Author: admin

மேட்டூர்: எடப்பாடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை மாணவிகள் கழுவியதாக வீடியோ வைரலான நிலையில், அந்த தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள், மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை கழுவுவது போன்ற வீடியோ இன்று (ஜூன் 18) சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த வீடியோவைப் பார்தது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரை ஆலச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து தாரமங்கலம் தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி கல்வி…

Read More

சீன விஞ்ஞானிகள் விண்வெளி ஆய்வில் ஒரு அற்புதமான சாதனைகளை மேற்கொண்டுள்ளனர், பகலில் பூமி-சந்திரன் இடத்தில் உள்ள செயற்கைக்கோள் ஒளிக்கதிர்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், வலுவான பகல் குறுக்கீட்டை வென்றனர்.யுன்னான் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளரான லி யுகியாங்கின் கூற்றுப்படி, ஆராய்ச்சி குழு வெற்றிகரமாக ஒரு லேசரை ஒளிரச் செய்தது தியாண்டு -1 செயற்கைக்கோள். இந்த சாதனை பூமி-சந்திரன் இடத்தில் வழிசெலுத்தல் மற்றும் நிலைப்படுத்தல் திறன்களை மேம்படுத்துகிறது, இது எதிர்காலத்தை ஆதரிக்கிறது ஆழமான விண்வெளி ஆய்வு திட்டங்கள். தியாண்டு -1 செயற்கைக்கோளுக்கு சீனாவின் நிலத்தடி பகல்நேர லேசர் சமிக்ஞைஏப்ரல் 26-27 தேதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனை, முதல் பகல்நேர பூமிக்கு முதல் நிலவு லேசர்-ரேஞ்சிங் சோதனையை குறித்தது. சின்ஹுவானெட்.காம் படி, சீனாவின் ஆழமான விண்வெளி ஆய்வு ஆய்வகம் பூமியிலிருந்து தியாண்டு -1 செயற்கைக்கோளுக்கு ஒரு துல்லியமான லேசரை வெற்றிகரமாக சுட்டது, ஏறக்குறைய 130,000 கிலோமீட்டர் தொலைவில், சூரிய ஒளி குறுக்கீடு இருந்தபோதிலும் சமிக்ஞை திரும்பியது. யுன்னான்…

Read More

இது AI உருவாக்கிய படம் கேரளாவைச் சேர்ந்த இந்திய மலையேறுபவர் ஷேக் ஹசன் கான், வட அமெரிக்காவின் தெனாலி மலையில் தனது குழுவுடன் சிக்கித் தவித்து, செயற்கைக்கோள் தொலைபேசி வழியாக ஒரு SOS செய்தியை அனுப்பியுள்ளார், பயணத்தின் போது சிரமங்களை எதிர்கொண்ட பின்னர் அவசர மீட்பு கோரி.கான், ஒரு SOS செய்தியை அனுப்பினார், அவரும் அவரது குழுவும் வட அமெரிக்காவின் மிக உயர்ந்த உச்சமான தெனாலி மலையின் முகாம் 5 இல் 17,000 அடி உயரத்தில் கடுமையான புயலில் சிக்கியுள்ளனர்.”ஹாய் இது ஷேக். நான் வட அமெரிக்காவின் மிக உயர்ந்த உச்சமான தெனாலி மலைக்கு ஒரு பயணத்தில் இருக்கிறேன். முகாம் 5 இல் 17,000 அடி உயரத்தில் நாங்கள் கடுமையான புயலில் சிக்கியுள்ளோம்,” என்று அவரது செய்தி படித்தது.”உயிர்வாழ்வதற்கு குறைவான உணவு மற்றும் நீர். ஆபரேஷன் சிண்டூருக்கு எங்கள் ஆயுதப் படைகளை வாழ்த்துவதற்காக ஒரு பேனரை வைத்திருக்கும் பணியில் நான் இங்கு…

Read More

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை 3 வாரங்களுக்குள் 3 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையை பதித்துள்ளது. இதில் இரண்டு மூளைச்சாவு அடைந்தவர்கள் தானம் அளித்த சிறுநீரகங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மற்றொன்று உறவினர் தானம் மூலம் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். இதனை சிறுநீரியல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர், மருத்துவர் சுதாகர் மற்றும் சிறுநீரக தலைமை மருத்துவர் குமார் ஆகியோரின் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு செயல்படுத்தியுள்ளனர். இது குறித்து மருத்துவர் சுதாகர் கூறியது: “நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடிய 36 வயது பெண்ணுக்கும், 46 வயது ஆணுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கையையும், உயிர் சக்தியையும் அளித்துள்ளது. மூன்றாவது மாற்று அறுவை சிகிச்சை கணவர், தனது மனைவிக்கு சிறுநீரகத்தை…

