Author: admin

Last Updated : 08 Oct, 2025 07:55 AM Published : 08 Oct 2025 07:55 AM Last Updated : 08 Oct 2025 07:55 AM சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் நிலச்​சரி​வில் பேருந்து சிக்கி 15 பயணி​கள் உயி​ரிழந்​தனர். 20 பேர் மண்​ணில் புதைந்​துள்​ளனர். இமாச்சல பிரதேசத்​தில் தொடர்ந்து கனமழை பெய்து வரு​கிறது. அங்கு மழை, வெள்​ளம், நிலச்​சரிவு காரண​மாக கடந்த சில மாதங்​களில் 320 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ரூ.3 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்​தின் பிலாஸ்​பூர் பகு​தி​யில் கனமழை காரண​மாக நேற்று மாலை நிலச்​சரிவு ஏற்​பட்​டது. அப்​போது அந்த வழி​யாக சென்ற பேருந்து நிலச்​சரி​வில் சிக்​கியது. தகவல் அறிந்து போலீ​ஸார் மற்​றும் தீயணைப்புப் படை, மாநில பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​தனர். ஜேசிபி இயந்​திரம் மூலம் மண்ணை அகற்​றும் பணி நடை​பெற்​றது.…

Read More

புதுடெல்லி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 140 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்​தில் வரும் 10-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்​டிக்​கான ஆடு​களம் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக அமையக்​கூடும் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. அகம​தா​பாத்​தில் இருந்​ததை போன்று டெல்லி ஆடு​களத்​தில் புற்​கள் சீராக இல்​லை. ஒரு சில பகு​தி​களில் மட்​டுமே புற்​கள் உள்​ளன. மேலும் ஆடு​களத்​தின் அடிப்​பகுதி கருப்பு மண் கொண்டு தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. பொது​வாக கருப்பு மண் கொண்டு செய்​யப்​படும் ஆடு​களங்​கள் பேட்​ஸ்​மேன்​களுக்கு சாதக​மாகவே இருக்​கும். மேலும் ஆடு​களம் உலரத் தொடங்​கும்…

Read More

‘ராஜா கிளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான உமாபதி ராமையா, அடுத்து இயக்கும் படத்தில் நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் அரசியல் கதையை கொண்டது. அவருடன் இணைந்து, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் உமாபதி ராமையா கூறும்போது, “நிஜத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படம் இது. நட்டி சார் ஹீரோவாக இணைந்திருப்பது மகிழ்ச்சி. இது அரசியல் திரைப்படம் என்றாலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்த படைப்பாக இருக்கும்” என்றார். கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதியுள்ளார். இந்தப்படத்துக்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார்.

Read More

நாமக்கல்: கரூர் விவ​காரத்​தில் அரசி​யல் கட்சி என்ற அந்​தஸ்தை தவெக இழந்​து​விட்​டது. எனவே, அக்​கட்​சி​யின் பதிவை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்ய வேண்​டும் என்று இந்து மக்​கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் கூறி​னார். நாமக்​கல் ஆஞ்​சநேயர் கோயி​லில் நேற்று வழிபட்ட அர்​ஜுன் சம்​பத், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணி​யினர் தொடர்ந்து பாலஸ்​தீனத்​துக்கு ஆதரவு என்ற போர்​வை​யில் தீவிர​வாத இயக்​கங்​களுக்கு ஆதரவு கொடுத்து வரு​கிறார்​கள். அத்​தகைய இயக்​கங்​களை தடை செய்ய வேண்​டும். கரூர் நகரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​தில் அப்​பாவி மக்​கள் 41 பேர் உயி​ரிழந்​தனர். சென்னை மெரினா கடற்​கரை​யில் நடந்த விமானப்​படை சாகச நிகழ்ச்​சி​யில், முதல்​வர் முன்​னிலை​யில் 60 பேர் மயக்​கமடைந்​தனர். 6 பேர் உயி​ரிழந்​தனர். அரசி​யல், பொது நிகழ்ச்​சிகளில் கூட்ட மேலாண்​மையை சரிவர கடைப்​பிடிப்​ப​தில்​லை. திரு​வண்​ணா​மலை கிரிவலப்​பாதை​யில் நெரிசலில் பக்​தர்​கள் சிக்​கு​வதைத் தடுத்​து, அவர்​களுக்கு உரிய பாது​காப்பு தர வேண்​டும். கரூரில் தவெக…

