கற்றாழை அலங்கார கூர்மையான தாவரங்களை விட அதிகம்; அவை நெகிழக்கூடியவை, குறைந்த பராமரிப்பு மற்றும் உங்கள் வீட்டுச் சூழலுக்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும். ஆரம்ப மற்றும் அனுபவமுள்ள தாவர ஆர்வலர்களுக்கு ஏற்றது, கற்றாழை மன மற்றும் உடல் ரீதியான நல்வாழ்வுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும், அதே நேரத்தில் குறைந்தபட்ச கவனிப்புடன் செழித்து வளர முடியும். உட்புற காற்றை சுத்திகரிப்பதில் இருந்து உற்பத்தித்திறனை அதிகரிப்பது, மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் உங்கள் வீட்டு அலங்காரத்தை மேம்படுத்துவது வரை, இந்த பல்துறை தாவரங்கள் நவீன வாழ்க்கை இடங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். அவற்றின் தனித்துவமான வடிவங்கள், நீண்ட ஆயுள் மற்றும் தகவமைப்பு ஆகியவை படுக்கையறைகள், அலுவலகங்கள் அல்லது வாழ்க்கைப் பகுதிகளுக்கு சரியானதாக அமைகின்றன. உங்கள் வீட்டிற்கு ஒரு கற்றாழை சேர்ப்பது ஏன் பாணி, ஆரோக்கியம் மற்றும் வசதியை ஒருங்கிணைக்கும் ஒரு முடிவு என்பதைக் கண்டறியவும்.ஒரு கற்றாழை உங்கள் அடுத்த வீட்டு தாவரமாக இருக்க…
Author: admin
திருப்பதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான நாராவாரி பல்லியில் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக, இன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளார். இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று காலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
சிட்னி: இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். காயம் காரணமாக கம்மின்ஸ் இதில் விளையாடாத நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அணியை மிட்செல் மார்ஷ் கேப்டனாக வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று, அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அண்மையில் அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்கா உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா. அதிலிருந்து மீண்டு வந்து இந்த தொடரில் வெற்றி பெற…
தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனிப்பட்ட காரணங்களால் விலகவே, கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 5ஆம் தேதி இதற்கான தொடக்க நிகழ்வில் அனைத்து போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார்? அவர்களின் பின்புலம் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம். ‘வாட்டர்மெலன்’ திவாகர்: சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பேசுபொருளாக இருந்த இவர், ‘கஜினி’ படத்தில் சூர்யா…
சென்னை: தமிழகத்தில் உயர்கல்விப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுருசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வருவதால் உயர்கல்வி வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் கல்வி, நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. துணைவேந்தர்கள் இல்லாததால் முக்கியமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இதனால், பணியில் உள்ள ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால், கல்வி, ஆராய்ச்சியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாகப் பயன்படுத்த இயலாமல் போகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வுக்கான மானியங்களை ஒதுக்குதல், மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் ஆகியவற்றுக்கு நிதியைப் பயன்படுத்த இயலவில்லை. தேர்வுகள் தேவையின்றி தள்ளிப் போதல், உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமை,…
அநாமதேய கேள்வி: என் கணவர் மிகவும் துஷ்பிரயோகம் செய்கிறார், ஆனால் அவர் அந்நியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முன்னால் நடந்துகொள்கிறார். எங்கள் உறவைக் காண்பிக்க நான் விரும்பவில்லை, ஆனால் அவர் இதைச் செய்வதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?