சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரையை பரிசீலிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், 1994-ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கபட்டது. ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கபட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த 2021-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு பதிலாக நிரந்தர அங்கீகாரம் வழங்கும் அரசாணையை, எந்தக் காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்பப் பெற்று கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு, 2024-ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அங்கீகாரம்…
Author: admin
பெண்கள் 40 களின் பிற்பகுதியிலும் 50 களின் முற்பகுதியிலும் நுழைவதால், மாதவிடாய் நிறுத்தம் மாதவிடாய் சுழற்சிகளின் முடிவை விட அதிகமாக கொண்டுவருகிறது. இது இருதய ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும் உடலியல் மாற்றங்களின் அடுக்கைத் தூண்டுகிறது. அதிகரித்த தொப்பி கொழுப்பு மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் முதல் வீக்கம், வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் வாஸ்குலர் விறைப்பு ஆகியவற்றின் அதிக அபாயங்கள் வரை, இந்த வாழ்க்கையின் இந்த கட்டம் இதய ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துகிறது.பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஒரு புதிய ஆய்வில், தி நியூயார்க் போஸ்ட் மேற்கோள் காட்டி, இருதய அபாயத்தைக் குறைக்க உதவும் மிகவும் பயனுள்ள பழக்கவழக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏறக்குறைய 3,000 பெண்களிடமிருந்து தரவை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், தூக்கம், இரத்த அழுத்தம், இரத்த குளுக்கோஸ் மற்றும் புகைபிடித்தல் ஆகிய நான்கு குறிப்பிட்ட நடத்தைகள் இதய நோய் விளைவுகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.4 பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு…
சென்னை: காலியிடம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி, உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், லயோலா கல்லூரியில் 18 உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க தமிழக கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை லயோலா கல்லூரியில் 18 உதவிப் பேராசிரியர்கள், ஒரு நூலகர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 19 பேர் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி உத்தரவிடக் கோரி, கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, லயோலா கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன் லால், கல்லூரியில் 149 ஆசிரியர் பணியிடங்களுக்கும், 59 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணியிடங்களை நிரப்ப கல்லூரிக்கு முழு உரிமை…
தூத்துக்குடி: சர்வதேச தரத்தில் ரூ.381 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ம் தேதி திறந்து வைக்கிறார். தென்தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து வசதி அமைகிறது. விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்கு வரத்து, சாலை போக்குவரத்து என அனைத்து விதமான போக்குவரத்து வசதியையும் தூத்துக்குடி பெற்றுள்ளது. தூத்துக்குடியை அடுத்த வாகை குளத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 1992-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளம் சிறிய வகை விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. ஆனால், இந்த சேவை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது.…
வைட்டமின் டி “சன்ஷைன் வைட்டமின்” என்று அழைக்கப்படுகிறது, மேலும் மனித ஆரோக்கியத்திற்கு இரண்டு அத்தியாவசிய நோக்கங்களுக்கு உதவுகிறது: எலும்பு வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு ஆதரவு. இருப்பினும், இந்தியா போன்ற ஒரு வெப்பமண்டல நாட்டில் கூட, வைட்டமின் டி குறைபாடு மிகவும் பொதுவானது, ஏனெனில் மோசமான உணவு, மட்டுப்படுத்தப்பட்ட சூரிய வெளிப்பாடு மற்றும் வீட்டுக்குள்ளேயே மீதமுள்ள காரணிகள். குறைபாட்டிற்கு மாத்திரைகள் இருக்கும்போது, மருத்துவர்கள் சில நேரங்களில் மிகக் குறைந்த அளவிலான நோயாளிகளுக்கு வைட்டமின் டி ஊசி மருந்துகளை நிர்வகிக்கிறார்கள், ஏனெனில் இவை இரத்த ஓட்டத்தில் நேரடியாக நுழைகின்றன. இருப்பினும், இந்த ஊசி மருந்துகள் தடுக்கப்பட்ட தமனிகள் உட்பட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்போம் ..வைட்டமின் டி ஷாட்கள் என்றால் என்னவலுவான வைட்டமின் டி சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வைட்டமின் டி 3 ஷாட்களை நிர்வகிக்கின்றனர், ஏனெனில் அவற்றின் அளவு விமர்சன ரீதியாக குறைவாக உள்ளது,…
