்போக்கில், பல் சிதைவு இதயம் மற்றும் மூளைக்கு பயணிக்கலாம், நினைவக மையங்களை சுருக்கி, தமனி அடைப்பு, அறிவாற்றல் சிதைவு மற்றும் அல்சைமர் போன்ற நிலைமைகளைத் தூண்டும். ஊட்டச்சத்து பயிற்சியாளர் ரியான் பெர்னாண்டோ சமீபத்தில் ஒரு ஐ.ஜி வீடியோவில், ஒருவரின் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று துலக்குவதற்கான சரியான வழியை விளக்கினார். பாருங்கள் …2 நிமிடங்கள் துலக்கவும்உங்கள் காலை உணவைத் தொடங்குவதற்கு முன், பல் துலக்குதல் இரண்டு நிமிடங்கள் நீட்ட வேண்டும் என்று ரியான் வலியுறுத்துகிறார். பற்களைத் துலக்குவதற்கான நேரம் முக்கியமானது, ஏனெனில் உணவு அமிலங்கள் தற்காலிக பற்சிப்பி பலவீனத்தை உருவாக்குகின்றன. உணவை சாப்பிட்ட உடனேயே பல்…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டார்ஜிலிங் அருகில் உள்ள நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட அம்மாநில பாஜக எம்பி கஜேன் முர்மு நேற்று காலை சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், காரிலிருந்து இறங்கிய எம்.பி. கஜேன் முர்மு மீது கல்வீசி தாக்கினர். இதில் அவரது தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
