Author: admin

மெக்னீசியம் பெரும்பாலும் அதை கவனத்தை ஈர்க்காது. ஆயினும்கூட, இந்த அமைதியான தாது 300 க்கும் மேற்பட்ட நொதிகள் தங்கள் வேலையைச் செய்ய உதவுகிறது, நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது முதல் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவது வரை. ஆரோக்கியமான, சீரான உணவை உட்கொள்வது இயற்கையாகவே போதுமான மெக்னீசியத்தை வழங்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் இங்கே திருப்பம்: சில நேரங்களில், தட்டில் உள்ள அனைத்து இலை கீரைகள் மற்றும் முழு தானியங்களுடன் கூட, உடலில் உள்ள மெக்னீசியம் அளவு இன்னும் குறைந்து போகக்கூடும்.இது உடலுக்குள் செல்வது மட்டுமல்ல; இது தங்குவதைத் தடுக்கிறது என்பதையும் பற்றியது. மெக்னீசியம் அமைதியாக நழுவுவதற்கு சில காரணங்கள் இங்கே உள்ளன, அதை மீண்டும் கொண்டு வர என்ன செய்ய முடியும்.குடல் ஆரோக்கியம் மெக்னீசியத்தின் நுழைவைத் தடுக்கும்காகிதத்தில், மெக்னீசியம் உட்கொள்ளல் சரியாகத் தோன்றலாம். கீரை, கொட்டைகள், வெண்ணெய் – அனைத்தும் அங்கே. ஆனால் செரிமான அமைப்பு சீராக செயல்படவில்லை…

Read More

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் புதன்கிழமை அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்திருந்தது. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அனிர்பர்கோஷ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திராவுடன் மோதினார். இதில் இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திரா 2-1 (11-8, 11-9, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ரீத் ரிஷ்யா, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் (நெதர்லாந்து) பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் 2-1 (11-9, 11-6, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில்…

Read More

மதுரை: மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று இந்து முண்ணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறினார். மதுரை பாண்டி கோவில் அருகேயுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ம் தேதி நடத்தப்படும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன. அந்த வேல்களுக்கு வண்டியூரில் உள்ள மாநாட்டு அலுவலகத்தில் நேற்று காலை பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியனஅ செய்தியாள்களிடம் கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் கண்காட்சி வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாடு குறித்து பல்வேறு…

Read More

சென்னை: பள்ளி மாணவர்கள் எழுதிய முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று(ஜூன் 12) மதியம் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என்றபடி இளநிலை பட்டப்படிப்பு வரை தரப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜனவரி 25-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 43,351 மாணவ,மாணவிகள் எழுதினர். தற்போது இதன் முடிவுகள் இன்று(ஜூன் 12) மதியம் வெளியிடப்பட உள்ளன. இதையடுத்து மாணவர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில்(www.dge.tn.gov.in) சென்று தங்கள் முடிவுகளை…

Read More

லார்ட்ஸ்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. 20 பந்துகளை சந்தித்த உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் காகிசோ ரபாடா பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற பெடிங்ஹாமிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் இதே ஓவரின் கடைசி பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற எய்டன் மார்க்ரமின் அற்புதமான கேட்ச் காரணமாக நடையை கட்டினார். ஒரே ஓவரில் ரபாடா கைப்பற்றிய இந்த 2 விக்கெட்களும் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்பிக்க பந்துவீச்சை சமாளித்து சீராக ரன்கள்…

Read More

மேட்​டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக முதல்வர் நாளை திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரியின் குறுக்கே 120 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது, 93.47 டிஎம்சி நீர் தேங்கி இருக்கும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டணம், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு உதவியாக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு மொத்தம் 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து,…

Read More

ஸ்டட்கர்ட்: ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் பாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி மெக்சிகோவின் சாண்டியாகோ கோன்சலஸ், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது. ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-7 (5), 6-7 (5) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Read More

இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் 270 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த செலவினம் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் கூறுகையில், “ கடந்த 2023-ம் ஆண்டிலேயே கடனை திருப்பிச் செலுத்த தவறும் அபாயத்தை பாகிஸ்தான் கொண்டிருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் அதிகரிக்கும். அதேசமயம் பணவீக்கம் 7..5 சதவீதமாக இருக்கும்” என்றார். வரும் புதிய நிதியாண்டுக்கான (2025 ஜூலை -26 ஜூன்)பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2.12 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 2.55 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், ராணுவ ஓய்வூதியங்களுக்கான 742 பில்லியன்…

Read More

புதுச்சேரி: திமுக கூட்டணி சலசலத்துப் போயிருக்கிறது. வேறு கூட்டணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் திருமாவளவனின் பேச்சு உள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நேற்று வெளியிட்ட மத்திய அமைச்சர் முருகன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி கண்களை மூடிக்கொண்டு மத்திய அரசு செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கிறார். அவர் நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி ஊழல்கள் நிறைந்த ஆட்சி. பாஜக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாகும். நம்மால் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கை மூலம் பதிலடி தந்துள்ளோம். மணிப்பூரில் அமைதி நிலவ உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணி சலசலத்துப் போயுள்ளது. திருமாவளவன்…

Read More

ஜெட்டா: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்ட ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா – சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் கானர் மெட்கால்ஃபும், 48-வது நிமிடத்தில் மிட்ச் டியூக்கும் கோல் அடித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் ‘சி’ பிரிவில் 2-வது இடம் பிடித்து ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலிய…

Read More