“கலையில் மட்டும்தான் அழுவதை கூட ரசிக்க முடியும்” என்று நடிகர் காளி வெங்கட் கூறியுள்ளார். கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் காளி வெங்கட் பேசும்போது, “இப்படத்துக்கு வழங்கிய ஆதரவுக்கும், இதற்கும் மேலும் தொடர்ந்து வழங்கப் போகும் ஆதரவுக்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் கதை எனது தந்தையை நினைவுபடுத்தியது. அவருக்கு சமர்ப்பிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை தெரிந்து கொள்வதற்காக திரையரங்கத்துக்க்கு சென்ற போது,…
Author: admin
மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில் இன்று திமுக மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தக்காக மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாகச் செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மதுரையிலிருநது புளியங்குளம், சிலைமான், மணலூர், திருப்புவனம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் தினமும் இப்பேருந்து களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், விரகனூர் சுற்றுச்சாலை அருகே மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து திமுக மாணவரணியினர் இன்று மேடை அமைத்திருந்தனர். தார்ச் சாலையை பெயர்த்து கம்புகள் ஊன்றி…
உயர் இரத்த அழுத்தம் தமனிகளின் உள் புறணியை சேதப்படுத்துகிறது, இதனால் அவ்வப்போது சிறிய கண்ணீரை ஏற்படுத்துகிறது. உடல் இந்த கண்ணீரை சரிசெய்ய முயற்சிக்கிறது, ஆனால் கொலஸ்ட்ரால் மற்றும் பிற கொழுப்பு பொருட்கள் இந்த சேதமடைந்த தளங்களில் கட்டங்களை உருவாக்கலாம். பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை தமனிகளைக் குறைத்து, இதய தசைக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. ஒரு தகடு சிதைந்தால், அது இரத்த ஓட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கலாம், இது மாரடைப்பு ஏற்படுகிறது, இது ஆபத்தானது.
மாஸ்கோ: இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக ராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறும்போது, “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க ராணுவ உதவி வழங்குவது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும். இஸ்ரேலுக்கு நேரடி ராணுவ உதவி அல்லது அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ளக் கூடாது. இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும்” என்றார். மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் ரஷ்யா தொடர்பில் இருப்பதாக ரியாப்கோ கூறினார். அதே நேரத்தில் ரஷ்ய உளவுத் துறை சேவையின் தலைவர் செர்ஜி நரிஷ்கின், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமை இப்போது மோசமாக இருப்பதாக கூறினார். இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர்…
‘புஷ்பா 2’ திரைப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இது பாலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அனைத்து தளங்களிலும் ‘புஷ்பா 2’ திரைப்படம் சாதனையை நிகழ்த்தியது. தற்போது இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பில் 5.1 டி.ஆர்.பி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூல ம் 5.4 கோடி பேர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இப்படத்தினை கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கையைப் பார்த்து பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் ஷாரூக்கான் நடித்த ‘பதான்’, ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ உள்ளிட்ட பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் கூட இந்த டி.ஆர்.பியை எட்டவில்லை. ‘புஷ்பா 2’ திரைப்படம் அந்தளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கூட 3.9 டி.ஆர்.பி தான் பெற்றிருக்கிறது. அதனை ‘புஷ்பா 2’ முறியடித்திருப்பதன் மூலம் எந்தளவுக்கு வட இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.