புதுச்சேரி: வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமாகிறது. சுற்றுலா நகரான புதுச்சேரியில் முக்கிய கோயில்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். கடற்கரை அருகே நகரப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்வர். புதுச்சேரியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் என பலரும் ஒவ்வொரு நாளும் இந்தத் திருக்கோயிலுக்கு வருவது வழக்கம். இந்தக் கோயில் முழுக்க முழுக்க ஏசி மயமாகப்படவுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தில் பக்தர்களின் நலன் கருதியும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் ரூ.33 லட்சம் செலவில், தேவஸ்தானம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள், உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த நன்கொடை தொகை போக மீதமுள்ள தொகை, தேவஸ்தான நிதியிலிருந்து ஏசி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தேவஸ்தானம் முழுவதும்…
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏராளமான இளைஞர்களை ஈர்த்து, வளர்த்தவர்” என்று கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட இரங்கள் செய்தி: “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) இன்று (ஜூலை 21) திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி, ஆழ்ந்த வேதனையளிக்கிறது. தற்போதுள்ள கேரள மாநிலத்தின் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னபுராவில் 1923 அக்டோபர் 18ம் தேதி பிறந்த வி.எஸ்.அச்சுதானந்தன், சிறு வயதில் தேச விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். அவரது 18-வது வயதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அமைப்பு பூர்வமாக செயல்படத் தொடங்கியவர். கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவு கட்சியை வழிநடத்துவதிலும், காலனி ஆட்சி காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட, கொடிய அடக்குமுறையை எதிர்கொண்டவர். சிறை வாழ்க்கை சித்ரவதைகளை…
முதல் பார்வையில், இந்த கலைப்படைப்பு வடிவங்களின் சீரற்ற சுழற்சி போல் தெரிகிறது. ஆனால் உண்மையில் கவனமாக மறைக்கப்பட்ட குதிரை கண்டுபிடிக்க காத்திருக்கிறது. இந்த புதிய மூளை-டீஸர் உங்கள் கண்காணிப்பு திறன்களை சவால் செய்கிறது.சவாலுக்கு தயாரா? ஒரு டைமரை 15 விநாடிகள் அமைக்கவும். உங்கள் கண்கள் சுதந்திரமாக சுற்றட்டும் !! டெல்டேல் குதிரை அம்சங்களுக்காக கூர்மையாக ஸ்கேன்: ஒரு மேன், கால்கள் அல்லது காதுகள். இந்த மாயைகள் வேகம் மட்டும் அல்ல; பின்னணியில் கலக்கும் நுட்பமான வடிவங்களைக் கண்டறியும் உங்கள் திறனை அவை சோதிக்கின்றன.அதைப் பார்க்க போராடுகிறீர்களா? இங்கே ஒரு குறிப்பு: படத்தின் கீழ் பாதியில் கவனம் செலுத்துங்கள், அங்கு இருண்ட வடிவங்கள் ஒரு அவுட்லைன் உருவாக்குகின்றன. நிழல்களில் ஒரு சாய்வான பின்புறம் அல்லது ஒரு குளம்பு வடிவத்தை நீங்கள் கவனிக்கலாம். உங்கள் கண்ணை முட்டாளாக்க வடிவமைக்கப்பட்ட காட்சி தடயங்கள் இவை.இப்போது அதைக் கண்டுபிடித்தீர்களா !!வேகமாக !!!கடிகாரம் துடிக்கிறது !!நேரம் மேலே!இப்போது செல்ல…
கொல்கத்தா: வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற தியாகிகள் தின பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது. அக்கட்சி, மேற்கு வங்கத்தின் அடையாளம், மொழி, கலாச்சாரம், பெருமை ஆகியவற்றை அழிக்கத் துடிக்கிறது. வங்க மொழிக்கு எதிரான மொழி பயங்கரவாதத்தை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இங்கு தொடங்கப்படும் எதிர்ப்பு இயக்கம் டெல்லி வரை செல்லும். வங்காளிகள், வங்க மொழி ஆகியவற்றின் மீதான தாக்குதலுக்கு எதிரான இயக்கம் ஜூலை 27 தொடங்கப்படுகிறது. இது ஒரு வெகுஜன எதிர்ப்பு பிரச்சாரமாக மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் மேற்கு வங்கம் முழுவதும் பேரணிகள் நடத்தப்படும். வரக்கூடிய 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் நாம் கடந்த முறை பெற்றதைவிட அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதன்…
சென்னை: உலக அளவில் காவல் துறையினருக்கான விளையாட்டு போட்டியில் 50 பதக்கங்கள் பெற்று தமிழக காவல்துறை அணி பெருமை சேர்த்துள்ளது. அந்த அணியினரை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார். உலக அளவில் காவல் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் (2025), அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இந்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக தமிழக காவல் துறையிலிருந்து காவலர்கள் தினேஷ், அர்ஜூன் மற்றும் ஹரிகிருஷ்ணன், பெண் காவலர்கள் இளவரசி மற்றும் சரண்யா பங்கேற்று முறையே 3- தங்கம், 4 வெள்ளி மற்றும் 4-வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் எஸ்பி மயில்வாகனன் உடன் 6-ஆய்வாளர்கள், 1-சார்பு ஆய்வாளர், 1-சிறப்பு சார்பு ஆய்வாளர், 4-தலைமை காவலர் மற்றும் 3-பெண் தலைமை காவலர் ஆகியோர்…
