Author: admin

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சென்னை புத்தகப் பூங்கா உட்பட ரூ.29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் நூலகக் கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் ரூ.1.85 கோடி செலவில் சென்னை புத்தகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்தப் புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும். இந்நிகழ்ச்சியில், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் பல்வேறு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட 84…

Read More

சென்னை: கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் தமிழக முதல்வர் கவனம் செலுத்துகிறார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை, பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதுதவிர, 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது, துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை, வினாத்தாள் கசிவு, பல்கலையில் மதப்பிரசாரம் என உயர்க் கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது. இவற்றை எல்லாம்…

Read More

தன்னை சந்தேகிக்கும் ஒரு விகாரமான பாண்டாவாக போ தொடங்குகிறார், ஆனால் ஊக்கத்தின் மூலம், அவர் தனது தனித்துவமான பலங்களை நம்ப கற்றுக்கொள்கிறார். அவரது வளர்ப்பு தந்தை, திரு பிங் என்று அழைக்கப்படும் ஒரு வாத்து எப்போதும் அவரை ஊக்குவிக்கிறது, மேலும் குங் ஃபூ மீது ஆர்வத்தை வெளிப்படுத்தும் போது, ​​குடும்ப நூடுல் வியாபாரத்தில் சேர அவரை ஒருபோதும் கட்டாயப்படுத்துவதில்லை. பெற்றோர்களாகிய, உங்கள் பிள்ளைகளை ஆதரிப்பதும், அவர்களின் அழைப்பைக் கண்டுபிடிப்பதும், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகத் தெரிந்தாலும் கூட, அவர்களின் சொந்த திறன்களில் நம்பிக்கையுடன் இருப்பதும் முக்கியம். நம்பிக்கை இல்லாமல் குழந்தைகளுக்கு சவால்களை எதிர்கொள்ளவும், நேர்மறையான சுய உருவத்தை வளர்க்கவும் நம்பிக்கை உதவுகிறது. சுதந்திரம் அவர்களுக்குக் கற்பிக்கிறது, முடிவுகளை எடுக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், இது அவர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

Read More

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் கீழடி அகழ்வாராய்ச்சியில் அறிவியல் பூர்வமான சான்றுகள் இன்னும் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்தார். சென்னையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சி காலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இக்காலகட்டத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. 30 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுகிறது. உலக அளவில் இந்தியாவின் பெயர் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொருளாதார வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சியத்தோடு பலமான அடித்தளத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சியானது அறிவியல்பூர்வமான, தொழில்நுட்பரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும்…

Read More

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பி.சி.ஓ.எஸ்) மற்றும் பாலிசிஸ்டிக் கருப்பை நோய் (பி.சி.ஓ.டி) ஆகியவை உலகெங்கிலும் உள்ள இனப்பெருக்க வயது பெண்களில் மிகவும் பொதுவான சுகாதார பிரச்சினைகளில் இரண்டு. 5 இளம் இந்தியப் பெண்களில் 1 பேர் இந்த நிலைமைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நெருக்கமான வீட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இது உலக சராசரியை விட மிக அதிகம். நிலைமைகள் கருவுறுதலை மட்டும் பாதிக்காது, ஆனால் பல சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். ஆழமாக தோண்டுவோம் …பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதுபி.சி.ஓ.எஸ் மற்றும் பி.சி.ஓ.டி இரண்டும் பெண் கருப்பையை பாதிக்கும் ஹார்மோன் கோளாறுகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற முட்டைகள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு காரணமான உறுப்புகள். இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன, சில சிறிய வேறுபாடுகள் உள்ளன. முதலில் அவற்றைப் புரிந்துகொள்வோம்.கருப்பைகள் முதிர்ச்சியற்ற அல்லது ஓரளவு முதிர்ந்த முட்டைகளை பெரிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் போது பி.சி.ஓ.டி (பாலிசிஸ்டிக் கருப்பை…

Read More

சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்திய தேர்தல் ஆணைய ஊடகப் பிரிவு துணை இயக்குநர் பி.பவன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் இந்தாண்டு அக்டோபரில் தொடங்கும். இதற்கு முன்னதாக, ஜூலை மாதம் முதல் வாக்குச் சாவடிகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். தற்போது தமிழகத்தில் 68,400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிகள் ஒவ்வொன்றிலும் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த…

Read More

சென்னை: மனைவி தனது நோய்​வாய்ப்​பட்ட பெற்​றோரை பராமரிப்​பதை கணவருக்கு இழைக்​கும் கொடுமை​யாகவோ, மன உளைச்​சல் ஏற்​படுத்​தி​ய​தாகவோ கருத முடி​யாது என்று கூறி​யுள்ள உயர் நீதி​மன்​றம், விவாகரத்து கோரிய கணவரின் மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்தது. சென்னை வடபழனி​யில் மென்​பொருள் நிறு​வனம் நடத்தி வரும் குமரன் என்​பவருக்​கும், சென்னை நந்​தனத்​தில் தனது அத்தையுடன் வசித்து வந்த பட்​ட​தாரி பெண் செல்விக்​கும் கடந்த 2017 ஜூனில் திரு​மணம் நடந்​தது. (பெயர்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.) திரு​மணத்​துக்கு பிறகு, இரு​வரும் நந்​தனத்​தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்​குடித்​தனம் சென்​றனர். அப்​போது, குமரன் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு சென்​றிருந்த நேரத்​தில், செல்வி தனது நோய்​வாய்ப்​பட்ட தந்தை மற்​றும் தாயை ஊரில் இருந்து வீட்​டுக்கு அழைத்து வந்​து, மருத்​துவ சிகிச்சை அளித்து வந்​துள்​ளார். உதவிக்​காக தனது அத்​தையை​யும் அங்கு அழைத்து வந்​தார். அந்த வீட்​டின் மேல்​தளம் காலி​யான நிலை​யில், செல்​வி​யின் பெற்​றோர் அங்கு குடிபெயர்ந்​தனர். தரைதளத்​தில் குமரன் – செல்வி வசித்​தனர். இந்த…

Read More

ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் நகரில் ஆஸ்திரியா நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான 10 கிலோ மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி 47 நிமிடங்கள் 54 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பிரியங்கா கோஷ்வாரி கூறும்போது, “ஒரு நிமிட பெனால்டிக்குப் பிறகும் பந்தயத்தை நிறைவு செய்துள்ளேன. பெனால்டி மற்றும் காய்ச்சலுக்குப் பிறகு தங்கம் வெல்வது எளிதல்ல” என்றார்.

Read More

சென்னை: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வரும் மாபெரும் திட்டங்களால் தமிழகம் அதிவேகமாக நகரமாயமாகி சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், திமுக அரசின் திட்டங்கள் இதர மாநிலங்களுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் காரணமாக தமிழகம் விரைந்து நகரமயமாகி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ.5,000 கோடி, நமக்கு நாமே திட்டத்தில் ரூ.582 கோடி, பொதுமக்கள் பங்களிப்பு ரூ.183.56 கோடியும் சேர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் இதுவரை அம்ருத் 2.0 திட்டத்தின்கீழ் 3 கட்டங்களில் ரூ.6,655.80 கோடியில் 446 பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர்ப் பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. சீர்மிகு நகரத்…

Read More