பிலாஸ்பூர்: இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.7) ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கியது. இதில் பேருந்தில் பயணித்த சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிக்காக அங்கு விரைந்துள்ளனர். இதில் காவல் துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்தபடி நிலைமையை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியில் இருந்து இமாச்சலில் உள்ள குமர்வின் பகுதிக்கு 30 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது பேருந்து பிலாஸ்பூரின் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது நிலச்சரிவு காரணமாக பேருந்தின் மீது பாறைகள் மற்றும் மண் சரிந்தன. இதையடுத்து நிலச்சரிவின் இடிபாடுகளில் பேருந்து…
Author: admin
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். பாமக நிறுவனர் ராமதாஸ் (86) இதய பிரச்சினைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலையில் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது, ‘மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனக்கு ஓய்வே கிடையாது” என்றார் ராமதாஸ். இதனிடையே, பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருதய சம்பந்தமாக பிரச்சினைக்கு ஆஞ்சியோகிராம் செய்த சிறப்பு…
மும்பை: இந்தியாவில் புதன்கிழமை (அக்.8) அன்று பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் மூலம் யுபிஐ பேமென்ட்டை பயனர்கள் மேற்கொள்ளும் அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம். இந்தியாவில் நொடிப் பொழுதில் டிஜிட்டல் முறையில் சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பினரும் பணத்தை பெறவும், அனுப்பவும் உதவுகிறது யுபிஐ பேமென்ட். இது வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் சாதகமானதாகவும் உள்ளது. நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பயனர்களுக்கு யுபிஐ பேமென்ட்டை மேலும் எளிதானதாக மாற்றும் வகையில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷனை புதன்கிழமை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்…
காலை பழக்கவழக்கங்கள் உங்கள் நாளை ஒரு நேர்மறையான குறிப்பில் உதைக்க உதவுகின்றன, அதை சரியான முறையில் வடிவமைக்கின்றன, படுக்கையைத் தாக்கும் முன்பே உங்கள் மாலை பழக்கவழக்கங்களும் முக்கியமானவை. எப்படி? சரி, உங்கள் நாளை நீங்கள் எவ்வாறு முடிக்கிறீர்கள் என்பது மறுநாள் காலையின் தொனியை அமைக்க உதவும். பெரும்பாலான மக்கள் தங்கள் தொலைபேசிகள் மூலம் ஸ்க்ரோலிங் செய்வதன் மூலம் அல்லது அதிக அளவில் பார்க்கும் நிகழ்ச்சிகள் மூலம் காற்று வீசும்போது, மிகவும் வெற்றிகரமான நபர்கள் தங்கள் மாலைகளைப் பயன்படுத்தி நாளைக்கு தயாராகிறார்கள். அவர்களின் இரவுநேர நடைமுறைகள் சிக்கலானவை அல்ல – அதற்கு பதிலாக, அவை வேண்டுமென்றே, கவனம் செலுத்துகின்றன, மேலும் மறுநாள் காலையில் அவற்றின் உற்பத்தித்திறன், கவனம் மற்றும் ஆற்றலை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளையும் இன்றையதை விட சிறந்தது என்பதை உறுதிப்படுத்த மிகவும் வெற்றிகரமான நபர்கள் பின்பற்றும் சில எளிய மற்றும் பயனுள்ள மாலை பழக்கவழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:
சென்னை: தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தவில்லை என்றும், அவர் மீது எந்த வன்மமும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியவது: “கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை கடந்து அரசியல் ஆதாயம் தேட பாஜக, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இதை ஏற்க முடியாது. விஜய் மீது எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும், சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தவில்லை. ஆனால், சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்க வேண்டும். பாஜகவின் சூதாட்டத்தை அம்பலப்படுத்துவதால் இல்லாத கட்டுக் கதைகளை அண்ணாமலை கூறுகிறார். விசிகவை யாராலும் சிதறடிக்க முடியாது. கொள்கை…
பீட்ரூட் பாதுகாப்பாக சாப்பிடுவது எப்படி (சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்)பீட் ஆரோக்கியமாக இருக்கும்போது, அவை ஆக்சலேட்டுகளில் அதிகமாக உள்ளன, இது சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கும். நீங்கள் சிறுநீரக கற்களுக்கு ஆளாகிறீர்கள் என்றால் வாரத்திற்கு 2–3 சிறிய பரிமாணங்களுக்கு வரம்பிடவும். கொதிக்கும் ஆக்சலேட் உள்ளடக்கத்தை 80%வரை குறைக்கிறது. நீங்கள் உணர்திறன் இருந்தால் கீரை, ருபார்ப் அல்லது கொட்டைகளுடன் இணைக்க வேண்டாம்.
