Author: admin

திருநெல்வேலி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து (74) உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார். திருநெல்வேலியில் எம்.சுப்பிரமணிய பிள்ளை, எம்.சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி முத்து பிறந்தார். திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தனது பெயருக்கு முன்னால், ‘நெல்லை’ என்று ஊர் பெயரை சேர்த்துக்கொண்டார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றினார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவர், அவருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய இவர், அறிவியல், குழந்தைகள் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என பல்வேறு தலைப்புகளில் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், அறிவியல் குறித்து 100-க்கும் மேற்பட்ட தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘செவ்வாயின் வெப்பமும் நல்வாய்ப்பும்’ என்ற புத்தகம், செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நவீன அறிவியல் சாத்தியக்கூறுகளைப்…

Read More

சென்னை: தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணங்களை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கம் சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நடைபெற்றது. அப்போது பெ.சண்முகம் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் எடுத்து வருகிறார். அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக பிரதமர் மோடி மாற்றி வருகிறார். இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல், மூன்றாம் உலகப்போர் வந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. பட்டியலின மக்களுக்கு ஏராளமான நிபந்தனைகளோடு ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் இந்த நிலம் வழங்கப்பட்டது. ஆனால்,…

Read More

உடற்பயிற்சியின் ஒரு அதிசய வடிவமான யோகா மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மென்மையான நீட்சி, சுவாசம் மற்றும் தியானத்தை ஒருங்கிணைக்கிறது. கார்டிசோல் போன்ற தீங்கு விளைவிக்கும் ஹார்மோன்களை அதிகரிப்பதன் மூலம் மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. யோகாவைப் பயிற்சி செய்வது மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது, இது உங்கள் உடலின் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனை ஆதரிக்கிறது.சில யோகா போஸ்கள் இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் வடிகால் ஆகியவற்றை மேம்படுத்துகின்றன, நச்சுகளை அகற்றவும், அவை தேவைப்படும் இடத்தில் நோயெதிர்ப்பு செல்களை வழங்கவும் உதவுகின்றன. குழந்தையின் போஸ், கீழ்நோக்கிய நாய் மற்றும் பிரிட்ஜ் போஸ் போன்ற எளிய போஸ்கள் ஆரம்பநிலைக்கு சிறந்தவை, மேலும் அவை வீட்டில் செய்யப்படலாம். நீங்கள் ஒரு முழுமையான தொடக்கக்காரர் என்றால், யோகா வகுப்பில் சேரவும்.

Read More

சென்னை: தொடர்ச்சியாக தீ விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மை காலமாக நமது துணை மின் நிலையம், மின்மாற்றிகளில் தீ விபத்துக்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கொடுங்கையூர், வியாசர்பாடி, கயத்தாறு, மதுரை மற்றும் சில விபத்துக்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என்பதை எடுத்துரைக்கிறது. இதுபோன்ற விபத்துக்கள் மின் விநியோகத்தை பாதிப்பதோடு நிற்பதில்லை. பொதுமக்களின் பாதுகாப்பில் சமரசத்தை உருவாக்குவதோடு, பொதுமக்கள் நம்மை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமைகிறது. எனவே, தற்போதைய தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தீவிரமாக அமல்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது, தீயை அணைப்பதோடு, மாற்று திட்டங்கள் மூலம் மின்விநியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தோடு சேர்ந்து, துணை மின்நிலையங்கள், மின்மாற்றி அருகே கழிவு பொருட்களை…

Read More

சென்னை: தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது. சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3-வது நாளே இருவரை போலீஸ் கைது செய்தது. அவர் ஜூன் 11-ம் தேதி இரவு சாலையில் உயிரிழந்து கிடந்த நிலையில், சந்தேக மரணமாக முதலில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது. உடற்கூறாய்வில், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிந்ததும், கொலை வழக்கு பதிந்து இருவரை போலீஸார் கைது செய்தனர். பாஜக பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான நபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்தினாலேயே பாமக பிரமுகர்…

Read More

மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டு அரங்கில் முருகனின் அறுபடை வீடுகளின் கண்காட்சி இன்று தொடங்குகிறது என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். மதுரையில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்க அவரை நேரில் சந்திக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை பதில் வரவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அரசும், போலீஸாரும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். மாநாடு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே அறுபடை வீடுகளின் கண்காட்சியை நடத்த நினைத்திருந்தோம். அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் நீதிமன்றம் சென்று அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து முருகனின் அறுபடை…

Read More

சென்னை: டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடலுர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாவும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த முருகானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகானந்தம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சுரேஷ் சக்திமுருகன் ஆஜராகி, உள்ளுர் பகுதி மக்களின் நலன் கருதியே போராட்டம்…

Read More

அடுத்த நிதியாண்டில், 24 பெட்டிகளை கொண்ட தூங்கும் வசதி (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியைத் தொடங்க சென்னை ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலை திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேக்கு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஐசிஎஃப் ஆர்வம் காட்டுகிறது. வந்தே பாரத் ரயிலைப் பொறுத்தவரை, சென்னை ஐ.சி.எஃப்-ல்தான் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிவேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் ரயில்’ என்று பெயரிட்டு, இதன் சேவையை, புதுடில்லி – வாராணசி இடையே பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே…

Read More

சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். சீருடையில் நேரில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், நீதிபதி உத்தரவின்பேரில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமியின் மூத்த மகன் தனுஷும்(23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜயயும் (21) காதலித்து வந்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதை விரும்பாத வனராஜா, தனதுமகளை மீட்க திட்டமிட்டார். காவல் உதவி ஆய்வாளராக இருந்த மகேஸ்வரி மூலமாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார். இதை தொடர்ந்து, வனராஜா, அவரது உறவினர்கள், மகேஸ்வரி ஆகியோர் கடந்த ஜூன் 6-ம் தேதி தனுஷ் வீட்டுக்கு சென்றனர்.…

Read More

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.325.96 கோடி மதிப்பிலான 2,461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.309.48 கோடி மதிப்பிலான 4,127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.25 லட்சம் பேருக்கு ரூ.558.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2021-22 முதல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு இத்திட்டத்துக்கு ரூ.82.77 கோடி ஒதுக்கப்படும். முதல்முறையாக டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களிலும் குறுவை சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.132.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 56 ஆயிரம் விவசாயிகள் உட்பட தமிழகம்…

Read More