சென்னை: தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுக்கிறது என்று, சென்னையில் நடைபெற்ற மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டினார். சென்னை, ராணி மேரி கல்லூரியின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற 100 மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார். மொத்தம் 1,424 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கல்விக்கு முக்கியத்துவம்: அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி…
Author: admin
ஒரு தீம் பூங்காவில் நாள் செலவழிப்பது உங்கள் கால்கள் அரிப்பு தொடங்கி, சிவப்பு நிறமாக மாறும் வரை வேடிக்கையாகத் தெரிகிறது. நீங்கள் கையாள்வது டிஸ்னி ராஷ் என்று அழைக்கப்படுகிறது. பெயரைப் பொருட்படுத்தாமல், இதற்கு மிக்கி மவுஸுடன் எந்த தொடர்பும் இல்லை. இது உண்மையில் வெப்பம், நடைபயிற்சி மற்றும் சூரிய வெளிப்பாடு ஆகியவற்றால் தூண்டப்பட்ட தோல் எதிர்வினை, மேலும் இது பெரும்பாலும் கீழ் கால்களில் தோன்றும். மருத்துவ சொல் உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட வாஸ்குலிடிஸ் ஆகும், அது கவலைக்குரியதாகத் தோன்றினாலும், இது பொதுவாக பாதிப்பில்லாதது.டிஸ்னி சொறி என்றால் என்ன’டிஸ்னி ராஷ்’ என்பது சிறிய இரத்த நாளங்களின் வீக்கத்தால் ஏற்படும் தோல் எதிர்வினை ஆகும், இது மருத்துவ ரீதியாக உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட வாஸ்குலிடிஸ் (EIV) என அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக நீண்ட கால நடைபயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு, குறிப்பாக சூடான அல்லது ஈரப்பதமான வானிலையில் குறைந்த கால்களில் காண்பிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட…
அறிவியலால் வழிநடத்தப்படும் உங்கள் ஸ்மார்ட்போன் போதைப்பொருளை எவ்வாறு விட்டுவிடுவது (படம்: ஆபி) நாங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் தொலைபேசிகளில் 4 மணிநேரம் 37 நிமிடங்கள் செலவிடுகிறோம், சராசரியாக 58 முறை சரிபார்க்கிறோம். இது சமூகமயமாக்குவது, வேலைக்காக அல்லது செய்திகளைப் படிக்க வேண்டும் என்று நாமே சொல்ல விரும்புகிறோம். ஆனால் நம்மில் பெரும்பாலோர் அடிமையாகிறார்கள், அது எங்களுக்குத் தெரியும்.நீங்கள் இங்கே ஸ்மார்ட்போன் அடிமையாதல் அளவில் இருக்கிறீர்களா என்பதை சோதிக்கலாம். ஸ்மார்ட்போன் போதை எவ்வளவு பரவலாக உள்ளது? பரிசோதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், மற்றும் எல்லா வயதினரிடமும் மக்கள் ஸ்மார்ட்போன்களுக்கு பெருகிய முறையில் அடிமையாகி வருவதை ஆய்வுக்குப் பிறகு ஆய்வு உறுதிப்படுத்துகிறது.உதாரணமாக, அமெரிக்காவில், சமீபத்திய கணக்கெடுப்பில் கேட்டவர்களில் கிட்டத்தட்ட 57% பேர் தங்கள் தொலைபேசிகளுக்கு அடிமையாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். “சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு பலரின் வாழ்க்கையில் எதிர்மறையாக தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன. சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த கோயிலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தர்மஸ்தலா கோயிலில் துப்புரவு பணியாற்றிய 52 வயதான ஒருவர், போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தர்மஸ்தலா போலீஸார் கோயில் நிர்வாகத்தின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து 65 வயதான பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘‘கடந்த 2003ம் ஆண்டு தர்மஸ்தலா கோயிலுக்கு சென்ற தனது 22 வயது மகள் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த போது, என்னை தாக்கி சித்ரவதை செய்தனர். என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, வழக்கறிஞர் வேலன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த விவகாரத்தை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும்…
புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நகரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் 206 வீரர்கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுவார்கள். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ம் ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரரே, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதி பெறுவார். கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளர், தற்போது உலக சாம்பியனாக உள்ள இந்தியாவின் டி.குகேஷுடன் பலப்பரீட்சை நடத்துவார். செஸ் உலகக் கோப்பை தொடரை 23 வருடங்களுக்கு பிறகு இந்தியா நடத்த உள்ளது. கடைசியாக 2002-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றிருந்தார். இந்தத்…
தமிழில், மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யணும் குமாரு, வேலாயுதம், வாலு உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ஹன்சிகா மோத்வானி. அவர் நடித்துள்ள காந்தாரி விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அதே கட்டிடத்தில் வேறொரு வீட்டில் தனியாக வசித்தனர். இருந்தும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஹன்சிகாவும் அவர் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அதை மறுத்துள்ள சோஹைல் கட்டாரியா,‘அந்தச் செய்தியில் உண்மையில்லை’ என்று தெரிவித்துள்ளார். சோஹைல் கட்டாரியாவின் முன்னாள் மனைவி ரிங்கி பஜாஜ், ஹன்சிகாவின் தோழி…
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உடன் வருகை தந்து சிவாஜி கணேசனின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினார். சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில்…
தோல் பராமரிப்பு உலகில் தைரியமான வாக்குறுதிகள் நிறைந்துள்ளன, மேலும் கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் விதிவிலக்கல்ல. சில மருத்துவ ஆய்வுகள் தோல் நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்திற்கான நன்மைகளைக் காட்டினாலும், இந்த ஆய்வுகள் பல சிறியவை, குறுகிய கால அல்லது தயாரிப்புகளை விற்கும் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகின்றன. எல்லா கொலாஜன் சப்ளிமெண்டுகளும் பயனற்றவை என்று அர்த்தமல்ல, ஆனால் நீங்கள் உரிமைகோரல்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்று அர்த்தம். பணத்தை செலவழிப்பதற்கு முன், தயாரிப்பு அதன் பின்னால் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுகள் உள்ளதா என சரிபார்க்கவும். உண்மையான அறிவியல் எச்சரிக்கையானது, வைரஸ் மற்றும் மிகச்சிறிய பிரகாசமானது அல்ல.மறுப்பு:இந்த கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொது அறிவு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. கொலாஜன் உட்பட எந்தவொரு புதிய சப்ளிமெண்டையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரை அணுகவும். வயது, சுகாதார நிலைமைகள் மற்றும் தயாரிப்பு…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவரும் கேரள அரசியலில் முக்கிய இடத்தை வகித்தவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், கடந்த 2019-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து விலகினார். கடந்த 2021 ஜனவரியில் நிர்வாக சீர்திருத்த குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார். திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன், மகள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கிசிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பொதுமக் களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்…
மான்செஸ்டர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி நாளை (23-ம் தேதி) மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி நேற்று முன்தினம் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த போது காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர், எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடது முழங்கால் காயம் காரணமாக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில்இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகிஉள்ளார். அவர், உடனடியாகதாயகம் திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