Read More

மதுரை: “திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தினோம். அதேபோல்தான் திருச்செந்தூரில் நடத்த முடிவெடுத்துள்ளோம்” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 18) ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியது: “முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் 14 ஆண்டுக்குப் பின்னர் ஜூலை 14-ம் தேதி காலை 6 மணியிலிருந்து 7.15 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. அதற்கான திருப்பணிகளை ஆய்வு செய்தோம். இரண்டரை கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. திமுக ஆட்சி ஏற்பட்டபிறகுதான் 3117 கேயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பெருந்திட்ட வரைவும் ஏற்படுத்தப்பட்டது.…

Read More

சென்னை: ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் விஷ்ணுபுரம் சரவணன் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்” சிறுகதைத்…

Read More

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. மேலும், பட வெளியீட்டுக்கு முன்பு சித்தார்த் அளித்த பேட்டியும் இணையத்தில் கிண்டலுக்கு ஆளானது. அச்சமயத்தில் ‘இந்தியன் 2’ குறித்து சித்தார்த் பேசிய வார்த்தைகளே முழுமையாக மீம்ஸ் ஆனது. தற்போது சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் ‘3 BHK’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார். இதில் ‘3BHK’ படத்தின் ஸ்பெஷல் என்ன என்பது குறித்த கேள்விக்கு, “மக்கள் ஏன் ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இது எனக்கு பிடிக்கும் என்றீர்களே… எனக்கு பிடிக்கவில்லையே என்று அப்புறம் வந்து சண்டைப் போடக் கூடாது. இது எனக்கு பிடிக்காது என்றீர்களே… அதுதான் என் குழந்தைக்கு பிடித்த படம் என்கிறார்கள். நீங்கள் ஏன் ஒரு படத்தைப் பார்க்க…

Read More

சென்னை: கொள்முதல் விலை உள்ளிட்ட ‘மா’ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வரும் ஜூன் 20-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ‘மா’ விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 லாரி வரை, அதாவது 1500 மெட்ரிக் டன் முதல் 2000 மெட்ரிக் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள கூழ் தொழிற்சாலைகள் தென்மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. ‘மா’உற்பத்தி ரகங்களான காதர் (அல்போன்சா), செந்தூரம், கல்லாமை (ஜோத்தாபுரி),…

Read More

எனவே, ஒரே நேரத்தில் எத்தனை புஷ்-அப்களை நீங்கள் செய்ய முடியும்? பத்து? இருபது? நாற்பது? மேலும்?நீங்கள் நினைப்பதை விட உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எண் அதிகம் சொல்லக்கூடும் என்று அது மாறிவிடும்.ஸ்மார்ட்வாட்ச்கள், உடற்பயிற்சி பயன்பாடுகள் மற்றும் முடிவற்ற சுகாதார கண்காணிப்பாளர்களின் வயதில், பழைய பள்ளி புஷ்-அப் போன்ற எளிமையான ஒன்று உங்கள் இதயத்தின் நல்வாழ்வின் குறைந்த தொழில்நுட்ப முன்கணிப்பாளராக செயல்படக்கூடும் என்று நினைப்பது கிட்டத்தட்ட வேடிக்கையானது. ஆனால் விஞ்ஞானம் முடியும் என்று கூறுகிறது – மற்றும் முடிவுகள் ஒருவித காட்டு.ஜமா நெட்வொர்க் ஓபனில் வெளியிடப்பட்ட 2019 ஆய்வுக்கு முன்னாடி வைப்போம், இது உடற்பயிற்சி மற்றும் மருத்துவ உலகில் சில தீவிர அலைகளை உருவாக்கியது. ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 10 ஆண்டுகளாக 1,100 ஆண் தீயணைப்பு வீரர்களைப் பின்பற்றினர், புஷ்-அப்களைச் செய்யும் ஒரு நபரின் திறனை இதய நோய் அபாயத்துடன் எந்த தொடர்பும் உள்ளதா என்பதைப் பார்க்க. மற்றும் ஆச்சரியம் -…

Read More

சிவகங்கை: கண்டதேவி தேரோட்டம் ஜூலை 8-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போல் அனுமதிச் சீட்டு (பாஸ்) இருந்தால் மட்டுமே தேர் வடம் பிடிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துககு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். தேர் வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் கடந்த 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம், தேர் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில்…

Read More