லண்டன்: இரண்டு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை புதன்கிழமை அன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் சென்றடைந்தார். அங்கு வசித்து வரும் இந்திய மக்கள், வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும், அந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் முதலாவதாக பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸையும் சந்திக்கிறார். பின்னர் லண்டன் நகருக்கு அருகே அமைந்துள்ள பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், இரு நாடுகளிடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இங்கிலாந்து பயணம் முடிந்ததும், வரும் 25, 26-ம் தேதிகளில்…
Author: admin
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது அரசு வாகனத்தை அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல்துறை தரப்பில் கேட்டதாகவும், உரிய ஆணை இல்லாமல் வழங்க முடியாது என்று கூறியதால், வெளியூர் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவிட்டு, வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும், அலுவலகத்துக்கு நடந்தே சென்றதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அவர் வீட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகத்துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கிடையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டிஎஸ்பி, தான் நேர்மையாகப் பணியாற்றுவதால் தொடர்ந்து உயரதிகாரிகள் நெருக்கடி தருவதாகவும், வளைந்து கொடுத்து போகுமாறு எஸ்.பி. கூறியதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இவரின் புகார்களுக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின்…
இந்த சிறிய, ஆனால் சக்திவாய்ந்த பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை அந்தோசயினின்கள் என அழைக்கப்படுகின்றன, அவை அவற்றின் துடிப்பான சாயல்களை உருவாக்குகின்றன. பெர்ரிகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்துடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க செயல்படுகின்றன, இது இதய நோய்க்கு வலுவாக பங்களிக்கிறது.பெர்ரிகளின் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தம் குறைந்து, அழற்சி குறிகாட்டிகளைக் குறைப்பதோடு, குறைக்கப்பட்ட கோலஸ்ட்ரோலுக்கு வழிவகுக்கிறது. பெர்ரி சாறுகளுக்கு பதிலாக முழு பெர்ரிகளையும் உட்கொள்ளும் நபர்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நிகழ்தகவுகளைக் காட்டுகிறார்கள் என்பதை மருத்துவ சான்றுகள் நிரூபிக்கின்றன. இந்த பழங்களை நீங்கள் சொந்தமாக அனுபவிக்கலாம், அல்லது அவற்றை மிருதுவாக்கல்களாக கலக்கலாம் அல்லது ஓட்மீலில் மேல் பயன்படுத்தலாம்.
காஜியாபாத்: போலியாக வேலைவாய்ப்பு நிறுவனம், போலீஸ் நிலையம், நீதிமன்றம் அமைத்து மோசடி செய்த செய்திகள்தான் இதுவரை வந்துள்ளன. ஆனால், போலி வெளிநாட்டு தூதரகத்தை உருவாக்கி ஒருவர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் ஜெயின். இவர் காஜியாபாத் பகுதியில் 2 மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையை வாடகைக்கு எடுத்து அதில் வெஸ்ட்டார்க்டிகா நாட்டு தூதரகம் என்ற பெயரில் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், அவரது தூதரக வளாகத்தில் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் கார்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளை பொருத்தி நகரில் வலம் வந்துள்ளார். மேலும், அவரது அலுவலகத்தில் போலியான தூதரக பாஸ்போர்டுகள், பல்வேறு நாடுகளின் கரன்சிகள், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் மார்ப்பிங் செய்யப்பட்ட ஹர்ஷ்வர்த்தனின் புகைப்படங்கள் இருந்துள்ளன. அங்கிருந்தபடி வெளிநாட்டு வேலைக்கு ஆள்களை ஹர்ஷ்வர்த்தன் அனுப்பிக் கொண்டு இருந்தார். இது தவிர ஹவாலா மூலம் பண…