அதே இரவில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களைத் தொடங்கிய டெக்சாஸில் 23 வயதான துப்பாக்கி ஏந்தியவரால் இந்திய மாணவர் சந்திரசேகர் துருவம் கொல்லப்பட்டார். எரிவாயு நிலையத்தில் பணிபுரியும் 28 வயதான இந்திய மாணவரான சந்திரசேகர் கம்பத்தை சுட்டுக் கொன்ற 23 வயதான ரிச்சர்ட் ஃப்ளோரஸ், எரிவாயு நிலையத்திலிருந்து வெளியேறிய பின்னர் அதே இரவில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களை ஏற்படுத்தினார். ஃபோர்ட் வொர்த் காவல் துறை அதிகாரிகள் எரிவாயு நிலைய துப்பாக்கிச் சூடு குறித்து 911 அழைப்பு வந்தபோது, வெறித்தனத்தைப் பற்றி அறிந்தனர். காரை மற்றொரு வாகனத்தில் மோதியதுபோலீசார் எரிவாயு நிலையத்திற்கு வந்தபோது, துருவம் ஏற்கனவே இறந்துவிட்டது. புளோரஸ் எரிவாயு நிலையத்தை விட்டு வெளியேறி, ஒரு வாகனத்துடன் மற்றொரு வாக்குவாதத்தில் ஈடுபட்டார், அதை பல முறை மோதினார். ஃபோர்ட் வொர்த் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் அதிகாரி பிராட் பெரெஸ், அந்த துப்பாக்கிச் சூட்டில் எந்த உடலும் பாதிக்கப்படவில்லை என்றார்.அத்துமீறல் செய்ய முயற்சித்ததுபின்னர் புளோரஸ்…
சென்னை: கல்விக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்த 179 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூலை 30ம் தேதி வரை 4.03 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டில் இது இரு மடங்காக மாற வேண்டும்” என்றார். இந்த நிகழ்வின் போது பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன்,…
சென்னை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் ‘ஒர்க்லோடு’ மேனேஜ்மென்ட் குறித்து சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவிப்பது உண்டு. இந்த சூழலில் அது குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5-வது போட்டியில் விளையாடியபோது பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் காயத்தில் இருந்து மீண்ட அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இந்நிலையில், பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பது குறித்து சிராஜ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். “வெளியில் இருந்து எழும் இரைச்சல் சப்தங்களை பும்ரா கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவரை மிக கவனத்துடன் இந்திய அணி கையாள்கிறது. ஏனெனில்,…
சிவகங்கை: நடிகர் சிவாஜியை விட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறமையாக நடிக்கிறார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் அக்.13-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்றது. நகரத் தலைவர் உதயா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா கூறியது: ”மதுரையில் அக்.12-ம் தேதி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். அக்.13-ம் தேதி காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் செய்கிறார். கரூரில் துயர சம்பவத்துக்கு மாநில அரசின் நிர்வாக சீர்கேடுதான் காரணம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுககாரர் போல் செயல்படுகிறார். அவரை பணியிடை நீக்கம் செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் 60 பேர் உயிரிழந்தபோது சென்று பார்க்காத முதல்வர், கரூருக்கு மட்டும்…
