Author: admin

சென்னை: இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க கள ஆய்வு நடத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் கள ஆய்வு செய்த ஆட்சியர் ஜெயசீலன், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ அன்மையில் வெளியானது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை பலர் வெகுவாக பாராட்டினர். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: “வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்! ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய…

Read More

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்கள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் (Centralised server) இல்லாததால் பணிமனை அளவிலும், தலைமை அலுவலக அளவிலும் பல பணிகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு நேரமும், மனித உழைப்பும் வீணாகிறது. ஆன்லைனில் எடுத்துக் கொள்ள கூடிய தகவல்களை கூட எக்ஸல் மற்றும் கூகுள் ஷீட் மூலமாக பணி நேரம் முடிந்த பிறகும் என்ட்ரி செய்ய சொல்லி பணியாளர்களுக்கு தேவை இல்லாத பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கணினி பிரிவில் பணி செய்யும் ஊழியர்களை நேர காலமின்றி வேலை வாங்குவதும், தலைமையகத்துக்கு நேரில் வரவழைத்து காக்க வைத்து, தகாத வார்த்தைகளால் பேசி திருப்பி அனுப்புவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். முக்கியமாக மிக பழமையான மென்பொருள் மூலம்…

Read More

சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை நாளை (ஜூன் 16) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் வேடிக்கையான மற்றும் புதிரான சோதனைகள், அவை இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டன. ஏன்? இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்ட வித்தியாசமான தோற்றமுள்ள படங்கள், அவை கண்களை ஏமாற்றுகின்றன-எனவே அவை ஆப்டிகல் மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுபோன்ற படங்களில் ஒரு நபர் முதலில் கவனிப்பதன் அடிப்படையில், இந்த சோதனைகள் நபரின் குறைவாக அறியப்பட்ட பண்புகளை வெளிப்படுத்தும். எப்படி? ஏனெனில் இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை.உதாரணமாக, ஒரு நபர் ___ என்றால் இந்த குறிப்பிட்ட படம் எளிதாக வெளிப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஜக்ரான் ஜோஷ் பகிர்ந்து கொண்ட படத்தின் முதல் பார்வையில், ஒரு நபர் இரண்டு கூறுகளில் ஒன்றைக் காணலாம்- ஒரு பூனை அல்லது ஒரு மீன். அவர்கள் முதலில் கவனிப்பதைப் பொறுத்து, அவர்களின் உண்மையான ஆளுமை பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும்.எனவே, சோதனை எடுக்க…

Read More

திண்டுக்கல்: கொடைக்கானல் குணா குகை பகுதியில் கர்நாடகா சுற்றுலாப் பயணியிடம் ரூ.500 கட்டு ஒன்றை பறித்துச்சென்ற குரங்கு மரத்தின்மேல் சென்று ஒவ்வொரு தாளாக சூறை விட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்படுகிறது. இந்த கோடை சீசனில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த பகுதியாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. ‘குணா’ படம் வெளியான பிறகு பிரபலமான இந்த சுற்றுலாத்தலம். ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற படம் வெளியான பிறகு மீண்டும் பிரபலமாகத் துவங்கியது. இதையடுத்து கடந்த கோடை சீசனில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற இடமாக குணா குகை பகுதி உள்ளது. இருந்தபோதிலும் குணா குகை பகுதி சர்ச்சைக்கு உள்ளான பகுதியாகவே உள்ளது. கொடைக்கானல் குணா குகை பகுதியில் மரத்தின் மீது அமர்ந்து கொண்டு 500 ரூபாய் தாள்களை வீசிய குரங்கு. …