திண்டுக்கல் மாநகர், ஒன்றியப் பகுதிகளில் திமுக உட்கட்சி கட்டமைப்பை விரிவாக்கம் செய்து புதிய நிர்வாகிகளை நியமித்தது போல் அதிமுகவும் தங்கள் கட்சி உட்கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக, அதிமுக கட்சிகள் 12 வார்டுகளுக்கு ஒரு வார்டு செயலாளர் என தலா 4 வார்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் திமுக தனது கட்சி உட்கட்டமைப்பை மாற்றியமைத்து கூடுதலாக இரண்டு பகுதி செயலாளர்களை நியமனம் செய்தது. இதையடுத்து 8 வார்டுகளுக்கு ஒரு பகுதி செயலாளர்கள் என ஏற்கெனவே இருந்த 4 பகுதி செயலாளர்களுடன் புதிதாக 2 பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இதேபோல, திண்டுக்கல் ஒன்றியத்தில் திமுகவில் 2 ஒன்றியச் செயலாளர்கள் இருந்த நிலையில், ஊராட்சிகளை மூன்றாக பிரித்து புதிதாக ஒரு ஒன்றியச் செயலாளரை நியமித்து மூன்று ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி, ஒன்றியத்தில் திமுக தனது கட்சி உட்கட்டமைப்பை மாற்றி அமைத்ததையடுத்து, இதை பின்பற்றி…
மருத்துவ வல்லுநர்கள் சொல்வது இங்கே:ஆமாம், ஆரம்பகால அல்சைமர் உண்மையானது, ஆனால் 30 வயதிற்குட்பட்டவர்களில் மிகவும் அரிதானது. அல்சைமர் சங்கத்தின் கூற்றுப்படி, அனைத்து அல்சைமர் வழக்குகளிலும் 5% க்கும் குறைவானது ஆரம்பத்தில் தொடங்குகிறது (65 வயதிற்கு முன்னர் நிகழ்கிறது), மற்றும் 20 களில் வழக்குகள் எப்போதும் மரபணு மாற்றங்களுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளன, பெரும்பாலும் குடும்ப மாற்றங்கள் (போடிகள்).பொதுவானதல்ல என்றாலும், இதுபோன்ற வழக்குகள் மருத்துவ இலக்கியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, PSEN1, PSEN2, அல்லது APP மரபணுக்களில் உள்ள பிறழ்வுகள் அல்சைமர் இளமைப் பருவத்திலேயே தூண்டக்கூடும், இருப்பினும் இது அரிதானது.அறிவாற்றல் சிக்கல்களைக் காட்டும் 20 வயதில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தம், அதிர்ச்சி, வைட்டமின் குறைபாடுகள் (குறிப்பாக பி 12), தைராய்டு ஏற்றத்தாழ்வுகள் அல்லது மனச்சோர்வு அல்லது ஏ.டி.எச்.டி போன்ற மனநல நிலைமைகளை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளது, அல்சைமர் அல்ல. ஆனால் விழிப்புணர்வு முக்கியமானது, ஏனென்றால் அரிதானது சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல.[This article is for…
புதுடெல்லி: ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 85-வது இடத்தைப் பெற்றிருந்த இந்தியா, தற்போது 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இனி உலகளவில் 50 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அல்லது விசா-ஆன்-அரைவல் வசதியைப் பெற முடியும். இதில் மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து போன்ற ஆசியாவின் பிரபலமான சுற்றுலா நாடுகளும் அடங்கும். இதேபோல் இலங்கை, மக்காவ், மியான்மர் போன்ற பிற நாடுகளுக்கு சென்று அங்கு விசாவை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். மரியாதைக்குரிய அளவுகோலாகக் கருதப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு, முன்கூட்டியே விசாவுக்கு விண்ணப்பிக்காமல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எத்தனை நாடுகளுக்குள் நுழைய முடியும் என்பதன் அடிப்படையில் பாஸ்போர்ட்களை தரவரிசைப்படுத்துவது குறிப்பிட்டத்தக்கது. இந்த வரிசையில் சிங்கப்பூர் நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்த நாட்டு குடிமக்கள்…
பெய்ஜிங்: கடந்த 2020-ல் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும். இதுகுறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கான சுற்றுலா விசா பெறுவதற்கு சீன குடிமக்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். பிறகு குறிப்பிட்ட தேதியில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்” என்று கூறியுள்ளது. கரோனோ வைரஸ் பரவலை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையிலான மோதலால் எல்லையில் பதற்றம் நிலவியது. 1962-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு…
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (23.7.2025) காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, முதல்வர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய முப்படைகளும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. போர் மூளும் சூழ்நிலை உருவானாலும் இந்த தாக்குதல் மே 7-ம் தேதி தொடங்கி 10-ம் தேதிக்குள் முடிந்துவிட்டது. அப்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தாக்குதலை நிறுத்தியது இந்தியா. ஆனால், “என்னுடைய பேச்சுவார்த்தையால்தான் இந்தியா – பாகிஸ்தான் போர் நின்றது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென அறிவித்தார். இந்த கருத்தை பல முறை அவர் கூறினார். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இந்த தொடரில்…
