விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில், நாற்காலியில் ஓட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராமதாஸ் தெரிவித் திருந்தார். கட்சித் தலைவர்கள் மற்றும் பாமக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டு கேட்புக் கருவி கடந்த 9-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கிளியனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் சைபர் க்ரைம் போலீஸில் கடந்த 15-ம் தேதி பாமக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கிளியனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலையரசியிடம் ஒட்டுகேட்புக் கருவியை தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் நேற்று ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ஒரு பேட்டரி, ஒரு சிம் கார்டு, ஒரு மென்பொருள் அடங்கிய பலகை மட்டும் ஒப்படைத்துள்ளனர். தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளனர். ஒட்டு கேட்புக் கருவியை முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை” என்றனர்.
Author: admin
உங்கள் பஞ்சுபோன்ற வீடு பூனைக்கு எதிராக நேர்த்தியான, கொடிய கிங் கோப்ராவை கற்பனை செய்து பாருங்கள். குறைந்த பட்ஜெட் விலங்கு கிரகத்தின் சிறப்பில் நீங்கள் காணும் பொருத்தம் போல் தெரிகிறது, இல்லையா? ஆனால் நீங்கள் நினைக்கும் அளவுக்கு இது வெகு தொலைவில் இல்லை. பூனைகள் மற்றும் கோப்ராக்கள் இரண்டும் வேகமானவை, கடுமையானவை, மற்றும் மிகவும் திறமையானவை. எனவே, உங்கள் சராசரி விஸ்கர் நிஞ்ஜா கிரகத்தின் மிகவும் விஷமான பாம்புகளில் ஒன்றைக் கழற்ற முடியுமா?சர்க்கரை கோட் செய்யக்கூடாது – கிங் கோப்ரா திகிலூட்டும். இது உலகின் மிக நீண்ட விஷ பாம்பு, 18 அடி வரை வளரும். இது உண்மையில் எழுந்து நின்று உங்களை கண்ணில் பார்க்க முடியும், அது தேர்வு செய்யப்படும்போது, அது ஒரு திகில் திரைப்படத்திலிருந்து ஏதோவொன்றைப் போல அதன் பேட்டை எரிக்கிறது.ஆனால் இங்கே உண்மையான கொலையாளி பாம்பின் விஷம். ஒரு கிங் கோப்ராவின் கடி யானையை அல்லது சுமார்…
சாங்சோவ்: சீனாவின் சாங்சோவ் நகரில் சீனா ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பானின் டோமோகா மியாசாகியுடன் மோதினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து 21-15, 8-21, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான சிந்து, கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த உன்னதி ஹூடாவுடன் மோதுகிறார். உன்னதி ஹூடா முதல் சுற்றில் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி…
விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் திரையுலகின் பாடகர்களாக வலம் வருகின்றனர். இன்னும் பலர் சுயாதீன இசைக் கலைஞர்களாகவும் உள்ளனர். பிரபல முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 11வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக டெல்டா தமிழ், கொங்கு தமிழ், சென்னை தமிழ் என இந்த முறை பங்கேற்பாளர்கள் மண்டல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனில் இதுவரை பங்கேற்காத புதிய பிரபலம் ஒருவர் நடுவராக பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 21,514 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இரவு 8 மணியளவில் நீர்வரத்து 20,450 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நேற்று மதியம் 12 மணி முதல் விநாடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 18,000 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி திறக்கப்படுகிறது.அணையின் நீர்மட்டம் 119.97 அடியாகவும், நீர் இருப்பு 93.42 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை முழு கொள்ளளவான 120 அடியை மீண்டும் எட்ட வாய்ப்புள்ளது. எனவே, 16 கண் மதகுகள் வழியாக எந்நேரமும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில பெண்கள் அறைக்குள் நுழையும்போது அதை உணரக்கூடிய சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் சத்தமாக இல்லை. அவர்கள் மிகவும் கடினமாக முயற்சிக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்களை எவ்வாறு சுமக்கிறார்கள் என்பதில் இந்த அமைதியான வலிமை இருக்கிறது. அவர்கள் வேலை செய்ததைப் போல. அவர்கள் யார் என்று அவர்களுக்குத் தெரியும்.