கவிதை ஆலோசனை: கண்ணாடி வீடுஒரு வீடு கண்ணாடியால் செய்யப்பட்டதாகத் தெரியவில்லைஆனால் ஒவ்வொரு வீடும்உள்ளே என்ன நடக்கிறதுஇல்லாமல் பிரதிபலிக்கிறதுஅதை நாம் உணராமல் இருக்கலாம்ஆனால் கோபம் உள்ளே இருந்ததுசிறிய விரிசல்களாக மொழிபெயர்க்கப்படும்கண்ணாடி வீட்டின் சுவர்களில்மக்களின் ஒற்றைப்படை வெறித்துப் பார்க்கிறதுபாறைகளாக செயல்படும்ஒரு காலத்தில் இந்த வீட்டின் ஒரு பகுதியாக இருந்த நபர்அவர்கள் பிரிக்கப்படும்போதுஅவர்கள் ஒரு பார்வையாளராக மாறுகிறார்கள்ஒற்றைப்படை மற்றும் கூட்டத்தின் ஒரு பகுதிஅவர்கள் இனி உலகைப் பார்க்கவில்லைஅவை ஏற்கனவே ஆகிவிட்டனகுழப்பத்திற்கு ஒரு வெளிநாட்டவர்நீங்கள் அந்த நபராகிவிட்டீர்கள்அந்த வெளிநாட்டவர்நீங்களே விலக்கிக் கொள்ளுங்கள்கண்ணாடி உடைக்கும் வரைஒரு விளக்குமாறு மற்றும் தூசி பான் தயார் செய்யுங்கள்மேலும், நட்பு ஆதரவாளர்களின் இராணுவம்ஆனால் துண்டுகளை எடுப்பதாக உணர வேண்டாம்உங்களிடம்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இஷான், கனடா நாட்டில் வசித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதனால், அவர் தனது நண்பர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுக்க நினைத்தார். இது தொடர்பாக அழைப்பு விடுத்தார். இந்த பார்ட்டிக்கு தனித்து வருவோர் ரூ.1600, ஜோடியாக வருவோர் ரூ.2800 பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்து, மொயினாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஏற்பாடு செய்திருந்த ‘பார்ட்டி’ க்கு மொத்தம் 59 பேர் வந்திருந்தனர். இதில் 22 பேர் மைனர் ஆவர். இந்த பார்ட்டிக்கு கடந்த 4-ம் தேதி, இளம் பெண்களும் தங்களின் காதலர்களுடன் வந்திருந்தனர். பார்ட்டியும் அன்று மாலை களை கட்டியது. வெளிநாட்டு மதுபானங்கள், டிஜே என ஆட்டம், பாட்டமாக போய் கொண்டிருந்தபோது, அதே சமூக வலைத்தளம் மூலம் தகவல் அறிந்த போலீஸார் பண்ணை வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது 6 வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், கஞ்சா பொட்டலங்கள்…
நியூயார்க்: கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவுக்கு வரி விதிப்பு முக்கியமான வருவாயாக அமைந்துள்ளது. அதோடு அதன் மூலம் சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்ட எங்களால் முடிகிறது. வரி விதிப்பு விவகாரத்தை சுட்டிக்காட்டி போர்களை நான் நிறுத்தி உள்ளேன். அணு ஆயுத பலம் கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டன. இதில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தச் சூழலில் நான் அவர்களிடம் என்ன சொன்னேன் என்பதை இங்கு சொல்ல வேண்டாம் என கருதுகிறேன். ஆனால், நான் சொன்னதற்கு தகுந்த பலன் கிடைத்தது. அவர்கள் மோதலை நிறுத்திக் கொண்டார்கள். நிச்சயம் அதில் வரி விதிப்பு மற்றும் வணிகம் உள்ளது” என ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப் தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் நிறுத்தியதாக…
தமிழ் சினிமா தனக்கு தனியிடத்தைத் தந்திருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழில், நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, சிங்கம், மெர்சல் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது ரன்பீர், சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், தமிழ் சினிமா தனக்குத் தனியிடம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், நான் நடிக்கும் அடுத்த தமிழ்ப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தி மற்றும் தமிழ் திரைத்துறைகளுக்கு இடையே அதிக வித்தியாசம் இருக்கிறது. வருகிற வதந்திகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு விஜய்யை நடிகராகப் பிடிக்கும். அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். நான் அவருக்கு மிகப்பெரிய ரசிகை. அவருடைய அரசியல் பற்றி என்னால் கருத்துச் சொல்ல இயலாது” என்றார்.
சென்னை: மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் முதல்முறையாக வேலைக்கு சேருபவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்று, வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலுவலகம் சார்பில், பிரதமரின் விக்சித்பாரத் ரோஸ்கர் யோஜனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் தேவி பிரசாத் பட்டாச்சார்யா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்வூதியம், காப்பீட்டுப் பலன்கள், சமூக பாதுகாப்பு சலுகைகள், டிஜிட்டல் சேவைகள் இபிஎஃப்ஒ ஓய்வூதியம், காப் பீட்டுப் பலன்கள், சமூக பாதுகாப்பு சலுகைகள், டிஜிட்டல் சேவைகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல அதிகாரி சங்கர் கூறியதாவது: சென்னை மற்றும் புதுச்சேரியின் மண்டல அலுவலகத்துக்கு கீழ் உள்ள அதிகாரிகள் ஒன்றிணைந்து, பிரதமரின் விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனாவை நடத்துகிறோம். முக்கியமான தொழில்…