Read More

கோல்ட்ரிஃப் இருமல் சிரப் சோகம் மீண்டும் இந்தியாவின் மருந்து பாதுகாப்பு அமைப்பில் இடைவெளிகளை அம்பலப்படுத்தியுள்ளது. டாக்டர் லான்சலோட் பிண்டோ, பி.டி. இந்துஜா தேசிய மருத்துவமனையின் ஆலோசகர் சுவாசவியலாளர், இத்தகைய மாசுபாடு ஏன் ஆபத்தானது, மற்றும் இருமல் சிரப் உண்மையிலேயே தேவைப்படும்போது விளக்குகிறதுகோல்ட்ரிஃப் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் குறைந்தது 14 குழந்தைகளின் இறப்புகளுடன் இணைக்கப்பட்ட இருமல் சிரப், 48.6% டைதிலீன் கிளைகோல் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, இது கிட்டத்தட்ட 500 மடங்கு பாதுகாப்பான வரம்பாகும். இத்தகைய நச்சு இரசாயனத்தை உட்கொள்வது குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்க முடியுமா?டைதிலீன் கிளைகோல் எந்த அளவிலும், ஒரு மருந்தில் இருக்கக்கூடாது. டைதிலீன் கிளைகோல் (டிகிரி) மற்றும் எத்திலீன் கிளைகோல் (எ.கா.) ஆகியவை ஆண்டிஃபிரீஸ், வண்ணப்பூச்சுகள், பிரேக் திரவங்களில் பயன்படுத்தப்படும் தொழில்துறை கரைப்பான்கள் மற்றும் மனித நுகர்வுக்கு அல்ல. அவர்கள் மலிவான கரைப்பான்கள் என்பதால், நேர்மையற்ற உற்பத்தியாளர்கள் கிளிசரால் போன்ற அதிக விலை, பாதுகாப்பான மற்றும்…

Read More

மெல்பர்ன்: இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்டி மற்​றும் 5 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. ஒரு​நாள் போட்​டித் தொடரின் ஆட்​டங்​கள் வரும் 19, 23, 25-ம் தேதி​களில் பெர்த், அடிலெய்​டு, சிட்னி ஆகிய நகரங்​களில் நடை​பெறுகிறது. ஐந்து டி20 போட்​டிகள் அக்​டோபர் 29 (கான்​பெர்​ரா), அக்​டோபர் 31 (மெல்​பர்ன்), நவம்​பர் 2 (ஹோ​பார்ட்), நவம்​பர் 6 (கோல்ட் கோஸ்ட்) மற்​றும் நவம்​பர் 8 (பிரிஸ்​பன்) ஆகிய தேதி​களில் நடை​பெகிறது. இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்டி தொடர் மற்​றும் டி 20 தொடரின் முதல் 2 ஆட்​டங்​களில் பங்கேற்கும் ஆஸ்​திரேலிய அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது. கேப்​டன் பாட் கம்​மின்ஸ் முதுகு வலி காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யாத​தால் ஒரு​நாள் போட்​டித் தொடருக்​கும் மிட்​செல் மார்ஷ் கேப்​ட​னாக தொடர்​வார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச டி 20 போட்​டி​யில்…

