ஸ்டாக்ஹோம்: மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்வீடனின் கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புகள், புற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி மூலம் சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. உடலின் சக்திவாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்டலம், ஒழுங்குப்படுத்தப்பட…
Author: admin
நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை தாக்கி படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ்(28), விமல்(26), சுகுமார்(31), திருமுருகன் (31), முருகன்(38), அருண்(27) ஆகிய 6 பேர் ஃபைபர் படகில் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர், மீனவர்களின் படகில் ஏறி இரும்புக் கம்பி, கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், இன்ஜின், செல்போன், ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதேபோல, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நம்பியார் நகரைச் சேர்ந்த சசிகுமார் (30), உதயசங்கர்(28), சிவசங்கர்(25), கிருபா(29), கமலேஷ்(19) ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் இரவு தாக்கி, இன்ஜின், ஜிபிஎஸ், செல்போன், 500 கிலோ வலை ஆகியவற்றைப் பறித்து சென்றனர்.…
புற்றுநோய் 2018 ல் 9.6 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது 6 இறப்புகளில் 1 ஆகும். உலகளவில் மரணத்திற்கு இரண்டாவது முன்னணி காரணம், புற்றுநோய், இதன் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2050 வாக்கில், புதிய புற்றுநோய் வழக்குகள் 35 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 20 மில்லியன் வழக்குகளில் இருந்து 77% அதிகரிப்பு. சிறந்த சிகிச்சை விருப்பங்கள் மற்றும் விளைவுகளுக்கு புற்றுநோயின் அறிகுறிகளைப் பிடிப்பது மிக முக்கியம். இருப்பினும், புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அங்கீகரிப்பது சவாலானது, ஏனெனில் பல அறிகுறிகள் அன்றாட சுகாதார பிரச்சினைகளுடன் ஒன்றிணைகின்றன. நீங்கள் நிராகரிக்கக் கூடாத 10 அசாதாரண மாற்றங்கள் இங்கே, ஏனெனில் அவை புற்றுநோயின் எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம்.
புதுடெல்லி: உ.பி.யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்மிக மடம் தொடங்கியவர் பெண் சாமியார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்கள் உள்ளனர். நிரஞ்சன் அகாடாவில் மகா மண்டலேஷ்வர் பட்டம் பெற்ற இவர், அகில இந்திய இந்து மகா சபையின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். பூஜா, கடந்த 2019 ஜனவரியில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தில் அவரது உருவப் பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, அதற்கு தீவைத்து எரித்தவர். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் பூஜா மடத்தின் நிர்வாகியும் தொழிலதிபருமான அபிஷேக் குப்தாவும் (32) கைதானார். பிறகு அபிஷேக் – பூஜா இடையே விரோதம் ஏற்பட்டது. இதனால், மற்றொரு மட நிர்வாகி அசோக் பாண்டேவுடன் இணைந்து அபிஷேக்கை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த அலிகர் போலீஸார் பஸல், அசோக் பாண்டே ஆகிய இருவரையும் கைது செய்தனர். நேற்று…
கொழும்பு: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 46, ரிச்சா கோஷ் 35, பிரதிகா ராவல் 31 ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் டயானா பெய்க் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 248 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சித்ரா அமின் 81, நடாலியா பெர்வைஷ் 33, சித்ரா நவாஷ் 14 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த வீராங்கனையும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. இந்திய அணி தரப்பில் கிரந்தி கவுட், தீப்தி சர்மா…
துபாய்: ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் அரச பரம்பரையில் வந்தவர் மெஸ்வாட்டி-3. பரம்பரை வழி அரசரான மெஸ்வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனைவிகள், 100 உதவியாளர்கள் புடைசூழ தனி விமானத்தில் அபுதாபியில் வந்திறங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது அரசராக உள்ள மெஸ்வாட்டியின் தந்தை சோபுசா-2-வுக்கு 125 மனைவிகள் என்ற விஷயமும் தற்போது தெரியவந்துள்ளது. 15 மனைவிகளுடன் அரசர் மெஸ்வாட்டி வந்திறங்கிய வீடியோ அண்மையில் வெளியானது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் பயணத்தின் மெஸ்வாட்டியின் 30 குழந்தைகளும் வந்திருந்தனர். அதேநேரத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசர் மெஸ்வாட்டி குறித்து அந்நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எஸ்வாட்டினி நாட்டில் மக்கள் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர் மட்டும் 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்களுடன் தனி விமானத்தில் வலம் வருவாரா என்று சமூக வலைதளங்களில் அந்நாட்டு மக்கள்…
கொழுப்பு கல்லீரல் நோயில் சோர்வு சாதாரண சோர்வு அல்ல. இது போதுமான ஓய்வுக்குப் பிறகும் குறைந்த ஆற்றலின் நிலையான உணர்வு. ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு அதற்குள் உருவாகும்போது, இந்த ஆற்றல் செயல்முறை குறைகிறது. காலப்போக்கில், ஒருவர் வடிகட்டிய, கனமான அல்லது மந்தமானதாக உணரக்கூடும், குறிப்பாக பகலில். இது பெரும்பாலும் மன அழுத்தம் அல்லது அதிக வேலை என்று நிராகரிக்கப்படுகிறது, ஆனால் சோர்வு தினசரி தோழராக மாறும்போது, அது நெருக்கமான கவனம் செலுத்துவது மதிப்புக்குரியதாக இருக்கலாம்.
சென்னை: இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் அசாமை சேர்ந்த அங்குஷிதா போரோ 3-2 என்ற கணக்கில் ராஜஸ்தானை சேர்ந்த பர்தவி கிரேவாலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் சர்வீசஸ் அணியை சேர்ந்த அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் ஆந்திராவை சேர்ந்த ஸ்நேகாவை தோற்கடித்து பட்டம் வென்றார். 57 முதல் 60 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பர்வீன் ஹூடா (சாய்) 3-2 என்ற கணக்கில் ஹரியானாவை சேர்ந்த பிரியாவை தோற்கடித்தார். 45 முதல் 48 கிலோ எடை பிரிவில் உத்தரகாண்டின் நிவேதிதா கார்கி 3-2 என்ற கணக்கில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற மஞ்சு…
குமுளி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஐயப்பனை தரிசிப்பதற்காக அக். 22-ம் தேதி சபரிமலை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. ஐப்பசி மாத வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு ஐயப்பனை தரிசிக்க உள்ளார். இவர் ஏற்கெனவே மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்த நிலையில், பம்பை, சந்நிதானம் உள்ளிட்ட பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அப்போது நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர்சூழலால் அவர் சபரிமலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் அவர் வர உள்ளதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தேவசம் போர்டு அமைச்சர் வி.என்.வாசன் கூறும்போது, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார். வரும் 22-ம் தேதி கொச்சி…
மூட்டு நீள அறுவை சிகிச்சை பெரியவர்களுக்கு அவர்களின் உயரத்தை அதிகரிக்க விரும்பும் ஒரு சாத்தியமான விருப்பத்தை வழங்குகிறது. மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சை நுட்பங்களில் முன்னேற்றங்களுடன், செயல்முறை மிகவும் அணுகக்கூடியதாகவும் பாதுகாப்பாகவும் மாறிவிட்டது.