இந்த பெண்கள் குடியேறவில்லை. அவர்கள் விளையாடுவதில்லை. அவர்கள் தேதியிடும்போது, அவர்கள் அதை சலிப்பு அல்லது தனிமையில் இருந்து செய்ய மாட்டார்கள். அவர்கள் நோக்கத்துடன் தேதி. தங்களை முடிக்க அல்ல, ஆனால் அவர்களின் ஆற்றலுடன் பொருந்தக்கூடிய ஒருவருடன் இணைவது, அதை வடிகட்டவில்லை. இந்த பெண்களைத் தவிர்ப்பது என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், அது மிகச்சிறிய பிரகாசமானதல்ல. இது சரியானதாக இருப்பது அல்லது சில பனிக்கட்டி “பாஸ் பேப்” ஸ்டீரியோடைப்பைப் பற்றியது அல்ல. இது உள் நிலைத்தன்மையைப் பற்றியது. கீழே 10 டேட்டிங் சத்தியங்கள் உயர் மதிப்புள்ள பெண்கள் உண்மைகளால் வாழ்கின்றன, அவை அடித்தளமாகவும்,…
கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் ஜோஷ் இங்லிஷ் அதிரடியில் ஆஸ்தி ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ்டனில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான பிரண்டன் கிங் 36 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். ஆந்த்ரே ரஸ்ஸல் 15 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்களையும், கிளென் மேக்ஸ்வெல், நேதன் எலிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 173 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 15.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர்…
சென்னை: அவதூறுகளை குப்பை தொட்டியில் வீசி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் சமூக வலைதள பதிவு: சிறுபான்மையினராக இருக்கட்டும், பட்டியலினத்தவராக இருக்கட்டும், அவர்களின் உரிமைகளுக்காக எனது கடமை சற்று கூடுதலாகவும் வீரியமாகவும் இருக்கும். இதை அந்த மக்களும் அறிவார்கள். அவர்களில் ஒருவரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹெச்.ஆர்.கான், எனது நாடாளுமன்ற உரையை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். அவதூறுகளை குப்பைத் தொட்டியில் வீசி, எப்போதும் போல் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உற்ற தோழனாக, உறுதுணையாக நிற்பேன். இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனமாகிவிடும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று பேசியதாவது: விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பது அரசின் கடமை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை காக்கும். விவசாயிகள் தொடக்க வேளாண் வங்கிகளில் வாங்கிய கடனை 2 முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சியின்போது விவசாயிகள் எப்போது கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை கொண்டு சென்றாலும், உடனடியாக விற்பனை செய்யும் நிலையும், உரிய நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் பெறும் நிலையும் இருந்தது. தற்போது விவசாயிகள் நெல்லை, உரிய நேரத்தில் விற்க முடிவதில்லை. குறுவை பயிர் காப்பீடு: கடந்த 3 ஆண்டுகளாக பயிர்களுக்கு காப்பீடு பெற்றுத் தரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாமல்…
தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு அதன் பிறகும் அமைதியாகவே இருக்கிறார். தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசினோம். குஷ்பு இப்போது பாஜக-வில் தான் இருக்கிறாரா? பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜக-வில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது பாஜக-வில் என்ன பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் முக்கியம். பாஜக-வை மேம்படுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன வேலை செய்கிறேன் என்பது பாஜக-வில் இருப்பவர்களுக்கு தெரியும். தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை துறந்தீர்கள். ஆனால், அதன் பிறகும் தீவிர அரசியலில் ஈடுபட்டதாக தெரியவில்லையே? எனக்கு பாஜக-வில் கொடுத்த வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஊடகங்களில் ஒரு…