Read More

கும்பகோணம்: கரூர் சம்​பவத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்​பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறி​னார். கும்​பகோணம் அரு​கே​யுள்ள சுவாமிமலை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: விஸ்வ இந்து பரிஷத் நடத்​திய முருக பக்​தர்​கள் மாநாட்​டில் நிறைவேற்​றிய தீர்​மானத்​தின்​படி, வரும் 25, 26, 27-ம் தேதி​களில் ஒரே நேரத்​தில் பல லட்​சம் பேர் கந்த சஷ்டி கவசம் படிக்​கும் நிகழ்ச்சி நடை​பெறும். கள்​ளக்​குறிச்​சி​யில் கள்​ளச்​சா​ரா​யம் குடித்து 60 பேர் உயி​ரிழந்​த​ போது செல்​லாத முதல்​வர் ஸ்டா​லின், கரூருக்கு விரைந்து சென்று பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்​தார் என்​றால், அதற்கு காரணம் அரசி​யல்​தான். கரூர் மாவட்ட எஸ்​.பி. திமுக​காரர்​போல செயல்​படு​கிறார். கரூர் சம்​பவத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​காத எஸ்​.பி.யை உடனே சஸ்​பெண்ட் செய்ய வேண்​டும். அதே​போல, கரூர் மாவட்ட ஆட்​சி​யர் மீதும் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். அரசு கடமை தவறிய​தால் 41 பேர் உயி​ரிழந்​தனர். நிர்​வாகத் தோல்​வியை…

Read More

ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நீடித்த உடல் செயல்பாடுகளின் குறுகிய வெடிப்புகள், உட்கார்ந்த பெரியவர்களில் இருதய உடற்திறனை கணிசமாக மேம்படுத்த முடியும் என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த அணுகுமுறை, படிக்கட்டு ஏறுதல் அல்லது வலிமை பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது, அதிக பின்பற்றுதல் விகிதங்களை நிரூபித்தது மற்றும் நேரம் மற்றும் உந்துதல் போன்ற பொதுவான தடைகளை சமாளிக்க ஒரு நடைமுறை தீர்வை வழங்குகிறது. உங்கள் இருதய உடற்தகுதியை மேம்படுத்த தின்பண்டங்களின் உதவியை நாடுவதை கற்பனை செய்து பாருங்கள்! நாங்கள் உடற்பயிற்சி தின்பண்டங்களைப் பற்றி பேசுகிறோம். ஒரு புதிய ஆய்வில், உடற்பயிற்சி தின்பண்டங்கள் உடல் செயலற்ற பெரியவர்களின் இருதய உடற்தகுதியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் கண்டுபிடிப்புகள் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.உடற்பயிற்சி தின்பண்டங்கள் என்றால் என்ன?உடற்பயிற்சி தின்பண்டங்கள் என்பது உடல் செயல்பாடுகளின் வேண்டுமென்றே குறுகிய வெடிப்புகள். இது படிக்கட்டுகள், வலிமை பயிற்சிகள் அல்லது தை…

Read More

பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பேரலல் பார்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த விஷ்யந்த் சாய் 10.25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையை சேர்ந்த மதிகரன் (9.95) வெள்ளிப் பதக்கமும், சேலத்தை சேர்ந்த ஜஸ்வின் (9.80) வெண்கலப் பதக்கமும் வென்றனர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வேளச்சேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் டேபிள் வால்ட் போட்டியில் கோவையை சேர்ந்த காவியன் 12.07 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மதுரையை சேர்ந்த எஸ்.முகமது அயாஸ் (10.88) வெள்ளிப் பதக்கமும், சென்னையை சேர்ந்த ஜெயராம் கதிர் (10.15) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்தில் தூத்துக்குடி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தங்கப் பதக்கம் வென்றது. சென்னை அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெள்ளிப் பதக்கமும், கோவை அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின. கேம்…

Read More

இயக்குநர் வெற்றி மாறன் ‘விடுதலை’, ‘விடுதலை 2’ படங்களை அடுத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தது. இதை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தார். சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அவருடன் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்கு டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சிலம்பரசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது ‘வடசென்னை’யின் 2 வது பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதை மறுத்த இயக்குநர் வெற்றிமாறன், இது வட சென்னை யுனிவர்ஸ் கதை என்றும் ‘வட சென்னை’ படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் புரமோ அக்.4-ம் தேதி வெளியாவதாக இருந்தது. சென்சார் காரணங்களால் அது தாமதமானது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு, முதல் தோற்ற போஸ்டரோடு வெளியாகி இருக்கிறது. படத்துக்கு ‘அரசன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில்…

Read More