Read More

குடல் சுகாதார நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி, பொதுவான படுக்கையறை பொருட்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று எச்சரிக்கிறார். பழைய தலையணைகள் ஒவ்வாமைகளைக் குவித்து, சைனஸ்கள் மற்றும் தூக்கத்தை பாதிக்கின்றன, ஒவ்வொரு 1-2 வருடங்களுக்கும் மாற்றாக தேவை. செயற்கை காற்று ஃப்ரெஷனர்கள் சுவாச பிரச்சினைகள் மற்றும் ஹார்மோன் சீர்குலைவு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடுகின்றன; இயற்கை மாற்றுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. படுக்கையறை ஒரு வசதியான சரணாலயமாக இருக்க வேண்டும், அங்கு ஒருவர் ஓய்வெடுத்து அடுத்த நாள் மீட்டமைக்க முடியும். ஆனால் நாங்கள் உங்களுக்குச் சொன்னால், உங்கள் படுக்கையறையில் தீங்கு விளைவிக்கும் ஒன்று இருக்கலாம்? ஆம், அது சரி. உங்கள் படுக்கையறை தீங்கு விளைவிக்கும் உடல்நல அபாயங்களைக் கொண்டிருக்கக்கூடும், அவை பெரும்பாலும் வெற்றுப் பார்வையில் மறைக்கப்படுகின்றன. கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சியளிக்கப்பட்ட கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ச ura ரப் சேத்தி…

Read More

தெஹ்ரான்: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான உதவி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் தூதரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் இணைப்பு தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்க. என்று தெரிவித்தது. மேலும், “தயவுசெய்து பின்வரும் இணைப்பில் உங்கள் விவரங்களை வழங்கவும்: 2. பீதி அடையாமல் இருப்பது, உரிய எச்சரிக்கையுடன் செயல்படுவது மற்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளது. ஈரானில் தேவையற்ற பயணங்களை தவிர்க்க இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ள தூதரகம், தகவல் தொடர்புக்காக பல…

Read More

சென்னை: குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை, அதிமுக முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல மடங்கு வீட்டு வரி, வணிக வளாகங்களுக்கான வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை அமல்படுத்தி தமிழக மக்களையும், வியாபாரிகளையும் வஞ்சித்து வரும் திமுக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான கடைகளின் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில், நகராட்சிக்குச் சொந்தமாக சுமார் 800 கடைகள் உள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது பரப்புரை செய்ய வந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஸ்டாலின், குன்னூரில்…

Read More

ஒரு புதிய குழந்தை பிறந்த பிறகு புதிய தாய்மார்களில் பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு பற்றி எல்லோரும் பேசுகிறார்கள், ஆனால் புதிய தந்தையர்களின் மன ஆரோக்கியத்தை யாரும் உண்மையில் உரையாற்றுவதில்லை. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (ஏ.எச்.ஏ) கருத்துப்படி, புதிய தந்தைகளில் சுமார் 10 சதவீதம் பேர் புதிய தாய்மார்களைப் போலவே பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வை அனுபவிக்கிறார்கள். தந்தையர் தினத்தில், இந்த நிகழ்வு என்ன மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளை ஆழமாக ஆராய்வோம். ஒரு புதிய பெற்றோராக மாறுவது ஒரு அழகான அனுபவம், ஆனால் இது அதன் சொந்த சவால்களுடன் வருகிறது. முதன்முறையாக தந்தையின் அத்தியாயத்தில் காலடி எடுத்து வைப்பது உறுதியாகத் தெரியாதது அல்லது எவ்வாறு முன்னேறுவது என்பது பற்றி பல கேள்விகளைக் கொண்டிருக்கலாம். தந்தை என்பது வெறுமனே வாழ்க்கையை மாற்றும் அனுபவம் அல்ல, ஆனால் அதனுடன் உணர்ச்சி மற்றும் உளவியல் மாற்றங்களைத் தருகிறது. “பெரினாட்டல் காலத்தில் தாய்மார்களுக்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், புதிய…

Read More

புனே: புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த இரும்புப் பாலத்தின் கீழ் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் பேரிடர் நிவாரணப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, வலுவான நீர் ஓட்டம் பாலம் இடிந்து விழுந்ததற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 15…

Read More