சென்னை: “ஜூன் 20-ம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக அரசு அதிகாரிகளிடம் பதப்படுத்தும் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன” என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மா’ சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. ‘மா’ விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு. பழனிசாமி செய்தித்தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என தமிழக முதல்வர் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூறைப் பரப்பியிருக்கிறார். ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் ‘மா’ சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது.…
உலகின் மிகவும் பிரபலமான செல்ல நாய் இனங்களில் ஒன்றான லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் நட்பு, விசுவாசமுள்ளவர்கள், ஆற்றல் நிறைந்தவர்கள். விளையாட்டை மீட்டெடுக்க அவர்கள் முதலில் வேலை செய்யும் நாய்களாக வளர்க்கப்பட்டனர் (எனவே பெயரிடப்பட்டது), ஆய்வகங்களுக்கு பொருத்தமாகவும் அமைதியாகவும் இருக்க வழக்கமான உடற்பயிற்சி தேவை. அவற்றின் உயர் ஆற்றல் அளவைக் கருத்தில் கொண்டு, ஆய்வகங்களுக்கு ஒரு எளிய நடை போதாது. அதற்கு பதிலாக, அவர்கள் நீச்சல், ஓட்டம் மற்றும் ஃபெட்ச் போன்ற விளையாட்டுகளை விரும்புகிறார்கள், இது அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. ஆய்வகங்கள் சாப்பிட விரும்புகின்றன, எனவே அவை எடை அதிகரிப்புக்கு ஆளாகின்றன; தினசரி உடல் செயல்பாடுகளால் இதைத் தவிர்க்கலாம். நினைவில் கொள்ளுங்கள், ஒரு சலித்த ஆய்வகம் அவர்கள் செய்யக்கூடாத விஷயங்களை ஹைப்பர் ஆகலாம் அல்லது மெல்லலாம், எனவே தினசரி செயல்பாடு அவர்களுக்கு அவசியம்.
தெஹ்ரான்: “ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, “இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த நேரத்திலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தால், நாங்கள் அமெரிக்காவுக்கு பதிலளிக்கத் தொடங்குவோம். ட்ரம்ப்பின் முற்றிலும் தேவையற்ற மற்றும் விரோதமான கருத்துகள் குறித்து ஈரான் விழிப்புடன் இருக்கிறது. ஒரு கோடு உள்ளது, அதை தாண்டினால், எங்கள் தரப்பில் பதிலளிப்போம். அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டியவுடன், எங்களின் பதில் வரும்” என்று கூறினார். மேலும், “இஸ்ரேல் அல்லது அமெரிக்கா என யாராக இருந்தாலும் நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம். எந்தப் பக்கத்திலிருந்தும்…
‘கூலி’ படத்தின் வெளிநாட்டு உரிமை பெரும் போட்டிக்கு இடையே அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் உரிமைகள் விற்பனை தொடங்கியிருக்கிறது. முதலாவதாக கடும் போட்டிகளுக்கு இடையே வெளிநாட்டு உரிமம் விற்பனையாகி இருக்கிறது. ‘கூலி’ படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் சுமார் 75 கோடி ரூபாய் ‘எமி.ஜி’அடிப்படையில் கைப்பற்றி இருக்கிறது. இந்த விலைக்கு எந்தவொரு தமிழ் படத்தின் வெளிநாட்டு உரிமமும் விற்பனையானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த உரிமத்தையும் சிலர் ரூ.81 கோடிக்கு விநியோக அடிப்படையில் கேட்டார்கள். அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்து, ஐங்கரன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. இந்த வியாபாரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விரைவில் இப்படத்தில் இருந்து பாடலொன்றை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.
புதுச்சேரியில் விரைவில் 6,000 விவசாயிகளின் பம்புசெட்டுகளில் இலவச சோலார் பேனல் அமைக்கவுள்ள தாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் துறை மூலம் ‘என் வீடு என் நலம்’ திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள விதை, பூச்சி மருந்து, உரம் உட்பட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மாடித் தோட்டம் அமைப்பதற்கான பொருட்கள் 3 ஆயிரம் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசியது: “புதுச்சேரியில் நகரமயமாக்கதால் செடி, மரங்களை காணமுடியவில்லை. மரம் நட இடம் இல்லை. ஆனால் வீட்டில் கார், மோட்டார் சைக்கிள் நிற்கிறது. இருக்கின்ற இடத்தில் செடிகளை நட, தோட்டம் வைக்க இத்திட்டத்தை தொடங்குகிறோம். மாடித்தோட்டம் வைப்பது ஒரு கலை. தற்போது காய்கறி விளைவிக்க இத்திட்டத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி சாகுபடி செய்யும் சாதனங்களை தருகிறோம். இதற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு…