சென்னை: “திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜகவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்” என்ற வகையில் ஓடிபி பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுவது வேடிக்கை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 1-ம் தேதி தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த நாள் முதல் மத்திய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுகவின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழக மக்கள், முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணி வகுத்து நிற்கத்தொடங்கினர். அதோடு எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கோடு திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என்ற…
Author: admin
“ஆரோக்கியமான” என்று பெயரிடப்பட்ட அனைத்தும் உங்களுக்கு உண்மையிலேயே நல்லது அல்ல. இன்றைய ஸ்லிக் மார்க்கெட்டிங் மற்றும் புஸ்வேர்டுகளின் உலகில், சத்தானதாகத் தோன்றும் ஆனால் உங்கள் உடல்நல இலக்குகளை ரகசியமாக நாசப்படுத்தும் உணவுகளுக்கு விழுவது எளிது. சர்க்கரை ஏற்றப்பட்ட கிரானோலா முதல் ஸ்னீக்கி மிருதுவாக்கிகள் வரை, இந்த சூப்பர்ஃபுட்ஸ் என்று அழைக்கப்படுவது டோனட்டை விட வேகமாக உங்கள் உணவைத் தடம் புரளக்கூடும். நீங்கள் எடை இழப்பு, சிறந்த செரிமானம் அல்லது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், நீங்கள் உண்மையில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம். வியக்கத்தக்க ஆரோக்கியமற்ற ஆரோக்கியமான உணவுகளின் இந்த பட்டியல், வஞ்சகர்களைக் கண்டறியவும், சிறந்த தேர்வுகளைச் செய்யவும், உணவு தொழில் தந்திரங்களுக்கு ஒரு முறை மற்றும் அனைவருக்கும் விழுவதை நிறுத்தவும் உதவும்.9 ஆரோக்கியமற்ற உணவுகள் ஆரோக்கியமாக மாறுவேடமிட்டுகிரானோலாகிரானோலா பெரும்பாலும் தேன், சிரப், உலர்ந்த பழங்கள் மற்றும் எண்ணெய்களால் நிரம்பியுள்ளது, இது ஒரு சுகாதார உணவை விட இனிப்பாக…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, மாநிலங்களவையை நடத்தும் பொறுப்பை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்றுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருப்பவரே மாநிலங்களவையின் தலைவராக (சேர்மன்) இருந்து அவையை நடத்துவது மரபு. அவர் அவையில் இல்லாத தருணங்களில் அவையை துணைத் தலைவர் நடத்துவார். தற்போது மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் உள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹரிவன்ஷ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மூலம் 2014ம் ஆண்டு முதன்முறையாக பிஹாரில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வானார். இதையடுத்து, 2018-ம் ஆண்டு ஹரிவன்ஷ் மாநிலங்களவைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவியை பெற்ற காங்கிரஸ் அல்லாத 3-வது தலைவராக ஹரிவன்ஷ் பெயர் பெற்றார். பின்னர், 2020-ம் ஆண்டு மாநிலங்களவையின் துணைத் தலைவராக இரண்டாவது முறை ஹரிவன்ஷ் பொறுப்பேற்றார். இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர்…
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி நிறைபுத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதற்காக புதிய நெற்கதிர்கள் ஆபரணப்பெட்டியில் வைத்து தலைச்சுமையாக சபரிமலைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வழிபாட்டுக்காக தற்போது ஆன்லைன் தரிசனம் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 5 நாள் தொடர் வழிபாட்டுக்குப் பிறகு நேற்று (ஜூலை 21) இரவு நடைசாத்தப்பட்டது. இந்நிலையில் நிறைபுத்திரி தரிசனத்துக்காக வரும் 29-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டு 30-ம் தேதி ஒருநாள் வழிபாடு நடைபெற உள்ளது. இந்நாளில் புதிய நெற்கதிர்கள் ஐயப்பன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்பு அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை பருவத்தில் இந்த பூஜை நடைபெறும். விவசாயம் செழிக்கவும், நாட்டின் வளம் பெருகவும் இந்த வழிபாடு மேற்கொள்ப்படுகிறது. இதற்காக…
நாமக்கல்: நாமக்கல் – பள்ளிபாளையம் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குநர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று திருச்செங்கோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து இரு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி புரோக்கர்கள் கிட்னி விற்பனை சம்பவத்தில் ஈடுபடுவது தொடர்பாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் கிட்னி விற்றவர்கள் யார் யார்? வாங்கியவர்கள் யார்? முறையான ஆவணங்கள் கொடுத்து கிட்னி தானம் பெறப்பட்டதா என்பது குறித்துசிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்தார். இதன்படி படிதமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் இயக்குநர் டாக்டர் வினித் மற்றும் மெடிக்கல் ஆக்ட் துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன் மெடிக்கல் ஆக்ட் டிஎஸ்பி சீதாராமன் ஆகியோர்…
தூக்கம் உங்கள் விரல்களால் நழுவினால், நீங்கள் தனியாக இல்லை. உலகளவில் சுமார் 16% பெரியவர்கள் நாள்பட்ட தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர், இது தொடர்ச்சியான பிரச்சனையால் குறிக்கப்பட்டுள்ளது அல்லது தூங்குவதில் உள்ளது. ஆனால் நீங்கள் நினைப்பதை விட நிவாரணம் எளிமையாக இருக்கலாம். மாத்திரைகள் அல்லது விலையுயர்ந்த சிகிச்சைகள் தேவையில்லாமல், தூக்க தரத்தை கணிசமாக மேம்படுத்தும் நான்கு பயிற்சிகளை ஒரு புதிய ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. மிகவும் பயனுள்ளவற்றில்: யோகா மற்றும் தை சி, உடல் இயக்கத்தை மன தளர்வுடன் இணைக்கும் மென்மையான உடற்பயிற்சிகளும். இந்த நேர சோதிக்கப்பட்ட நடைமுறைகள், நடைபயிற்சி மற்றும் ஜாகிங் உடன், சிறந்த தூக்கத்திற்கு இயற்கையான மற்றும் அணுகக்கூடிய பாதையையும் ஆரோக்கியமான, அதிக கவனம் செலுத்தும் மனதையும் வழங்குகின்றன.உங்களுக்கு நன்றாக தூங்கவும் தூக்கமின்மையை எதிர்த்துப் போராடவும் உதவும் பயிற்சிகள்யோகா: ஆழ்ந்த ஓய்வுக்கான கவனமுள்ள இயக்கம்யோகா ஆய்வில் மிகவும் பயனுள்ள தூக்க உதவியாக வெளிப்பட்டது, பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு இரவும் கிட்டத்தட்ட இரண்டு கூடுதல்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் மக்களவையில் 16 மணி நேரம், மாநிலங்களவையில் 9 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று அலுவல் ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை கூடியதும் காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது.
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சீமான் தாக்கல் செய்த மனுவில், “வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனைத் தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். அதனால் புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். புது பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், “அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிய பாஸ்போர்ட் வழங்க…
லிப் ஃபில்லர்கள் அறுவைசிகிச்சை அல்லாத ஒப்பனை நடைமுறைகளில் ஒன்றாக மாறியுள்ளன, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நுட்பமான மற்றும் பயனுள்ள முக மேம்பாடுகளைத் தேடும் தொழில் வல்லுநர்கள் மத்தியில். சமூக ஊடகங்கள் அழகியல் போக்குகள் மற்றும் நவீன ஊசி மருந்துகள் விரைவான, மீளக்கூடிய முடிவுகளை வழங்குவதால், ஹைலூரோனிக் அமிலம் சார்ந்த கலப்படங்களைப் பயன்படுத்தி உதடு பெருக்குதல் பிரதான அழகு கலாச்சாரத்தில் நுழைந்துள்ளது. ஆனால் லிப் ஃபில்லர்கள் சரியாக என்ன? அவை பாதுகாப்பானவையா, அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? இந்த விரிவான வழிகாட்டி விஞ்ஞானம், செயல்முறை, நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் லிப் நிரப்பிகளைப் பெறுவதற்கான நீண்டகால பரிசீலனைகளை உடைக்கிறது.லிப் ஃபில்லர்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றனலிப் ஃபில்லர்கள் ஊசி போடக்கூடிய தோல் கலப்படங்களாகும், பொதுவாக செயற்கை ஹைலூரோனிக் அமிலம் (எச்ஏ) கொண்டவை – இது இயற்கையாகவே உடலில் காணப்படுகிறது, இது ஈரப்பதத்தையும் அளவையும் பராமரிக்க உதவுகிறது.…
புதுடெல்லி: மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஆயுஷ்மான் வயா வந்தனா திட்டத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (வருமானத்தை கணக்கில் கொள்ளாமல்) ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனிடையே, சிறையில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்கவில்லை என பிரியங்க் கனூங்கோ தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணைய அமர்வில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தேசிய மனித உரிமை ஆணையம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சிறைத் துறை இயக்குநர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆயுஷ்மான் வயா வந்தனா மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பலன் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கைதிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயுஷ்மான் இணையதளத்தில் அவர்களுடைய…
